
முதலில் நான் சொல்ல விரும்புவது, நேரத்தின் முக்கியத்துவம் பற்றி பலர் அறிவதில்லை. மேலும் சிலர் நேரத்தை தவறாகப் புரிந்துகொள்கிறார்கள்.
நீங்கள் என்றாவது உங்களின் நேரம் வீணாகிவிட்டதே எனக் கவலைப்பட்டதுண்டா?
ஒருவேளை நீங்கள் அப்படி கவலைப்பட்டிருந்தால், You are in progressing phase. உங்களுக்கு வாழ்த்துக்கள்.
கண்டிப்பா ஒரு நாள் இல்ல ஒரு நாள், உங்களுக்குப் பிடிச்ச மாற்றங்கள் உங்களுடைய வாழ்க்கையில் உண்டாகும்.
Please, கையில் ஒரு கால்குலேட்டர் எடுத்துக் கொள்ளுங்கள். உங்களுக்கு அறிவுரையாக சில விஷயங்களை கூறுவதைவிட, நேரம் வீணாவதன் உண்மையை தெளிவுபடுத்தி விட்டால், நீங்களாக புரிந்துகொண்டு செயல்படுவீர்கள்.
ஒரு வருடத்திற்கு 365 நாட்கள்.
365×24=8760 மணி நேரம் உங்க கைல இருக்கு.
ஒரு வாரத்துல் தோராயமா 50 மணி நேரம் வேலைக்காக செலவிடுறீங்கன்னு வச்சுப்போம். அப்போ ஒரு வருஷத்துல 52 வாரத்திற்கு, 52×50=2600 மணி நேரம்.
டெய்லி 8 மணி நேரம் தூங்குவீங்க 8×365= 2920 மணி நேரம்.
இந்த ரெண்டு விஷயங்கள் நம்ம வாழ்க்கையில கட்டாயம் தேவையான ஒன்னு. என்ன நடந்தாலும் இத செஞ்சுதான் ஆகணும். நம்மளால ஒரு போதும் இத தவிர்க்க முடியாது.
So, 8760-2600-2920= 3240 மணி நேரம் மீதம் நம்ம கையில இருக்கு. Oh My God நாம வேலை செய்ற, தூங்குற நேரத்தை விட, நம்மளால நமக்கு பிடிச்ச வகையில் கட்டுப்படுத்த முடிஞ்ச நேரம் 38% அதிகமா இருக்கு.
இந்த 3240 மணி நேரத்த நீங்க சரியா பயன் படுத்திக்கிட்டாலே, எதிர்காலத்துல உங்க வேலைய பறிக்கப்போகும் எந்த விஷயங்களா இருந்தாலும் அதிலிருந்து தப்பிக்க முடியும்.
இல்ல நான் தினமும் 8 மணி நேரம்தான் வேலை செய்வேன். அதுக்கு மேலே ஒண்ணும் பண்ண மாட்டேன்னு சும்மா இருந்தா, உங்க தலையெழுத்த யாரும் மாத்த முடியாது. கடைசி வரைக்கும் அது கிடைக்கல, இது கிடைக்கலன்னு புலம்பியே சாக வேண்டியதுதான்.
கிடைச்சது ஒரு லைஃப், அடிமட்டம் வரைக்கும் இறங்கி உங்களோட முழு பலம் என்னன்னு தான் ஒருமுறை சோதிச்சி பாருங்களேன்.
எதிர்காலத்துல எது வேணும்னா நம்ம வேலையைப் பறிக்கட்டும். எல்லாத்தையும் எதிர்கொள்ள நாம நம்மல தயார்படுத்திக் கொள்வதுதான் நம்மளால பண்ண முடிஞ்சது.
எனவே நேரத்தை சரியாகப் புரிந்துகொண்டு, நமக்கு கூடுதலாய் உள்ள நேரத்தை திறம்பட பயன்படுத்துவோம்.