எட்டாத உயரத்தை எட்டிப்பிடித்து மக்கள் மனதை வென்ற வினேஷ் போகத்..!

Vinesh phogat Journey
Vinesh phogat JourneyImage Credits: India Today
Published on

நாம் நம்முடைய இலக்கை நோக்கிப் பயணிக்கிறோம். அதில் வெற்றியும் பெறுகிறோம். எனினும், சில சமயங்களில் நம்முடைய வெற்றிப் பறிக்கப்படுகிறது. இருப்பினும் நமக்கு கிடைத்த வெற்றியும், பலமும் நம்மை விட்டு போகப்போவதில்லை. ஆயிரக்கணக்கான மக்களின் அங்கிகாரம் கிடைத்த பிறகு, நம்முடைய வெற்றியை ஒரு பதக்கம் முடிவு செய்ய போவதில்லை என்பதை வினேஷ் போகத் புரிந்துக் கொண்டு மீண்டும் எழுந்து வரவேண்டும் என்பதே பல கோடி இந்தியர்களின் எண்ணமாக உள்ளது.

ஏழு வயதில் ஒரு சின்ன பெண் இந்தியாவிற்கு மல்யுத்தத்தில் ஒரு தங்கப்பதக்கம் வாங்கித்தர வேண்டும் என்ற கனவுடன் இருக்கிறார். ஆனால், அன்றைக்கு அவங்களுக்கு தெரியாது தன்னுடைய 23 வருடக்கனவு ஒரு நாளில் சுக்குநூறாக உடையப் போகிறது என்று.

1994 ஆம் ஆண்டு ஹரியானாவில் வினேஷ் போகத் பிறக்கிறார். இவருக்கு ஏழு வயதிலேயே மல்யுத்தத்தின் மீது ஆர்வம் வருகிறது. தன்னுடைய மாமாவான Mahavir singh phogat இடமிருந்தே இவர் முதன் முதலில் மல்யுத்தத்தைக் கற்றுக்கொள்கிறார். இந்தியாவிலிருந்து ஒலிம்பிக்ஸில் இதுவரை எந்த பெண்ணுமே மல்யுத்தப் போட்டியில் இறுதிச்சுற்றுவரை போனதேயில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

அதனாலேயே கண்டிப்பாக தாம் ஒலிம்பிக்ஸ் மல்யுத்தப்போட்டியில் தங்கப்பதக்கம் வெல்ல வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார். இந்திய இளம் தலைமுறையினருக்கு ஒரு எடுத்துக்காட்டாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறார். இதற்காக அவர் கடினமாக பயிற்சியினை மேற்கொள்கிறார். என்னதான் Asian games ல் இவர் தங்கப்பதக்கம் மற்றும் வெண்கலப்பதக்கம் ஆகியவற்றை வென்றிருந்தாலும் ஒலிம்பிக்ஸ்தான் இவருடைய பெரிய கனவாக இருந்தது.

அதனால் 2016 ல் ஒலிம்பிக்ஸில் முதல்முறையாக கலந்துக்கொள்கிறார். ஆனால், வெற்றிபெற முடியவில்லை. அதற்கு பிறகு மறுபடியும் 2020 ல் முயற்சி செய்கிறார் முடியவில்லை. இருந்தாலும் தன்னம்பிக்கையுடனும், விடாமுயற்சியுடனும் 2024 ல் முயற்சி செய்கிறார். இந்தமுறை Semifinals ல் உலக சாம்பியனையே தோற்கடித்து இறுதிச்சுற்றுக்குள் நுழைகிறார்.

இதையும் படியுங்கள்:
இன்று நாம் நொடிக்கு நொடி ஆர்டர் செய்யும் 'Zomato' உருவான கதை தெரியுமா?
Vinesh phogat Journey

இந்த தடவை தங்கப்பதக்கம் நமக்குதான் என்று மொத்த இந்திய நாடும் மகிழ்ந்தது. ஆனால், இறுதிச்சுற்றில் இவருடைய எடை வெறும் 100 கிராம் அதிகமாக இருந்ததால், வெள்ளி மற்றும் வெண்கலப்பதக்கம் கூட கிடையாது என்று இவரை மொத்த போட்டியிலிருந்துமே Disqualify செய்கிறார்கள்.  இவருடைய 23 வருட உழைப்பு ஒரே நாளில் சுக்குநூறாக உடைகிறது. இதற்கு பின் வேறு ஏதோ காரணங்கள் இருப்பதாக பேசப்படுகிறது.

ஆனால், இதனால் மிகவும் மனம் உடைந்த வினேஷ் போகத், தன்னுடைய கனவு உடைந்துவிட்டது. இதற்குமேல் போராட தனக்கு தெம்பில்லை என்றுக்கூறி மல்யுத்தத்தில் இருந்து விலகுவதாக தன்னுடைய Retirement ஐ அறிவித்துவிட்டார்.

நம் நாட்டினுடைய தங்கமகளான வினேஷ் போகத் போட்டியில் ஜெயிக்காமல் இருந்திருக்கலாம். ஆனால், கோடிக்கணக்கான இந்திய மக்களின் மனதை வென்றுவிட்டார் என்றே சொல்ல வேண்டும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com