நிமிர்ந்து நில்! உங்களைப் போல வேறொரு நகல் கிடையாது: வெற்றிக்குத் தயாராகுங்கள்!

தனித்துவமே வெற்றியின் ரகசியம்! உங்கள் வாழ்க்கையை நீங்களே வடிவமைக்க ஒரு சிறு வழிகாட்டி.
வாழ்க்கை வெற்றி
வாழ்க்கை வெற்றிAI image
Updated on

வாழ்க்கையில் ஒவ்வொருவரும் எந்த எந்த விஷயத்தில் ஆழமாக சிந்தித்து செயல்பட வேண்டும் என்பதையும், எதை எதை அதன் போக்குக்கு விட்டு விடவேண்டும் என்பதையும் நன்கு உணர்ந்து செயல்படும் நன்மையை உங்களுக்குள் வளர்த்துக்கொள்ள வேண்டும்.

உங்களுக்கு ஒரு விஷயம் பிரச்னை வரும் என்று தெரிந்ததும், அதனை உடனடியாக தீர்வுக்கான முயலக்கூடாது. அதை பற்றியே சிந்தித்து உங்களுடைய நேரத்தை பாழ் பண்ணி விடக்கூடாது. அதனை கொஞ்சம் கிடப்பில் போட்டுவிடுங்கள். அதுவே தனது தீர்வை நோக்கி நகரும்.

நீங்கள் எப்போதும் பிரச்னைகளைப் பற்றியே சிந்தித்துக்கொண்டு இருந்தால் இன்னும் பிரச்னைகள் கூடிக்கொண்டுதான் போகும். தீர்வுக்கான விடயத்தை மட்டும் நீங்கள் சிந்தித்துப் பாருங்கள், நிறையவே வாய்ப்புகள் உங்கள் கண் முன்னே தோன்றும.

ஒவ்வொருவருக்கும் ஏதோ ஒரு திறமையை, நீஙகள் பிறக்கும் போதே இறைவனால் உங்களுக்கு கொடுக்கப்பட்டு இருக்கும். அதனை எப்படி தன் வாழ்க்கையில், நீங்கள் முறையாக பயன்படுத்தி, அதனை வெற்றிக்கான வைப்பது என்பதுதான் மிகவும் முக்கியம்.

உறுதியான முடிவுகள் வாழ்க்கை வெற்றிக்கு வழிவகுக்கும்

வாழ்க்கையில் எந்த செயலுக்கும் தன்னுடைய ஸ்திரத்தன்மையும், தன்னம்பிக்கையும் இருக்க வேண்டுமே தவிர, இரண்டாவது நபரின் குறுக்கீடு இருக்கக்கூடாது. அதேமாதிரி செயல் வடிவத்தில் இருக்கும்போது, ஒருபோதும் மனக்கோட்டை கட்டக்கூடாது. தயவுசெய்து தவிர்க்கவும்.

வாழ்க்கை வெற்றி
வாழ்க்கை வெற்றிAI image

வாழ்க்கையில் தன்னுடைய தடங்கள் பதியும்போது, மனதில் உறுதியும், துணிவும் இருக்கவேண்டும். அப்போதுதான், நீங்கள் எந்த திசையில் பயணிக்க வேண்டும் என்று நினைக்கும் எண்ணங்களை மனதில் நிலைத்து நின்று, இலக்கை நோக்கி பயணித்து, வெற்றிக்கு வித்திடும் நிலை உருவாகும்.

இதையும் படியுங்கள்:
ஓவர் புத்திசாலியா இருந்தா இதுதான் பெரிய பிரச்சனையா... பலரும் அறியாத பகீர் உண்மை!
வாழ்க்கை வெற்றி

வாழ்க்கையில் நல்ல சந்தர்ப்பம் வரும் போதும், நல்ல வாய்ப்பு வரும் போதும் கற்பூரம் பிடித்துக்கொள்வது மாதிரி, நீங்களும் வரும் வாய்ப்பை கெட்டியாகப் பிடித்துக் கொண்டால்தான், நீங்கள் முன்னேற்றம் காணும் வழி கிடைக்கும். அதுதான் உங்களை அடுத்தக்கட்ட நகர்வுகளை நோக்கி நகரவும் செய்யும்.

சிலை ஆகும் கற்களுக்குத் தான் தெரியும், தன்னை செதுக்கிய உளி, தனக்கு கொடுத்த வலியின் வேதனை. காயப்படாத மூங்கில்கள் ஒருபோதும் இசை கொடுக்கும் புல்லாங்குழல் ஆவதில்லை. அதேமாதிரிதான் வலி ஏற்படுத்தாத வாழ்க்கை ஒருபோதும் வரலாறு படைக்க முடியாது என்பதை புரிந்துகொள்ளுங்கள். அப்போதுதான் வாழ்க்கையில் எதையும் சமநிலையில் எதிர்கொள்ளும் மனம் பக்குவம் அடையும்.

வாழ்க்கையில் ஒருவருக்கும் காலம் பலவற்றை கற்றுக்கொடுத்துக் கொண்டேதான் இருக்கும். அவற்றை நீங்கள் எப்படி எடுத்துக்கொண்டு செயலாற்ற முயல்கிறீர்கள் என்பதைப் பொறுத்து அதன் தன்மையும், தாக்கமும் மாறுபடும். ஆகவே எதையும் சாதித்து விட வேண்டும் என்ற உயர்வோடு செயலாற்றுங்கள்.

இதையும் படியுங்கள்:
உங்கள் விதி உங்கள் கையில்: வெற்றியை ஈர்க்கும் 6 உளவியல் விதிகள்!
வாழ்க்கை வெற்றி

தனித்துவமே வாழ்க்கை வெற்றிக்கான முக்கிய திறவுகோல்

வாழ்க்கையில் தனித்துவம் என்பது ஒவ்வொரு மனிதனுக்கும் உயிர் மூச்சாக இருக்கவேண்டும். யாருக்கும் நீங்கள் அடிமையாகி விடக்கூடாது. உடலுக்கும், வாழ்வதற்கும் முதுகெலும்பு மிகவும் அவசியம். ஏனெனில் நிமிர்ந்து வாழ்வதும் தலை நிமிர்ந்து வாழ்வதும் மிகவும் அவசியம்.

ஏனென்றால் உங்களைப்போல் வேறொரு நகல் கிடையாது. உங்களைப்போல், நீங்கள் மட்டும்தான். உள்ளமும் உடலும் ஒன்றி ஒவ்வொருவரும் செயலில் ஈடுபட்டால் வெற்றி நிச்சயம்!

உங்களை மற்றவர்களுடன் ஒப்பிடாமல், உங்கள் உள்ளார்ந்த திறமைகளை அடையாளம் கண்டு செயல்படும்போது, எந்தச் சூழலிலும் கலங்காத மன வலிமையையும், உங்கள் வாழ்வின் ஒவ்வொரு கணத்தையும் அர்த்தமுள்ளதாக மாற்றும் திறனையும் பெறுவீர்கள்.

logo
Kalki Online
kalkionline.com