இளைஞர்கள் வீறுநடை போட விவேகானந்தரின் எழுச்சிமிகு வார்த்தைகள்!

சுவாமி விவேகானந்தர்...
சுவாமி விவேகானந்தர்...

சுவாமி விவேகானந்தர் இளைஞர்களுக்காக வீறுகொண்டு கூறிய வார்த்தைகள் அவர்களுக்கு என்றுமே நல்ல போதனைகளாக அமைந்துள்ளன. அவர் கூறிய பத்து போதனைகளை கடைபிடித்தால் என்றுமே எழுச்சிமிகு தருணங்களை எதிர்பார்த்து இளைஞர்கள் வீறுநடை போடலாம்.

எழுமின் விழிமின் குறிக்கோளை அடையும் வரை நில்லாது உழைமின்.

இவனை நம்பு, அவனை நம்பு என்று மற்றவர்கள் சொல்கிறார்கள். ஆனால் நான் சொல்கிறேன், முதலில் உன்னிடத்திலேயே நம்பிக்கை வை அதுதான் வழி. உன்னிடத்தில் நீ நம்பிக்கை வை எல்லா ஆற்றல்களும் உன்னுள்ளையே உள்ளன. அதை உணர்ந்து அந்த ஆற்றலை வெளிப்படுத்து. நான் எதையும் சாதிக்க வல்லவன் என்று சொல் நீ உறுதியுடன் விஷத்தை பொருட்படுத்தாமல் இருந்தால் பாம்பின் விஷமும் உன் முன் சக்தி அற்றது

வாழ்வில் வேகம் மட்டும் இருந்தால் போதாது விவேகம் இருக்க வேண்டும்

தூய்மை பொறுமை விடாமுயற்சி இம்மூன்றும் வெற்றிக்கு இன்றியமையாதவையாகும். அத்துடன் இவை அனைத்திற்கும் மேலாக அன்பு இருந்தாக வேண்டும்.

முதலில் கீழ்ப்படிவதற்கு கற்றுக் கொள்ளுங்கள். பிறகு கட்டளை இடும் பதவி உங்களுக்கு தானாகவே வந்து சேரும்.

இல்லை என்று ஒருபோதும் சொல்லாதே. என்னால் முடியாது என்று ஒருநாளும் நினையாதே. நீ வரம்பில்லாத வலிமை உள்ளவன்.

எந்த வேலையையும் தன் விருப்பத்திற்கேற்றதாக மாற்றும் எவனோ அவனே அறிவாளி.

நீ உன்னுடைய குறிக்கோளிலே வெற்றி அடைய வேண்டுமானால் அதைப் பற்றிய எண்ணம் உன் ரத்தத்தோடு இரத்தமாக கலந்து உன் உடல் முழுவதும் பாய்ந்து உன்னுடைய ஒவ்வொரு மயிர் காம்புகளின் வழியாகவும் வெளி வர வேண்டும்.

எதிர்காலத்தில் நாம் எப்படி இருப்போம் என்பது இப்போது நாம் செய்யும் காரியங்களை எண்ணும் எண்ணங்களை  பொறுத்தது.

சரியான உற்சாகத்தோடு வேலை செய்ய தொடங்கினால் வெற்றி நிச்சயம்.

இதையும் படியுங்கள்:
உறவு மேம்பட இந்த 7 விஷயங்களைக் கடைப் பிடியுங்கள்!
சுவாமி விவேகானந்தர்...

காற்றுள்ள போதே தூற்றிக்கொள்ளுங்கள். சிறிதும் சோம்பல் கூடாது. பொறாமையையும் ஆணவத்தையும் பற்றிய கருத்து எல்லாம் ஒரேடியாக தூர எறிந்து விடுங்கள். உங்கள் முழு வலிமையோடும் செயலாற்றும் பொருட்டு ஏராளமான ஆவலோடும் தொழில் களத்திற்கு முன் வருக.

பின்னால் திரும்பிப் பார்க்காதீர்கள் முன்னோக்கிச் செல்லுங்கள். அளவற்ற ஆற்றல், பெரும் ஊக்கம், அளவு கடந்த அஞ்சாமை, அளவில்லாத பொறுமை, இவையே நமக்கு தேவை.

இந்த இத்தகைய அருமையான விவேகானந்தரின் போதனைகளை வாழ்க்கையில் இளைஞர்கள் கடைப்பிடித்தால் அவர்கள் வாழ்க்கையை சாதனைகளாக, சாதனை கொண்டதாக மாற்றலாம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com