நமக்கு நாம் மட்டுமேதான் தலைவன்!

Motivation image
Motivation imageImage credit - pixabay.com

ம்மில் பலர் முதலில் நமக்கு என்ன நடக்க வேண்டும் நாம் என்ன செய்ய வேண்டும் என்று சிந்திப்பதில்லை. அடுத்தவர் என்ன செய்கிறார், அவர் எப்படி செயல் படுத்துகிறார் என்பதை கண்காணித்துக் கொண்டிருப்போம். ஆனால் வெளியே காட்டிக் கொள்ளும்பொழுது ஒரு பரபரப்பான சூழ்நிலையில் கட்டிக் கொள்வது ரொம்ப பிசி என்று.

சில வகையான மனிதர்கள் இருப்பார்கள், எப்போதும் எதையாவது தேடிக் கொண்டே இருப்பது அவர்களின் இயல்பு. 1000 புத்தகத்தைப் படித்திருப்பார்கள், 500 சொற்பொழிவுகளைக் கேட்டு இருப்பார்கள், ஆனால், இன்னும் ஏதோ ஒன்றைத் தேடிக் கொண்டே இருப்பார்கள்.

ஒரு 10 நிமிடம் இவங்களால நிதானமாகப் பேசக் கூட முடியாது, நிற்காமல் தேடிக்கிட்டே இருப்பார்கள். இவர்கள் படித்த புத்தகத்தில் இருந்த செய்திகளை, இவர்கள் கேட்ட நிகழ்வுகள் பற்றி கூட இருக்கிறவர்களின் இடத்தில், இப்படிச் செய்தால் நன்றாக இருக்கும், அப்படிச் செய்தால் நன்றாக இருக்கும், அந்த மகான் இப்படிச் சொன்னாரு, இவரு இப்படிச் சொன்னார், என எதையாவது சொல்லிக்கிட்டே இருப்பார்கள்...

இது ஒரு புறம் இருக்க…

நம்மில் பலர் வாழ்க்கையில நடக்கிற செயல்களுக்கு அடுத்தவங்க மேல பழி போடுவதைப் பார்க்கின்றோம். இன்னும் சிலர் நல்ல நேரம் வரவில்லை என்று சொல்லி , அவர்களை அவர்களே ஆறுதல்படுத்திக் கொள்கின்றார்கள்...

உண்மையில் உலகத்தில் தலை சிறந்த ஆசிரியர் யார்? நம் வாழ்க்கைதான் மிக சிறந்த ஆசிரியர். வாழ்க்கை கற்றுத் தராத பாடத்தையா? மற்றவர்கள் கற்றுத் தரப் போகின்றார்கள்.?

நமக்குத் தெரியுதோ, தெரியலையோ வாழ்க்கை நமக்கு எதையாவது ஒரு செய்தியைச் சொல்லிக் கொடுத்துக்கிட்டேதான் இருக்கு.

இதையும் படியுங்கள்:
உங்கள் வெற்றிக்கு உதவும் 8 சிறந்த நண்பர்கள் யார் தெரியுமா?
Motivation image

நாம்தான் வாழ்க்கை சொல்லித்தரும் பலவற்றைக் கற்றுக் கொள்வதில்லை. சொல்லப் போனல், நம்ம வாழ்க்கையிலே என்ன நடந்தது, நடந்து கொண்டு இருக்கிறது, என்ன நடக்கப் போகிறது என்று கவனிப்பதே இல்லை.

அடுத்தவர்களின் வாழ்க்கையில என்ன நடக்குதுன்னு என்று பார்ப்பதற்கு நேரம் இருக்கிறது. ஆனால், நம் வாழ்க்கையிலே என்ன நடக்குதுன்னு என்று நாம் பார்ப்பதில்லை.

வாழ்க்கை என்றால் என்ன? நிகழ்வுகளின் தொகுப்புத்தான் வாழ்க்கை. அப்போ நிகழ்வுகள்? நம்ம எடுக்கிற முடிவுகள்தான் நிகழ்வுகள் (நிகழ்ச்சிகள்)..

நம் வாழ்கை என்பது நம்மைச் சுற்றி நாம் எடுக்கற முடிவுகள் தான்.உண்மையைச் சொன்னால் நாம்தான் நமக்குத் தலைவன், எல்லாமே நாம்தான். நீங்க எடுக்கிற ஒவ்வொரு முடிவும்தான் உங்கள் வாழ்க்கை எப்படிப் பயணிக்கிறது என்று முடிவு செய்கிறது.

நீ வாழ்க்கையில் ஒவ்வொரு தருணத்தையும் ஏன் ஒவ்வொரு வினாடியையும் நாம் நிகழக் கவனமாக கையாள்வோம். உரிய நேரத்தில் உரிய முடிவு எடுப்போம். வாழ்க்கையோட நிதர்சனமான உண்மையும் இதுதான்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com