Those who win hearts...
motivational storyImage credit - pixabay

மனதை வென்றவர்களே மகிழ்ச்சியில் திளைக்கின்றனர்!

Published on

ம் எண்ணங்களின் அடிப்படையிலேயே  நாம் யார் என்றும், நம்மால் என்ன முடியும் என்றும், நாம் சாதிக்க விழைவது என்ன என்றும் முடிவாகிறது.  சிறுவயது முதல் பல்வேறு காரணங்களினாலும் அனுபவங்கள் வாயிலாகவும் நம் எண்ண ஓட்டம் அமைகிறது. நாம் யார் என்று நாம் எண்ணுவதைக் காட்டிலும் மற்றவர்கள் நம்மைப் பற்றி தெளிவாக தெரிந்து வைத்துக் கொள்வர்

சரியான முறையில நம்மைப் பற்றி நாமே உணர்ந்து கொள்வதற்கும், தேவையான மாற்றங்களை நம்முள் ஏற்படுத்துவதற்கும் மனத் துணிவு தேவை. இதன் மூலம் வாழ்க்கைப் போராட்டங்களை எதிர்கொள்ள தயாராவோம். தோல்வியில் கூட மகிழ்ச்சியை இழப்பதில்லை. மகிழ்ச்சி நிறைந்த வாழ்க்கைக்கு துணிவு தேவை.  கோழை  தினமும் சாகிறான். மனதைக் கட்டுப்படுத்தவும், வெற்றி கொள்ளவும் துணிச்சலை கைக்கொள்ள வேண்டும்.

வாழ்வில் எதிர்கொள்ளும் பிரச்னைகளின் தன்மை எதுவாக இருந்தாலும், அதைப் புரிந்து கொள்ளும் விதத்தில்தான் வாழ்க்கை நேர்மறையாக நிலைக்கிறது, எதிர்மறையாக மாறுகிறது. நேர்மறையாக சிந்தித்து. செயல்படுவதால்  எதிர்கொள்ளும் பிரச்னைகள் வாழ்க்கையின் முன்னேற்றத்திற்கான ஊட்டச் சத்தாகிறது. மனம் செல்லும் பாதையில்தான் வாழ்க்கை செல்கிறது. மற்றவர்களுடன் நம்மை ஒப்பிட்டுப் பார்ப்பது மனமே. அதற்கு பதில், இதற்கு முன் நாம் எப்படி இருந்தோம்?.என்பதை அடிப்படையாக வைத்து இன்று நாம் எப்படி உள்ளோம் என்று நம் திறமையை நமக்கு சவாலாக்க வேண்டும். நாமே நமக்கு போட்டியாக வேண்டும். முன்னேறி உள்ளேன் என்ற எண்ணம் தினமும் விதைய முயற்சிகளை எடுக்க வேண்டும்.

இதையும் படியுங்கள்:
தோல்வியை மறந்து வெற்றியை நினையுங்கள்!

Those who win hearts...

ஒவ்வொரு பூவிற்கும் தனி மணமும் நிறமும்  உள்ளதுபோல் ஒவ்வொரு மனிதனுக்கும் தனித்துவம் உள்ளது. நமக்குள்ள தனித்துவத்தை நாமே மெச்ச வேண்டும். அது குறித்து மகிழ்ச்சி கொள்ளவேண்டும். மற்றவர்களின் தனித்துவம் நம்மை பொறாமைப் பட வைத்தால்  அது நம் மகிழ்ச்சி குன்றக்காரணமாகும். தேவையானவற்றை மட்டும் சிந்திக்கவும், உயர்ச்சி தரும் கருத்துக்களை மனதில் வைத்துப் பாராட்டவும், எதிர்மறை எண்ணங்களுக்கு விடை தரவும் மிக அவசியம். மனதை வென்றவர்கள் துணிவு பெற்றவர்கள் ஆகிறார்கள். அவர்கள் என்றுமே மகிழ்ச்சியாக இருக்கின்றனர்.

logo
Kalki Online
kalkionline.com