
நீங்கள் விமானத்தில் பறக்க வேண்டும் என்று கடவுள் விரும்பினால், நீங்கள் எளிதாக விமான நிலையம் செல்லவும் அவர் ஏற்பாடு செய்வார்.
- ஜார்ஜ் வின்டர்ஸ்
மனித சுபாவம் மிகவும் அற்புதமானது ஆயிரம் நன்மைகள் செய்துவிட்டு ஒரு தீமை செய்தால் போதும். ஆயிரமும் தீமைதான்.
- மாட்ரிட்
சிந்திப்பதுதான் மிகக்கடினமான வேலை, அதனால்தான் மிகச்சிலரே அந்த வேலையைச் செய்கிறார்கள்.
- ஹென்றி ஃபோர்ட்
உயர் வகுப்பில் "அல்ஜிப்ரா" கணக்கு பாட வகுப்பில் நீங்கள் ஒரு கணக்கிற்கு தீர்வு கண்டவுடன், உங்களுக்கு அடுத்த கணக்கை கொடுக்க உங்கள் ஆசிரியர் தயாராக இருப்பார். நமது வாழ்க்கையும் அது போலத்தான், ஒரு பிரச்னைக்கு தீர்வு கண்டவுடன், அடுத்தது வரும்.
-ஜேம்ஸ் டென்ட்
ஒரு பிரச்னை பற்றி உங்களுக்கு எவ்வளவு தெரியும் என்பது, நீங்கள் அது பற்றி பேச ஆரம்பித்த பிறகுதான் தெரியும்.
-லூயிஸ் எல் ஆர்மூர்
கோபம் வரும்போது உடனே வெளிக்காட்டாமல் அதை 24 மணி நேரம் தள்ளிப்போடு, அதன் பிறகும் கோபப்படுவது நியாயம்தான் என்று தெரிந்தால், அப்போது நிச்சயமாகக் கோபப்படு.
- ஜார்ஜ் குல்ஜிஃப்
எங்கே தடுக்கி விழுகிறீர்களோ அங்கேதான் உங்கள் புதையல் புதைந்து கிடக்கிறது.
-ஜோசப் கேம்பெல்
ஒருவனை யோக்கியமானவன் என்று முழுமனதுடன் ஒரு நாள் பொழுதில் தீர்மானித்து விடாதீர்கள், இரவு வரை பொறுத்திருங்கள்.
- ராபர்ட் சேம்பரிஸ்
பிறருக்கு பயன்படுகின்றவனின் வாழ்க்கை மெதுவாகத்தான் நகரும். சுயநலமுள்ளவன்தான் சுறுசுறுப்பாக போய்க்கொண்டிருப்பான். ரோடு இன்ஜின் மெதுவாக நகர்கிறது, கார் வேகமாக பறக்கிறதே!.
- நடிகர் நாகேஷ்
நல்ல விஷயங்களை யாரும் கிசு கிசுப்பது இல்லை.
-பெர்ட்ராண்ட் ரஸ்ஸல்
எல்லோருக்குமே அதிர்ஷ்டம் இருக்கிறது. அதை லாட்டரி சீட்டின் மூலம் மட்டுமே எதிர்பார்க்கக் கூடாது.
- யங்பெல்லோ
நேர்மையை எல்லோரும் பாராட்டுவார்கள். ஆனால், அதனை பட்டினி போட்டு விடுவார்கள்.
- ஜீவெனால்
அதிர்ஷ்டம் நம் வீட்டு கதவைத் தட்டும்போது, இதென்ன சப்தம் என்று நாம் குறைபட்டுக் கொள்கிறோம்.-
ஷிவ்கேரா
பணம் ஏழைகளிடம் கொஞ்சமாக இருக்கிறது. பணக்காரர்களிடம் அதிகமாக இருக்கிறது. ஆனால், யாரிடமும் போதுமான அளவு இருப்பதில்லை.
- பென் பிராங்க்ளின்
மனிதனால் காற்றில்லாமல் சில நிமிடங்கள் இருக்க முடியும். தண்ணீர் இல்லாமல் சில நாட்கள் இருக்க முடியும். உணவு இல்லாமல் சில வாரங்கள் இருக்க முடியும். மூளையில்லாமல் எத்தனை வருடங்கள் வேண்டுமானாலும் இருக்க முடியும்.
- மார்னே
உங்களுக்கு என்ன பிடிக்கிறதோ அதைச் செய்யுங்கள் ! அட்லீஸ்ட் உலகத்தில் ஒரே ஒருவரையாவது உங்களால் சந்தோஷப்படுத்த முடியும். அந்த ஒருவர் நீங்களாகத்தான் இருக்கட்டுமே.
- கேத்ரின் ஹேபல்
வயதாகிறதே என்று வருத்தப்படாதீர்கள் பலருக்கு அந்த வாய்ப்பு கிடைப்பதேயில்லை.
- ஜெர்மி டெய்லர்
கடவுள் வேர்க்கடலை தருவார்.ஆனால், உடைத்துத் தர மாட்டார்.
-ஆண்டி ரூனா
சின்ன கவலைகள் என்பது கொசுபோல ஓடியாடி வேலை செய்து கொண்டிருந்தால் அது பறந்து போய்விடும்.
- சுஸ்டாவ் ஒயிட்
விருந்தாளிகளை மிகவும் மகிழ்விப்பது -இரண்டே வார்த்தைகள்தான். ஒன்று அவர்கள் வரும்போது "இப்போதாவது வழி தெரிந்ததே". இரண்டு -கிளம்பும் போது "அதற்குள்ளேயா?".
- மேடம் நிகேமியர்
ஒரு மனிதன் யோக்கியனா! அயோக்கியனா! என்பதை தெரிந்துகொள்ள ஒரு நிச்சயமான வழி இருக்கிறது. நீ யோக்கியனா? என்று அவனைக் கேளுங்கள் "ஆமாம்"என்று அவன் சொன்னால் சுத்த அயோக்கியன்.
- க்ரூச் சோ மார்க்ஸ்
ஒருவன் உங்களைப் பண விஷயத்தில் ஏமாற்றினால், நீங்கள் உங்கள் பணத்திற்கு மிகப் பயனுள்ள பொருளை வாங்கியிருக்கிறீர்கள் என்று அர்த்தம் ஜாக்கிரதை புத்தி.
- ஷொபனேர்
இரண்டு நண்பர்களிடையே மத்தியஸ்தம் செய்ய நேரிட்டால் செய்யாதீர்கள், ஒரு நண்பனை இழப்பீர்கள். இரண்டு அன்னியர்களிடையே மத்தியஸ்தம் செய்ய நேரிட்டால் செய்யுங்கள், ஒரு நண்பன் கிடைப்பான்.
-மான்ட் ரூட் பிரபு