நேரத்தை வீணடிக்காதீர்கள்! வாழ்க்கையை மாற்றும் 15 அருமையான சூத்திரங்கள்!

தொழில் மற்றும் சொந்த வாழ்க்கையில் சிகரத்தை தொட உதவும் அத்தியாவசிய வழிகாட்டுதல்.
வெற்றி
வெற்றிGemini image
Updated on

1. நேரம்

பணம் பொருள் திருடுபவன் வயிற்றுப் பசிக்காக திருடுகிறான். ஆனால் நேரத்தை சரியாக பயன்படுத்தாதவன் நேரத்தை திருடுகிறவன் ஆகிறான். ஆகவே நேரத்தை வீணடிக்காதீர்கள்.

2. உறுதி செய்தல்

எப்பொருள் யார்யார் வாய் கேட்பினும் அப்பொருள்

மெய்ப்பொருள் காண்ப தறிவு – இது வள்ளுவர் வாக்கு அதேபோல எந்த செயல் செய்வதற்கு முன்பும் அதனை செய்யலாமா வேண்டாமா என உறுதி செய்து கொள்ள வேண்டும். ஆரம்பித்த பின் பின்வாங்குதல் நல்லதல்ல.

3. முயற்சி

நீர்நிலைகளில் அமரும் பறவையைப் படம் பிடிக்க வேண்டுமா? அதற்கு என்ன செய்ய வேண்டும்? படம் பிடிக்க வேண்டும் படம் பிடிக்க கேமரா தேவை அதற்கான உப பொருட்கள் தேவை அதைப் பெற முயற்சி மேற்கொண்டு வாங்கி தயார் நிலையில் வைத்து கொண்டுதானே பறவையைப் படம் பிடித்து பரவசம் அடைய முடியும். முயற்சி முக்கியம் பாஸ்.

4. தன்னம்பிக்கை

முதலில் தன்னம்பிக்கையை வளர்த்துக்கொள்ள வேண்டும். தாழ்வு மனப்பான்மை நமது மனத்திலிருந்து அகற்ற வேண்டும்.

5. இலக்குகள்

வனத்தில் வாழும் விலங்குகள் தங்களுடைய இலக்குகளை வைத்திருக்கின்றன. அதேபோல நாமும் இலக்குகளை நிர்ணயித்து வைத்துக்கொள்ள வேண்டும். அதற்கேற்ப செயல்பட வேண்டும்.

6. கற்றல் அதிகப்படுத்துதல்

அறிஞர்கள் படித்துக் கொண்டே இருப்பாரகள். அதே போல கற்றலை இடைநிறுத்தல் கூடாது வயது வரம்பு ஒரு தடை அல்ல.

7. மாற்றம்

எந்த நேரத்தில் எது நிகழும் என்பது இயற்கைக்கே தெரியும். ஆகவே தொழிலில் வாழ்க்கையில் மாற்றம் வந்தால் அதனை ஏற்றுக் கொள்ள தயாராக இருக்க வேண்டும்.

வெற்றி
வெற்றிGemini image

8. மனநிறைவு

வெற்றி வந்தால் குதிப்பதும். தோல்வி வந்தால் துவள்வதும் கூடாது. எந்த சூழ்நிலையிலும் மனநிறைவு இருக்க வேண்டும்.

9. அன்பு செலுத்துதல்

எல்லோரிடமும் அன்பு செலுத்தி பாருங்கள். அந்த இறைவனே உங்கள் இல்லம் தேடி வந்து உங்களுக்கு துணைப் புரிவார்.

10. வெற்றி பாதை

ஒரு ஊருக்கு செல்ல வேண்டுமென்றால் கூட கையில் வரைப்படம் வைத்துக் கொள்வார்கள். அதே போல நீங்கள் வெற்றியை எட்ட வேண்டுமானால் பாதையை நிர்ணயிக்க வேண்டும். அது பூ பாதையாக இருக்க வேண்டும்.

இதையும் படியுங்கள்:
சவால்களைச் சமாளிக்கும் மன உறுதி: இலக்கை அடைய உதவும் வழிகாட்டி!
வெற்றி

11. மனநிலை

நீங்கள் எப்பொழுதும் அமைதியான மனநிலையில் இருத்தல் வேண்டும். மனதில் பதட்டம், பயம் அல்லது குழப்பம் இருத்தல் கூடாது. அமைதி நிலையே உங்கள் விதியை தீர்மானிக்கிறது.

12. திறமைகள்

நீங்கள் ஓவியம் வரையலாம், பாட்டு பாடலாம், ஏன் நடனம் கூட ஆடலாம். எது உங்களுக்கு தலையாய திறமையோ அதில் முழுகவனம் செலுத்தி திறமையை மேலும் வளர்த்து கொள்ள வேண்டும்.

13. சகிப்பு தன்மை (ம) உறுதி தன்மை

எந்த தொழில் செய்தாலும், அல்லது பணி செய்தாலும் நாம் சகிப்பு தன்மை மற்றும் உறுதி தன்மையை வளர்த்து கொள்ள வேண்டும். சகிப்பு தன்மை இல்லாவிட்டால் மற்றவரிடம் வீணான சண்டை ஏற்படும். அதைத் தவிர்ப்பது நலமே.

இதையும் படியுங்கள்:
நிமிர்ந்து நில்! உங்களைப் போல வேறொரு நகல் கிடையாது: வெற்றிக்குத் தயாராகுங்கள்!
வெற்றி

14. செயல் திறனை நம்புதல்

முதலில் உங்களை நீங்கள் நம்ப வேண்டும். பின்பு நீங்கள் செய்யும் செயலை நம்ப வேண்டும். நம்பினால்தான் வெற்றி கிடைக்கும். நம்பாமல் செய்யும் அந்த செயல் வெற்றி பெறுவதற்கான வாய்ப்பை இழந்துவிடும்.

15. விடாமுயற்சி

சித்திரமும் கைப்பழக்கம் செந்தமிழும் நாப்பழக்கம் என்பது போல விடாமுயற்சியை விடாமல் மேற்கொண்டால் வாழ்க்கையிலும், தொழிலிலும் வெற்றி பெறலாம்.

படியுங்கள்…பின்பற்றி பாருங்களேன்….வெற்றி நிச்சயமே!

உங்கள் நேரத்தையும் ஆற்றலையும் சரியான திசையில் செலுத்தி, தோல்விகளைக் கண்டு துவளாமல் தொழில் மற்றும் தனிப்பட்ட வாழ்க்கையில் நிலைத்த மனநிறைவை அடைய முடியும்.

logo
Kalki Online
kalkionline.com