உழைப்பின் பயனை முழுமையாக அனுபவிக்க வேண்டுமா?

motivaton Image
motivaton Image

சிலர் உழைக்காமலேயே முன்னேற வேண்டும் என்று நினைப்பார்கள் அப்படி நினைப்பவர்கள் தங்கள் பயணத்தை பாதியில் நிறுத்த வேண்டிய சூழ்நிலைதான் ஏற்படும். ஏனென்றால் உழைப்பில் கிடைக்கும் பலன்கள் எப்பொழுதுமே நமக்கு பாசிட்டிவ் எனர்ஜியை மட்டுமே கொடுக்கும்.

கடின உழைப்பே நாம் வாழ்க்கையில் உயர்வதற்கு மிகவும் சிறந்த வழி. உழைப்பில்லாமல் ஒருவன் வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்றால் அது சாத்தியமில்லை. சந்தர்ப்பத்திற்காக காத்திருக்காமல், வாய்ப்புகளை உருவாக்கிக்கொண்டு உழைப்பவர்களே வாழ்க்கையில் மிக உயர்ந்த இடத்தை அடைகிறார்கள்.

உழைக்காமல் பிறர் உழைப்பில் வாழ நினைக்கும் மனிதர்கள் என்றைக்குமே வாழ்க்கையில் நெகடிவ் எனர்ஜியை மட்டுமே பெருவர். இதோ இந்த கதையைப் படியுங்கள் நீங்களும் உழைக்கத் தொடங்கி விடுவீர்கள்

வேங்கைபுரி மன்னன் தன் ஆளுகைக்கு உட்பட்ட ஊர்களுக்கு மக்களைக் காணச் சென்றார். மன்னர் வருவதைக் கேள்விப்பட்ட மக்கள், அவரைக் காணக் கிளம்பினர். அன்று யாரும் வேலைக்குச் செல்லவில்லை. தங்களுக்கு, மன்னர் ஏதாவது பணம் கொடுப்பார் என்பது அவர்களது எதிர்பார்ப்பு.

உழைப்பின் மீது நம்பிக்கை கொண்ட ஒரு மூதாட்டி மட்டும், நார்க்கூடை முடைந்து கொண்டு இருந்தாள். அப்போது ஒருவன் குதிரையில் அவள் வீட்டைக் கடந்து செல்கையில்,

 "பாட்டி, ராஜா வர்றாருன்னு ஊரே கோலாகலமா கூடி நிக்குதே! நீங்க மட்டும் ஏன் போகலை?'' என்றான். 

"உழைச்சாதான் என் மனசுக்கு மகிழ்ச்சி. வேலையைப் பாரமா நினைக்கிற சோம்பேறிங்கதான், ராஜாவைப் பார்த்தா ஏதாவது கிடைக்குமுன்னு போயிருப்பாங்க,'' என்று சொல்லிப் படபடத்தாள். 

வாய் விட்டுச் சிரித்த அந்த வழிப்போக்கன்  பாட்டியிடம், அரசு முத்திரையிட்ட தங்க மோதிரத்தை நீட்டினான். 

வந்திருப்பவர் நாடாளும் அரசன் என்பதை அறிந்த அவள் எழுந்து நின்று மரியாதை செய்தாள்.

இதையும் படியுங்கள்:
மாயம் செய்யும் முருங்கைக்கீரை நீர்.. இவ்வளவு விஷயம் இருக்கா இதுல?
motivaton Image

"அம்மா! என்னைப் பார்க்கப் போனவர்கள் திரும்பி வந்ததும், உழைச்சுப் பிழைக்கிற என்னைத் தரிசிக்க ராஜாவே என் வீட்டுக்கு வந்தார் என்று சொல்லுங்கள். இந்த முத்திரை மோதிரத்தையும் ஊராரிடம் காட்டுங்கள்,'' என்றார். 

ராஜா படாடோபத்துடன் வருவார் என்று காத்து நின்ற மக்கள், அவர் சாதாரண உடையில் வந்து சென்றதை அறிந்து ஏமாந்து போயினர். 

பாட்டிக்கு அவர் அளித்த சன்மானம் பற்றி அறிந்தனர். உழைப்பவரையே உயர் மக்கள் விரும்புவர் என்ற உண்மையை உணர்ந்தனர்.

உழைப்பே உயர்வு என்பார்கள். இருந்தாலும் நீங்கள் எவ்வளவுதான் கடினமாக உழைத்தாலும், அந்த உழைப்பு சரியான முறையில் முறைப்படுத்தப்பட வேண்டும். அப்போதுதான் அந்த உழைப்பின் பலனை முழுமையாக அனுபவிக்க முடியும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com