தலைமைப் பண்பை வளர்த்துக் கொள்ளும் வழிமுறைகள்! 

leadership skills
Ways to develop leadership skills

பணியிடமாக இருந்தாலும், பொது இடமாக இருந்தாலும் வாழ்க்கையில் பல்வேறு நிலைகளில் வெற்றி பெற தலைமைத் திறன் அவசியம். சில நபர்கள் இயற்கையாகவே சில தலைமைத்துவ குணங்களைக் கொண்டிருப்பார்கள். ஆனால் பலர் அத்தகைய பண்புகளைக் கொண்டிருப்பதில்லை. ஒவ்வொருவரும் தங்களது தலைமைத்துவ திறன்களை வளர்த்துக் கொள்வதன் மூலம், வாழ்க்கையில் நல்ல நிலையை அடையலாம். இந்த பதிவில் தலைமைப் பண்பை எவ்வாறு வளர்த்துக்கொள்வது என்பது பற்றி பார்க்கலாம். 

விழிப்புணர்வு: தலைமைத்துவ பண்பை வளர்த்துக்கொள்ள முதலில் சுய விழிப்புணர்வு அவசியம். ஏனெனில் நீங்கள் அதை வளர்த்துக்கொள்ள வேண்டும் என முடிவெடுத்தால் மட்டுமே, அத்தகைய பண்பை நீங்கள் வளர்த்துக்கொள்ள முடியும். எனவே ஏற்கனவே நீங்கள் என்ன நிலையில் இருக்கிறீர்கள் என்பதை புரிந்து கொண்டு, தலைமைப் பண்பை வளர்த்துக் கொள்வதற்கான முயற்சிகளில் ஈடுபடுங்கள். 

தொடர்ச்சியான கற்றல்: தலைமைப் பண்பு என்பது வாழ்நாள் முழுவதும் கற்கும் பயணமாகும். அதாவது ஒவ்வொரு காலகட்டத்திற்கு ஏற்றார் போல எல்லா விஷயங்களையும் நீங்கள் தெரிந்திருக்க வேண்டும். எனவே உங்களது அறிவையும் திறமையும் விரிவு படுத்துவதற்கான வாய்ப்புகளை தேடுங்கள். அதிகமாக புத்தகங்கள் படிக்கவும், கருத்தரங்குகளில் கலந்து கொள்ளுங்கள், ஆன்லைன் ஒர்க்ஷாப்களில் பங்கேற்கவும். புதுப்புது விஷயங்களை தொடர்ச்சியாக கற்றுக் கொண்டே இருங்கள்.

பிறர் சொல்வதை கவனிக்கவும்: பிறர் சொல்வதை முழுமையாக கவனித்து அதற்கு ஏற்றவாறு நடந்து கொள்வது தலைமைத்துவத்தின் முக்கிய பண்பாகும். பிறருடன் பேசும்போது சுருக்கமாகவும் தெளிவாகவும் பேசுங்கள். மேலும், மற்றவர்கள் மீது கவனம் செலுத்துங்கள், பிறரிடம் கேள்விகேட்டு அவர்களைப் பற்றி அறிய முயல்வது, உங்கள் மீதான ஆர்வத்தை அதிகரிக்கும். குறிப்பாக யாரேனும் சிறப்பாக செயல்பட்டால் அவர்களை பாராட்டுங்கள். 

சிக்கலான சூழ்நிலை: மிகப்பெரிய தலைமைப் பொறுப்பில் இருப்பவர்கள் பெரும்பாலும் கடினமான முடிவுகள் மற்றும் சிக்கல்களை எதிர்கொள்கின்றனர். ஒரு மோசமான சூழ்நிலையை வெவ்வேறு கோணங்களில் இருந்து பகுப்பாய்வு செய்வதன் மூலம், உங்களது சிந்தனையை அதிகரித்து சிக்கலை தீர்க்கும் திறனை மேம்படுத்த முடியும். எனவே சிக்கலான விஷயங்களுக்கு எப்படி முடிவெடுக்கலாம் என பயிற்சி செய்யவும். 

டீம் ஒர்க்: தலைமைத்துவம் என்பது தனிப்பட்ட முறையில் நீங்கள் சாதிப்பது மட்டுமல்ல, மற்றவர்களையும் எப்படி வழி நடத்துகிறீர்கள் என்பதை நிர்ணயிக்கும் ஒன்றாகும். எனவே குழுவாக சேர்ந்து எப்படி வேலை செய்வது என தெரிந்து கொள்ளுங்கள். அதுமட்டுமின்றி, குழுக்களை உருவாக்கி அவர்களை எவ்வாறு கையாள்வது என்ற திறனையும் வளர்த்துக்கொள்வது உங்களை தலைமைப் பண்புடையவராக மாற்றும்.

முன் உதாரணமாக இருங்கள்: தலைமைப் பண்பு என்பது நீங்கள் பிறரை எப்படி வழி நடத்துகிறீர்கள் என்பது மட்டுமல்ல, உங்களைப் பார்த்து எப்படி பிறர் நடக்கிறார்கள் என்பதிலும் அடங்கியுள்ளது. எனவே பிறருக்கு முன் உதாரணமாக திகழும் செயல்களில் ஈடுபடுங்கள். பிறருக்கு அறிவுரை கூறும் நீங்களே ஒழுங்காக இல்லை என்றால் யாரும் உங்களை மதிக்க மாட்டார்கள். எனவே பிறரை கட்டுப்படுத்துவதற்கு முன்பு நீங்கள் எல்லா விஷயங்களிலும் சரியாக இருங்கள். 

இதையும் படியுங்கள்:
வெந்நீர் Vs குளிர்ந்த நீர்: எதில் குளிப்பது உடலுக்கு நல்லது?
leadership skills

நினைவில் வைத்துக்கொள்ளுங்கள், தலைமை பண்பு என்பது அதிகாரத்தை பிடிப்பது மட்டுமல்ல, நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தி, பிறர் தங்களது முழு திறனை வெளிப்படுத்த மற்றவர்களுக்கு உதவுவதும்தான். எனவே இதைப் புரிந்துகொண்டு, உங்களுக்கு தலைமைப்பண்பை சிறப்பாக வளர்த்துக் கொள்ளுங்கள். 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com