மனித வாழ்வில் விளைவுகளை ஏற்படுத்தும் இரண்டு விதமான சிந்தனை அமைப்புகள்!

Thought systems
Thought systems

ஒவ்வொரு மனிதனுக்கும் இரண்டு விதமான சிந்தனை அமைப்புகள் உள்ளன. ஒன்று உள்ளுணர்வு சிந்தனை. மற்றொன்று பகுத்தறிவு சிந்தனை.முதலாவது வேகமான சிந்தனை அமைப்பு. உள்ளுணர்வு சொல்லும்படி நடக்கும். உணர்ச்சிகரமானது. பகுத்தறிவு சிந்தனை மெதுவாக செயல்படும் மற்றும் தர்க ரீதியின் அடிப்படையில் சிந்திக்கும். இந்த இரண்டு வகையான சிந்தனை அமைப்பின் பலம் மற்றும் பலவீனங்களை அறிந்து கொள்வோம்.

1. உள்ளுணர்வு சிந்தனை

வேகம்: இது மிக விரைவாக செயல்படுகிறது. அதிகமாக ஆலோசனை செய்யாமல் உடனடியாக முடிவெடுக்க அல்லது செயல்பட ஒருவரை தூண்டுகிறது.

செயல்திறன்: இது உணர்ச்சிகளுக்கு முக்கியத்துவம் தருவதால் குறைந்தபட்ச அறிவாற்றல் வளங்களை பயன்படுத்துகிறது. இது மனரீதியாக செயல்படுகிறது

அனுபவம் சார்ந்தது: பெரும்பாலும் கடந்த காலத்தின் வடிவங்கள் அல்லது அனுபவங்களை நம்பி இருக்கிறது. உள்ளுணர்வு சிந்தனை பிரச்சனைகளையோ சிக்கல்களையோ முழுமையாக மறுமதிப்பீடு செய்யாமல் செயல்பட உதவுகிறது. கடந்த கால செயல்பாடுகள் மற்றும் அனுபவங்களின் அடிப்படையில் அது செயல்படுகிறது.

பிழை ஏற்படுத்தக் கூடியது: இந்த சிந்தனை விரைவாக முடிவெடுக்கும் திறன் கொண்டது. உள்ளுணர்வு சார்ந்து சிந்திப்பதால், பின் விளைவுகளைப் பற்றி யோசிக்காமல் செயல்பட வைக்கும். அதனால் அறிமுகம் இல்லாத புதிய சூழ்நிலைகளில் சில நேரங்களில் தவறுகளுக்கு வழிவகுக்கும்

உணர்ச்சி ரீதியான உந்துதல்: இந்த வகையான சிந்தனை, உணர்ச்சிகளை அதிகம் பாதிக்கின்றன. ஆபத்தான சூழ்நிலைகளில் உள்ளத்தை நம்புவது அதாவது உணர்ச்சிகளின் அடிப்படையில் முடிவெடுப்பது தீங்கு விளைவிக்கும்.

2. பகுத்தறிவு சிந்தனை

அதிக நேரம் எடுத்துக் கொள்ளும்: இந்த வகையான சிந்தனை அதிக நேரத்தை எடுத்துக் கொள்ளும். ஏன் என்றால் இந்த சிந்தனை அறிவாற்றல் வளங்களின் அடிப்படையில் செயல்படுகிறது. சில நேரங்களில் முக்கியமான சூழ்நிலைகளில் விரைவாக முடிவெடுக்க முடியாமல் போகும்.

உணர்ச்சிகளின் குறைந்த தாக்கம்: இது உணர்ச்சிகளை விட அறிவாற்றலை அடிப்படையாகக் கொண்டு செயல்படுவதால் பகுத்தறிவு மற்றும் புறநிலையை நோக்கமாகக் கொண்டிருக்கிறது. இது தகவல்களை விமர்சன ரீதியாக ஆராய்ந்து பல்வேறு விருப்பங்களின் நன்மை தீமைகளை எடை போட்டு செயலாற்ற அனுமதிக்கிறது. உணர்ச்சிகள் அல்லது சார்புகளை காட்டிலும் உறுதியான சான்றுகள் மற்றும் பகுத்தறிவின் அடிப்படையில் முடிவுகள் எடுக்கப்படுவதற்கு உதவுகிறது.

சிக்கல்களை தீர்க்கிறது: பகுத்தறிவு சிந்தனை சிக்கலான பிரச்சனைகளை சமாளிக்க உதவுகிறது. ஒரு பெரிய பிரச்சினையை சிறு சிறு பகுதிகளாக பிரித்து பிரச்சனைகளின் மூல காரணங்களை கண்டறிந்து தர்க்கரீதியான தீர்வுகளை உருவாக்க உதவும்.

முடிவெடுக்கும் திறன்: பகுத்தறிவு சிந்தனை ஒருவரை உடனடியாக முடிவெடுக்க தூண்டுவதில்லை. முதலில் எண்ணங்களை ஒழுங்கமைக்கவும் அவற்றை தர்க்கரீதியாக உபயோகிக்கவும் உதவுகிறது. பல்வேறு சான்றுகள், சாதக பாதகங்ககளை அலசி ஆராய்ந்து, விளைவுகளையும் திறம்பட யோசித்து, பின்னரே முடிவெடுக்க வைக்கும்.

இதையும் படியுங்கள்:
Adaptogens: மன அழுத்தத்தைக் குறைக்கும் மூலிகைகள்! 
Thought systems

மன அழுத்தம் மற்றும் பதற்றத்தை குறைத்தல்: உணர்ச்சி ரீதியாக அல்லாமல் அறிவு ரீதியாக செயல்படுவதால் பிரச்சனைகளை மதிப்பிடுவதற்கும் தீர்ப்பதற்கும் ஒரு கட்டமைக்கப்பட்ட வழியை வழங்குவதன் மூலம் மன அழுத்தத்தையும் பதட்டத்தையும் குறைக்கிறது. மேலும் நிச்சயமற்ற தன்மை மற்றும் தெளிவின்மையை குறைக்கிறது.

ஒருவர் இந்த இரண்டு விதமான சிந்தனைகளின் பலம் மற்றும் பலவீனங்களை நன்றாக அறிந்துகொண்டு, சூழ்நிலைகளுக்கு ஏற்ப நடந்து கொள்வது நன்மை பயக்கும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com