
வாழ்க்கையில் வெற்றி பெற, அதிர்ஷ்டம் தேவையில்லை. செய்வதை முறையாகச் செய்தால் வெற்றி பெறலாம். பகடை பன்னிரெண்டு எப்பொழுது விழும்? எப்பொழுதாவது அதிர்ஷ்டம் இருந்தால்தானே! ஆம், நம்மில் பலரும் அப்படித்தான் நினைத்துக் கொண்டிருக்கிறோம். அது அப்படியில்லை.
எதையும் சரியாகச் செய்வதற்கு என்று குறிப்பிட்ட வழிகள் உண்டு. அதைக் கண்டுபிடிக்க வேண்டும். கண்டுபிடித்தபின், அதைச் செய்யப் பயில வேண்டும். ஒருமுறை செய்தால் போதாது. எப்பொழுதும் அதே போலச் செய்ய, பழகவேண்டும். இதனைப் பிராசஸ் கேப்பிளிட்டி' (Process Capability) என்கிறார்கள்.
உயரத்தில் கட்டிய கயிற்றின்மீது நடப்பவன், தினம் தினம் அதன்மீது தடுமாறாமல் நடக்கிறானே, அவன் அதிர்ஷ்டத்தினை நம்பியா நடக்கிறான். இல்லை. அவன் ஒருமுறை கண்டுபிடித்து, அதைப் பயிற்சி செய்து, அதனால் வெற்றிகரமாக விழாமல் நடக்கிறான்.
இது எல்லா செயல்களுக்கும் பொருத்தமானதுதான். அதாவது 'காஸ் 'அண்ட் 'எபெக்ட் 'அட்டவணை ஒன்றை உருவாக்கிக்கொண்டு அதன்படி செய்தால் பழக்கம் வழக்கமாகிவிடும்.
எல்லாம் நமக்கு ஏற்கெனவே தெரிந்ததுதான், 'காஸ்' (Cause) என்றால் காரணம்' அதேபோல 'எபெக்ட் (Effect) என்பதும் தமக்குத் தெரியும், விளைவு' இவை இரண்டுக்கும் இடையே தொடர்பு இருக்கிறது.
இன்ன காரணத்தினால் இது நடக்கிறது என்கிற தொடர்பு இருக்கிறது என்கிற விஷயம்தான். கண்ணாடிமீது ஏதாவது கனமான பொருள் மோதினால், கண்ணாடி உடையும், இதில் மோதல் என்பது காரணம், உடைதல் என்பது விளைவு அதேபோல, 'பிரேக் போடுதல் காரணம், ஒடிக்கொண்டிருக்கும் வண்டி நின்று விடுதல் விளைவு. இப்படிப் பலவற்றுக்குள் ஒரு ரிலேஷன்ஷிப் (தொடர்பு) இருக்கிறதல்லவா?
சிலவற்றுக்கு இடையே இப்படியுள்ள உறவு வெளிப்படையாகத் தெரியும். வேறு சிலவற்றுக்கு விளைவு எளிதாகத் தெரிந்துவிடாது. நாம்தான் கண்டுபிடித்துக் கொள்ள வேண்டும்.
அதாவது இப்படிப்பட்ட 'விளைவு' எபெக்ட் தேவை. அதன் போக்கில் விட்டால் சில சமயங்களில் அந்த விளைவு கிடைக்கும்; பல சமயங்களில் கிடைக்காது. அப்படி, அதன் போக்கில்விடாமல், வேண்டுகிற விளைவினை நிச்சயமாக்குவது எப்படி?
விளைவுகள் நிகழ்ந்த பிறகு தெரியும், அதற்கான காரணங்களை முன்கூட்டியே தெரிந்துகொள்ள முடியுமா என்ன? முடியும். அதற்குச் சிலவற்றைச் செய்து பார்க்கவேண்டும்.
சரியான அணுகுமுறை, செய்து முடிக்கத்திட்டம், ஒவ்வொன்றாகச் செய்து பார்த்த பொறுமை, செய்து பார்த்ததில் ஒழுங்கு, கிடைத்த முடிவுகளை முறையாகக் குறித்துக்கொண்டு ஆவணப்படுத்துதல். கிடைத்த தகவல்களை ஆராய்ந்து முடிவு எடுத்தல், பின் அதைத் தேவையான அளவு பயன்படுத்துதல் -இவைதான் ஒவ்வொருவரையும் வெற்றி பெற வைக்கிறது.
இப்படி பயிற்சி மேற்கொள்பவர்கள் எத்தனை முறை செய்தாலும் சரியாகவேதான் செய்வார்கள். காரணம், செய்முறைத்திறன். 'பிராசஸ் கேப்பிளிட்டி' வந்துவிட்டால் தவறு நிகழ வாய்ப்பில்லை.
இந்த வழிமுறை வாழ்க்கை, வியாபாரம், தொழில் எல்லாவற்றிலுமே இப்படிச் செய்ய முடியும்.