பணம், அந்தஸ்து இருந்தால் மட்டும் போதாது... நீங்கள் மகிழ்ச்சியாக இருக்க இந்த ஒரு விஷயம் கட்டாயம் தேவை!

A man thinking about happiness
A man thinking about happinessImage credit: AI
Updated on

போதிலும்கூடமகிழ்ச்சியை குறித்து பல்வேறு நிபுணர்கள் ஆராய்ச்சி செய்திருக்கிறார்கள். அவர்கள் செய்த ஆராய்ச்சியில் மிக முக்கியமான ஒன்றை கண்டுபிடித்திருக்கிறார்கள். அதாவது மகிழ்ச்சி என்றால் என்ன? மேலும் நாம் மகிழ்ச்சியோடு இருக்கிறோம் என்பதை எப்படி அறிவதென்று தான் அவர்கள் கண்டுபிடித்திருக்கிறார்கள்.

எந்த ஒரு தருணத்திலும், நம்மை மகிழ்ச்சியாக வைத்திருக்க நம்முடைய வருமானம், உறவினர்களின் ஆதரவு, உடல் நலம், தொழில் அல்லது நாம் வாழும் நகரம் போன்றவைகள் தான் காரணம் அல்ல. மாறாக, நம்முடைய மனமானது நாம் செய்து கொண்டிருக்கும் செயலில் கவனம் செலுத்துகிறதா அல்லது வேறு எங்காவது அலைபாய்கிறதா என்பதை வைத்து தான் மகிழ்ச்சியானது கணிக்கபடுகிறது. எப்படி என்று கேட்கிறீர்களா?

2010-ல், ஹார்வர்ட் பல்கலைக் கழகத்தை சேர்ந்த உளவியலாளர்கள் 'சயின்ஸ்' என்கிற இதழில் ஒரு பௌத்தப் பழமொழியை தலைப்பாக கொண்டு ஒரு ஆய்வுக் கட்டுரையை வெளியிட்டார்கள். அதாவது “அலைபாயும் மனம் மகிழ்ச்சியற்ற மனம்” என்பதாகும். அவர்கள் ஒரு ஐபோன் செயலியை உருவாக்கினார்கள். அதில் நாள் முழுவதும் சீரற்ற இடைவெளிகளில் 2,250 பேரிடம் மூன்று கேள்விகளைக் கேட்கப்பட்டது.

  1. நீங்கள் என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள்?

  2. நீங்கள் எதைப் பற்றி யோசித்துக் கொண்டிருக்கிறீர்கள்?

  3. நீங்கள் எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கிறீர்கள்?

இந்த கணிப்பிலிருந்து வெளிப்பட்ட விவரமானது மிகவும் தெளிவாக இருந்தது. மக்களின் மனம், அவர்கள் செய்து கொண்டிருந்த வேலையிலிருந்து விலகி 46.9 சதவிகித நேரம் அலை பாய்ந்தது. இது அவர்களின் விழித்திருக்கும் நேரத்தில் கிட்டத்தட்ட பாதி நேரமாகும். மேலும், அவர்களின் மனம் அலை பாயும் போது, அவர்கள் தங்கள் கண்முன் இருந்த வேலையில் கவனம் செலுத்திய நேரத்தை விடத் தொடர்ச்சியாகக் குறைந்த மகிழ்ச்சியுடனேயே இருந்ததாகவும் கூறப்பட்டது. அவர்கள் செய்யும் வேலையைப் பொருட்படுத்தாமல் வேறு ஒரு சிந்தனையோடு இருந்ததாக இந்த கணிப்புகள் கூறுகின்றன. அதைப் போலவே தாம் செய்யும் வேலையோடு ஒன்றி சிந்தித்து செயல்பட்ட மக்கள் அதிக மகிழ்ச்சியாக இருந்ததாகவும் இந்த ஆராய்ச்சி எடுத்து காட்டியது.

மிகவும் கவனத்தை ஈர்த்த இந்த கண்டுபிடிப்பு ஒருவரின் மனம் அலை பாயும் நிலையானது சுமார் 10.8 சதவிகிதமாகவும், அவர்கள் உண்மையில் செய்துகொண்டிருந்த செயல், வெறும் 4.6 சதவிகிதமாக இருந்ததாகவும் கணித்தது.

இதையும் படியுங்கள்:
ஆனந்த பாலாசனம் - நிம்மதியான தூக்கத்தை ஊக்குவிக்கும் 'Happy Baby Pose'
A man thinking about happiness

நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்பதை விட, நீங்கள் எதைப் பற்றி சிந்திக்கிறீர்கள் என்பது இரண்டு மடங்குக்கு மேல் முக்கியமானது என்பதை இந்த ஆய்வு மிக அழகாக எடுத்து காட்டியது.

ஆகவே, நினைவில் வைத்து கொள்ளுங்கள், உங்களுக்கு எந்த குறையுமில்லாத வாழ்க்கை, தொழில், பணம், ஆரோக்கியம், வீடு என எல்லாம் இருந்த போதிலும்கூட, உங்கள் வாழ்க்கையின் பெரும்பகுதியை மனதளவில் நீங்கள் வேறு எங்கோ செலவழித்தால், அந்த வேறு இடம் உங்களை மிகவும் துன்பத்தில் தான் ஆழ்த்தும்.

logo
Kalki Online
kalkionline.com