தள்ளிப்போடும் பழக்கத்திற்கு முற்றுப்புள்ளி! உங்கள் இலக்குகளை நோக்கி நகர்த்தும் 4 எளிய சூத்திரங்கள்!

To do later
To do later
Published on

தள்ளிப்போடும் பழக்கம் (Procrastination) என்பது சோம்பேறித்தனம் அல்ல; அது பெரும்பாலும் பயம் மற்றும் பதற்றத்தின் விளைவே. ஒரு வேலையைத் தொடங்கவோ அல்லது முடிக்கவோ முடியாமல் மனம் போராடுவதுதான் இதற்குக் காரணம். வெற்றிக்கும் உங்களுக்கும் இடையே இருக்கும் இந்த பயத்தை உடைக்க, இந்த 4 எளிய வழிகளை பின்பற்றுங்கள்.

1. The 5-Minute Rule ( '5 நிமிட விதி')

ஒரு பெரிய இலக்கோ அல்லது கடினமான வேலையோ உங்களுக்கு மலைபோல் தோன்றும் போதுதான் தள்ளிப்போடும் பழக்கம் ஆரம்பிக்கும். இந்தச் சவாலை எதிர்கொள்ள, '5 நிமிட விதி'யைப் பயன்படுத்துங்கள்.

"நான் இந்த வேலையை வெறும் 5 நிமிடங்கள் மட்டும் செய்வேன். அதன் பிறகு நிறுத்திவிட எனக்கு உரிமை உண்டு." என்று நினைத்துக்கொள்ளுங்கள்.

நீங்கள் வேலையைத் தொடங்கிவிட்டால், பெரும்பாலும் 5 நிமிடங்களுக்குப் பிறகு அதைத் தொடரவே உங்கள் மூளை விரும்பும். வேலையை ஆரம்பித்துவிட்டால், பிறகு அதில் எவ்வளவு தூரம் போகிறோம் என்பதே தெரியாத அளவிற்கு வேலை செய்வோம். பெரிய வேலையைத் தொடங்குவதற்கான அந்த மனத் தடையை இந்தச் சிறிய தொடக்கம் உடைத்துவிடும்.

2. வேலையைச் சிறிய பகுதிகளாக உடைத்தல் (The Chunking Formula)

'முழு புத்தகத்தையும் படித்து முடிப்பது' போன்ற பெரிய பணிகளை நினைத்துப் பார்க்கும்போதே மூளை சோம்பேறியாகிவிடும். ஏனென்றால், அது மிகப்பெரிய சுமையாகத் தோன்றும்.

  • உதாரணமாக 'வீட்டைச் சுத்தம் செய்ய வேண்டும்' என்பதற்குப் பதிலாக, 'சமையலறை செல்ஃபை துடைக்க வேண்டும்' என்று மாற்றுங்கள்.

  • 'கட்டுரை எழுத வேண்டும்' என்பதற்குப் பதிலாக, 'கட்டுரையின் முதல் பாராவை மட்டும் எழுத வேண்டும்' என்று மாற்றுங்கள்.

ஒவ்வொரு சிறிய பகுதியையும் முடிக்கும்போது கிடைக்கும் உடனடி திருப்தி, அடுத்த பகுதிக்கு உங்களைத் தானாகவே நகர்த்தும்.

இதையும் படியுங்கள்:
பொறுமையே வெற்றி: ஆமைக் கோட்பாடு கூறும் வாழ்க்கை நியதிகள்!
To do later

3. அவசரம் + முக்கியத்துவம் = உடனடி செயல் (Urgency + Importance = Immediate Action)

எல்லாப் பணிகளும் சமமானவை அல்ல. எதை முதலில் செய்வது என்பதில் குழப்பம் வரும்போதுதான் காலதாமதம் அதிகரிக்கிறது. ஐசன்ஹோவர் மேட்ரிக்ஸ் (Eisenhower Matrix) இந்தச் சூத்திரத்திற்கு உதவுகிறது.

மிக முக்கியமான மற்றும் அவசரமான வேலையை மட்டும் முதலில் செய்யுங்கள்.

முக்கியமில்லாத மற்றும் அவசரம் இல்லாத பணிகளுக்காக உங்கள் நேரத்தை வீணடிக்காதீர்கள். இது உங்கள் கவனத்தை நீங்கள் எதில் செலுத்த வேண்டும் என்பதைத் தெளிவாகக் காண்பிக்கும்.

4. வெகுமதி மற்றும் தண்டனை (The Reward & Consequence System)

வெற்றிக்குப் பின் கிடைக்கும் திருப்திதான் நம்மைத் தொடர்ந்து வேலை செய்யத் தூண்டும். தள்ளிப்போடும் பழக்கத்தைக் கட்டுப்படுத்த இது ஒரு சிறந்த உளவியல் நுட்பம்.

"நான் இந்தப் பணியை முடித்தால், எனக்குப் பிடித்த ஒரு விஷயத்தைச் செய்வேன். நான் முடிக்கவில்லை என்றால், எனக்குப் பிடித்த ஒரு விஷயத்தை மறுப்பேன்."

இதையும் படியுங்கள்:
பூரி அதிகம் எண்ணெய் உறிஞ்சாமல் இருக்க... நீங்கள் செய்ய வேண்டிய எளிய டிப்ஸ்!
To do later

உங்களுக்குப் பிடித்த காபி குடிப்பது அல்லது சிறிது நேரம் பாடல் கேட்பது போன்றவற்றை வெகுமதியாக நீங்கள் பணி முடித்தவுடன் வழங்குங்கள். இது உங்கள் மூளையில் டோபமைனை வெளியிட்டு, அடுத்த பணியைத் தொடங்க உற்சாகம் அளிக்கும்.

இந்த 4 சூத்திரங்களையும் உங்கள் அன்றாட வாழ்க்கையில் பின்பற்றும்போது, தள்ளிப்போடும் பழக்கத்தை விடுத்து, உங்கள் இலக்குகளை நோக்கி உறுதியாக முன்னேறுவீர்கள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com