உங்கள் குழந்தைகளின் சுய ஊக்கம் வளர...

motivation article
motivation articleImage credit - pixabay

னுபவத்திலிருந்து பாடம் கற்றுக் கொள்வதுதான் சுய உந்துதலை ஊக்கப்படுத்த முக்கிய வழியாகும். இன்றைய காலத்தில் வளரும் குழந்தைகள் அனைவருடனும் போட்டி போட்டு வளர்கின்ற ஒரு சூழ்நிலைக்கு தள்ளப் பட்டுள்ளனர். அவர்கள் வாழ்வில் எந்த நிலைக்கு சென்றாலும், யாரேனும் ஒருவரோடு போட்டி போட்டுதான் தனக்கான இடத்தை பிடிக்க வேண்டிய நிலை உண்டாகியுள்ளது. 

சில சமயங்களில் அவர்கள் மேற்கொள்ளும் சில முயற்சிகள் தோல்வியிலும் முடியலாம். ஆனால் இதுபோன்று விஷயங்களுக்கு எல்லாம் அவர்கள் மனம் துவண்டு போய்விடக்கூடாது. எவ்வளவுதான் பாதிப்புகள் கஷ்டங்கள் வந்தாலும் அதிலிருந்து தானாகவே மீண்டு எழுந்து தன்னுடைய இலக்கை நோக்கி செல்ல வேண்டும்.

இதுபோன்ற குணாதிசயங்களை பெறுவதற்கு குழந்தைகள் தன்னைத்தானே ஊக்குவித்துக் கொண்டு தன்னுடைய இலக்கை நோக்கி நடப்பவராக இருக்க குழந்தைகளை சுய உந்துதல் உடையவர்களாக வளர்ப்பதில் பெற்றோர்களின் பங்கு முக்கியமானதாக உள்ளது. 

ஒரு பெற்றோர் தன் குழந்தைக்கு கற்றுக் கொடுக்க வேண்டிய முக்கிய குணநலன்களில் இந்த சுய உந்துதலும் ஒன்றாகும். இதை பெற்றோர் தங்களுடைய குழந்தைக்கு சரியாக கற்றுக் கொடுத்து விட்டால் குழந்தைகள் தங்களுடைய வாழ்க்கையை தாங்களே பார்த்துக் கொள்வார். இவ்வாறு பெற்றோர் சுய உந்துதலுடன் குழந்தைகளை வளர்ப்பதற்கு சில எளிய வழிமுறைகளை பின்பற்றினாலே போதுமானது.

குழந்தைகளுக்கு சுய உந்துதலை கற்றுக் கொடுக்க முதலில் அவர்களுக்கு எட்ட கூடிய ஒரு இலக்கை நிர்ணயிக்க வேண்டும். மேலும் அந்த இலக்கை அடைவதற்கு அவர்களாகவே திட்டங்களை தீட்டி அந்த இலக்கை நோக்கி செல்லும் வகையில் ஊக்கப்படுத்த வேண்டும்.

இவ்வாறு செய்யும்போது குழந்தைகள் எந்த விஷயத்தை முதலில் செய்ய வேண்டும் என்றும், ஒருவேளையின் முக்கியத்துவத்தை பற்றியும் நன்றாக அறிந்து கொள்வர். ஒருவேளை அவர்கள் இலக்கை நோக்கி செல்வதில் கஷ்டப்படும் பட்சத்தில் சிறிய உதவிகளை செய்து அவர்களை ஊக்கப்படுத்தலாம்.

எப்போதும் ஒரு இலக்கை அடைவதற்கு செய்ய வேண்டிய முயற்சியை பற்றி கற்றுக்கொடுக்க வேண்டும். அதன் முடிவு எப்படி வேண்டுமானால் இருக்கட்டும். ஆனால் நம்மால் முடிந்த 100% உழைப்பையும் முயற்சியையும் நாம் அளிக்க வேண்டும்.

அனுபவத்திலிருந்து பாடம் கற்றுக் கொள்வதுதான் சுய உந்துதலை ஊக்கப்படுத்த முக்கிய வழியாகும். தங்களுடைய செயல்களுக்கு தாங்கள்தான் பொறுப்பு என்பதை குழந்தைகளுக்கு பெற்றோர் சிறு வயதிலேயே கற்றுக் கொடுக்க வேண்டும்.

இதையும் படியுங்கள்:
மன உறுதியை அதிகரித்து வெற்றி பெற 4 எளிய வழிகள்!
motivation article

உங்கள் பிள்ளைகளின் செயல் திறனை பற்றியும் நடத்தைகளை பற்றியும் அவர்களிடம் தெளிவாக பேசி புரியவைக்க வேண்டியது அவசியம். இதன் மூலம் அவர்களுக்கு தங்களைப் பற்றியும் பெற்றோர் தங்களிடம் என்ன எதிர்பார்க்கிறார்கள் என்பது பற்றி தன்னுடைய வளர்ச்சியிலும் அவர்கள் கவனம் செலுத்த முடியும்.

தங்களுடைய சொந்த வாழ்க்கையை முடிவு செய்வதற்கும், பிடித்த விஷயங்களை செய்வதற்கும் அவர்களுக்கு தேர்ந்தெடுக்கும் உரிமையை கொடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் பிடித்து தேர்ந்தெடுத்த ஒரு செயலை செய்யும்போது அவர்களின் அனைத்து வித விளைவுகளுக்கும் அவர்களே பொறுப்பு ஏற்றுக் கொள்வார்கள். முதல் ஏதேனும் தவறு நடந்தாலும் தாங்கள் தவறுக்கு தாங்கள்தான் பொறுப்பு என்பது உணர்ந்து அதை சரி செய்ய முயற்சி செய்வார்கள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com