நிறைய பேர் தங்களை அழகாக்க நிறைய பணம் செலவழிப்பது வெளித்தோற்றத்தை அழகாக்க மட்டுமே. ஆனால் அன்பு செலுத்த பழக்கங்கள் அவசியம். இந்த பழக்கங்கள் உங்கள் குணத்தை அழகாக்கும். அது என்ன என்று பார்ப்போம்.
ஆறுதல் வார்த்தை பேசுங்கள்.
நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் அவர்கள் எதிர்பார்க்காத நேரத்தில் சர்ப்ரைஸ் ஆக பரிசுகள் கொடுங்கள். அவர்கள் மன வேதனைகளில் இருக்கும்போது ஆறுதல் வார்த்தைகள் பேசுங்கள். வாழ்க்கையில் நன்றாக போகும்போதே அருகில் இருப்பவர்கள் ஒரு ரகம் என்றால் பிரச்னைகளின்போது தோள் கொடுக்கும் வேறு ரகம் நான் என்பதை அவர்களுக்கு உணர்த்துங்கள்.
மனம் நோகாத படி சொல்லுங்கள்.
உங்களால் செய்ய முடிகிற விஷயங்களை முடியும் என ஒப்புக் கொள்ளுங்கள். புரிய முடியாததை வெளிப்படையாக நிராகரித்து விடுங்கள். நண்பர் அல்லது உறவினரின் செயல் உங்களுக்கு எதிர்மறை விமர்சனங்கள் இருந்தாலும் அதை மனம் நோகாதபடி சொல்லுங்கள். அவர் மனதில் ஒன்றை வைத்துக் கொண்டு வெளியில் ஒன்றும் பேச மாட்டார் என பெயர் எடுங்கள்.
உதவி செய்வது
அறிமுகம் இல்லாத நபர்களுக்கும் அவசர நேரத்தில் உதவி செய்வது வழக்கமாக்கிக் கொள்ளுங்கள். இரண்டு கைகள் வரும் நபர்களுக்கு கதவை திறந்து விடுவது, படியேறமுடியாமல் தவிக்கும் முதியவர்களுக்கு கை கொடுத்து தூக்குவது என உதவிகளை செய்தால் உங்களை உன்னதமாக அழகுபடுத்தும்.
ஈகோ பார்க்காதீர்கள்.
நீங்கள் இருக்கும் முறை விட சிறப்பானவர்கள் இருந்தால் அவர்களிடம் இருந்து முக்கியமானவற்றை கற்றுக்கொள்ளுங்கள். அவர்களது அனுபவங்களையும் அறிவையும் பெறும் விஷயத்தில் ஈகோ பார்க்காதீர்கள்.
மற்றங்களுக்கு தக்கபடி பேசவேண்டும்.
தெரிந்த நபர்களிடம் சுலபமாக பேசிவிடலாம். அறிமுகம் இல்லாதவரிடம் உரையாடலை தொடங்கி அதை தொடர்வது பெரிய சவால். அவருக்கு எது சுவாரசியமாக தருகிறது என்பதை சில நிமிடங்களில் உணர்ந்து கொண்டு அதற்கு ஏற்றபடி பேசவேண்டும் அந்த பேசும் கலையை பழகிக்கொள்ளுங்கள்.
நன்றி சொல்லப் பழகுங்கள்.
தேங்ஸ்... இந்த வார்த்தை இந்த உலகில் அதிகம் பேசப்பட்ட வார்த்தையாக இது இருக்கிறது. ஆனாலும் இந்த வார்த்தைக்கு இருக்கும் சக்தி மகத்தானது. யார் உங்களுக்கு என்ன உதவி செய்தாலும் மறக்காமல் நன்றி சொல்லிப்பழகுங்கள்.
லேட்டஸ்ட் விஷயங்களை அறிந்து கொள்ளுங்கள்.
அடுத்தவர்களுக்கு ஆர்வம் ஏற்படுத்துகிற 10 புது விஷயங்களை உங்களால் பேச முடிந்தால் உங்களுடன் பழக எல்லோருமே ஆர்வம் காட்டுவார்கள். அதற்காக உலக நிகழ்வுகளை தெரிந்து வைத்திருங்கள். டெக்னாலஜி முதல் உடற்பயிற்சி வரை அனைத்து விஷயங்களையும் எதைப்பற்றி கேட்டாலும் லேட்டஸ்ட் விஷயங்களை அறிந்து கொள்ளுங்கள்.
நேரத்தை திட்டமிட்டு செலவளியுங்கள்.
எதை இழந்தாலும் திரும்ப சம்பாதித்து விடலாம் நேரத்தை இழந்தால் அதை திரும்பபெற முடியாது நேரத்தை திட்டமிட்டு செலவழிங்கள் அனுபவத்தாலும் உங்களை மேம்படுத்திக் கொள்ள தினமும் கொஞ்ச நேரம் செலவிடுங்கள். நேரம் பொன்னானது.
இந்த அத்தனை விஷயங்களிலும் கவனமாக ஈடுபட்டு பழகினால் உங்கள் மனம், குணம் அழகாக மற்றவர்கள் மனதில் ஜொலி ஜொலிப்பீர்கள்.