1. துயவனாக இரு, அதற்கு மேலாக, நேர்மையாக இரு, ஒரு கணமும் இறைவனிடம் நம்பிக்கை இழக்காதே, நீ ஒளியைக் காண்பாய்.
2. கல்வியால் தன்னம்பிக்கை வருகிறது. தன்னம்பிக்கையின் வலிமையால் உள்ளிருக்கும் ஆன்மா விளித்தெழுகிறது
3. ஒருவர் மற்றவரை நிந்திக்க உங்களிடம் வந்தால் அதைக் கேட்காதீர்கள். கேட்பதே பெரும் பாவம்.
4. பற்று வைப்பது, பற்றை விடுவது - இரண்டும் பூரணமாக வளர்க்கப்பட்டால் அவை மனிதனை உயர்ந்தவனாக, மகிழ்ச்சி நிறைந்தவனாக ஆக்குகின்றன.
5. இதயப்பூர்வமாகக் காரியங்களைச் செய்பவனுக்கு இறைவனும் உதவி புரிகிறான்.
6. ஏதாவது மதிப்புள்ள ஒன்று வாழ்க்கையில் இருக்குமானால் அது அன்பு மட்டுமே. எல்லையற்ற, ஆழம் காணமுடியாத, வானம்போல், பரந்த கடல்போல் ஆழம்கொண்ட அன்பு மட்டுமே வாழ்க்கையில் உள்ள ஒரே மாபெரும் லாபம். இதை அடைந்தவன் பேறு பெற்றவன்.
7. அனைத்தையும் ஒரு வேள்வியாக, இறைவனுக்கு அர்ப்பணமாகச் செய். உலகில் வாழு, ஆனால் அதில் ஒட்டிக்கொள்ளாதே.
8. தாமரையின் வேர் சேற்றில் உள்ளது. அதன் இலையோ எப்போதும் தூய்மையாக இருக்கிறது. பிறர் உனக்கு என்ன செய்தாலும் சரி உன் அன்பு எல்லோர் மீதும் பரவட்டும்.
9. தனக்குத்தானே நோய் தீர்க்கும் திறன் உடலுக்கு உண்டு. மனப்பயிற்சி, மருந்து, உடற்பயிற்சி போன்றவை அதனை தூண்ட வல்லவை.
10. இரவும் பகலும் சேர்ந்து வருவதில்லை. அதுபோலவே ஆசையும், இறைவனும் சேர்ந்திருக்க முடியாது. ஆசையை விடு. இறைவனை நாடு.
11. நடந்ததை எண்ணி வருந்தாதே, கடந்ததை எண்ணிக் கலங்காதே, நீ செய்த நல்ல செயல்களையும் நினைவில் வைத்துக்கொள்ளாதே,
12. யாருடைய வழிகாட்டுதலும் இல்லாமல் உங்களால் எதையும் செய்ய முடியும். எல்லா ஆற்றலும் ஆன்மாவில் இருக்கிறது. எழுந்திருங்கள்! உங்கள் உள்ளிருக்கும் தெய்வீகத்தை வெளிப்படுத்துங்கள்.