நேரம் – காலம் – முயற்சி - உறுதி அனைத்தும் முன்னேறுவதற்கு அவசியம் தேவை!

Motivation article
Motivation articleImage credit - pixabay
Published on

மது ஆற்றலை பயன்படுத்த பயன்படுத்த அது ஆலமரம்போல விழுது விட்டு கிளைகள் செழித்து விரிந்து வளர்ந்து ஓங்கும். முன்னேற்றம் காண இந்த முறைகள் மிகவும் உதவியாக இருக்கும். ஆணியை உள்ளே இறக்க ஒரு முறை அடித்தால் போதாது. பலமுறை அடிக்க வேண்டும். எடுத்த செயலை ஆர்வத்தோடும் பரபரப்போடும் செய்து முடிப்பது சிறப்பு. செய்வது எதுவாக இருந்தாலும் திருத்தமாக பொருத்தமாக செய்து முடிக்கவேண்டும். ஒரே நேரத்தில் ஒரு செயலில் அதை ஒழுங்காக செய்து முடிக்க முயலவேண்டும்.

பயமில்லாமல் இருப்பது, தெளிந்த, மனம், நல்லெண்ணம், புலனடக்கம் அன்றாட காரியங்களை முறைப்படி செய்வது, கடமையை செம்மையுடன் செயலாற்றுவது இவை யாவும் முன்னேறுவதற்கு தூது செல்லும் தூதர்களாகும். கடிகாரத்தில் கழியும் ஒவ்வொரு வினாடியும் முன்னேறு முன்னேறு என்று அறிவிப்பு விட்டுக்கொண்டே இருக்கும்.

எடுத்துக்கொண்ட பணியை நிறைவேற்ற செயலிலே இறங்கத் தூண்டும் உணர்வுக்குப் பெயர்தான் உற்சாகம். நம்முடைய செயலில் உற்சாகம் கூடிவிட்டால் வேலையின் பளு தெரியாது. மலைப்பும் தட்டாது. உற்சாகமுள்ள உள்ளத்தில் உயிர்துடிப்பு இருக்கும் உறுப்புகள் களைப்பில்லாமல் பணி செய்யும்.

நேரமும் காலமும் முயற்சியும் உறுதியும் திட்டமும் முன்னேறுவதற்கு மிகவும் தேவை. உயர்ந்த நிலையை எட்டிப் பிடிக்கக் கொண்ட குறிக்கோளிலே கவனமும் செயல் முடியும் வரை விடாத உறுதியும் இருந்துவிட்டால் போதும் முன்னேறுவது உறுதி.

தயக்கத்தை விட்டொழித்து முன்னேறும் வழியில் ஈடுபட்டு வெற்றி பெறுவதே குறிக்கோள் என்ற ஆர்வத்தை உண்டாக்கி கொண்டால் உயர்வடைந்து வெற்றி பெற இயலும்.

இதையும் படியுங்கள்:
மனச்சோர்விற்கான மாமருந்து எது தெரியுமா?
Motivation article

பகுத்தறியும் சக்தியின் அடிப்படையிலேயே வாழ்க்கையை பயனுள்ளதாக ஆக்கிக் கொள்ள முடியும். இந்த சக்தி வளர்வதற்கு அறிவு காரணமாக அமைகிறது. அறிவு வளர்ச்சிக்கு முயற்சியும் பயிற்சியும் வேண்டும். பயன் தரும் ஆசையே செயலை தூண்டும் திரும்பிப் பார்க்கச் சொல்லாது. எடுத்த முடிவை முன்னேற்றி நிறைவேற்றி முன்னேறிப் போகச் சொல்லும்.

உள்ள வலிமையும், உண்மையில் பற்றும், உற்சாக செயலில் ஈடுபடும் திண்மையும் சேர்ந்தவர்களுக்குதான் வாழத்தகுதியுண்டு. வாழ்வில் வெற்றி உண்டு என்று உற்சாகமூட்டுகிறார் பாரதியார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com