மனம் தெளிவாக வேண்டுமா? அதற்கு சிறிது நேரம் கொடுங்கள்!

Want a clear mind? Give it some time!
Want a clear mind? Give it some time!Image Credits: iStock
Published on

ம் மனம் குழப்பமாக இருக்கும் சமயத்தில் முடிவெடுப்பதை தவிர்ப்பது நல்லது. ஏனெனில், அப்போது பல சிந்தனைகளால் மனம் கலங்கியிருக்கும். இதுவே மனம் அமைதியாகும் வரை பொறுத்திருந்து பிறகு எடுக்கும் முடிவு நல்லதாக அமையும். இதை புரிந்துக் கொள்ள ஒரு குட்டி கதை சொல்லறேன் கேளுங்கள்.

ஒரு அப்பாவும், பையனும் ஒரு கிராமத்திலிருந்து இன்னொரு கிராமத்திற்கு நடந்து போய்க் கொண்டிருக்கிறார்கள். அப்போது வழியில் ஒரு பெரிய மரத்தை பார்க்கவுமே ஓய்வெடுக்கலாம் என்று முடிவு செய்கிறார்கள். அப்போது அப்பாவிற்கு மிகவும் தாகமாக இருந்ததால் பக்கத்தில் இருக்கு ஏரியில் தண்ணீர் எடுத்து வரச்சொல்லி பையனை அனுப்பி வைக்கிறார்.

சிறிது நேரத்தில் அந்த ஏரியை வந்தடைந்த பையன் அங்கே மக்கள் துணி துவைத்துக் கொண்டிருப்பதையும், மாட்டு வண்டி ஏரியை கடந்து போவதையும் பார்க்கிறான். இதனால் தண்ணீர் மிகவும் கலங்கலாகவும், மண்ணாகவும் இருந்ததைப் பார்த்த மகன். அந்த தண்ணீரை உங்களால் குடிக்க முடியாது என்று தந்தையிடம் நடந்த அனைத்து விஷயத்தையும் சொல்கிறான்.

இதைக்கேட்ட அப்பா கொஞ்சமும் வருத்தப்படாமல் தன் மகனை அந்த மரத்தின் கீழ் ஓய்வெடுக்க சொல்லுகிறார். ஒரு மணி நேரம் கழித்து தன் பையனை ஏழுப்பி, ‘இப்போது அந்த ஏரியில் சென்று தண்ணீர் எடுத்து வா’ என்று அப்பா கூறுகிறார்.

இப்போது தண்ணீர் எடுக்க சென்ற பையன் ஏரியில் மிகவும் சுத்தமான தண்ணீரை பார்க்கிறான். அவனும் தண்ணீர் குடித்துவிட்டு தன் தந்தைக்கும் எடுத்துச் செல்கிறான்.

இதையும் படியுங்கள்:
முயற்சி செய்து பாருங்கள், முத்தான பலன் உங்களை வந்து சேரும்!
Want a clear mind? Give it some time!

அந்த தந்தை கூறுகிறார், நீ அந்த ஏரிக்கு கொஞ்சம் நேரம் தான் கொடுத்தாய். அதன் பிறகு அதனுடைய மண் அனைத்தும் கீழே சென்று சுத்தமான தண்ணீர் கிடைத்தது. இப்படித்தான் நம் மனதும் குழப்பத்தில் இருக்கும்போது அதுக்கும் சிறிது நேரம் அவகாசம் கொடுத்தால் போதும். அதுவே தானாக சரியாகிவிடும். ஏனெனில், சுத்தமாகவும், தெளிவாகவும் இருக்கும் மனதால்தான் நல்ல முடிவுகளை எடுக்க முடியும் என்று கூறினார்.

எனவே, நீங்களோ அல்லது உங்களுக்கு நெருக்கமானவர்களோ குழப்பத்தில் இருக்கும்போது அட்வைஸ் எதுவும் செய்யாமல் அமைதியாக விட்டுவிடுங்கள். எல்லாப் பிரச்சனைகளும் தானாகவே சரியாகிவிடும். வாழ்க்கையும் மகிழ்ச்சியாக இருக்கும். முயற்சித்துப் பாருங்களேன்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com