நம்முடைய ஒவ்வொரு கணத்தையும் நாம்தான் தீர்மானிக்கிறோம்!

We decide our every moment!
We are powerful.Image credit - pixabay
Published on

நாம் சக்தி வாய்ந்தவர்கள். நம் எண்ணங்களாலும், செயல்களாலும் நாம் நம்முடைய வாழக்கையைக் கட்டுப்படுத்துகிறோம். நாம் ஒவ்வொருவரும் ஒரு தனிப்பட்ட தத்துவத்தைக் கொண்டிருக்கிறோம். உங்களுடைய தத்துவம் என்ன என்பதை வரையறுக்க நீங்கள் தவறினாலும் அது, உங்கள் வாழ்வில் எல்லாநேரமும் முழுமையாக இயங்கிக் கொண்டும் செயல்பட்டுக் கொண்டும் இருக்கிறது. நீங்கள் வாழுகின்ற இவ்வுலகத்தை மக்கள் மற்றும் நிகழ்வுகளைப் பற்றியும் அவை உங்களுக்கு ஏற்படுத்தும் தாக்கத்தையும் உங்கள் தனிப்பட்ட தத்துவம்தான் தீர்மானிக்கிறது. பொதுவாக உங்கள் தத்துவம் என்ன என்று கேட்டால் "வாழ்க்கை அத்புதமாக போகிறது. நல்ல விஷயங்கள் நடக்கின்றன. இவ்வுலகம் மிக அற்புதமான மக்களைக் கொண்ட இடம்" என்று நீங்கள் கூறக்கூடும்.

மாறாக "நான் துரதிஷ்டசாலி. இந்த உலகம் நல்லதல்ல. மக்கள் என்னைத் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்கிறார்கள். என்னிடமிருந்து எதைப் பெறமுடியும் என்பதிலேயே குறியாக இருக்கிறார்கள்." என்று நீங்கள் கூறினால் அது நிச்சயமாக தவறாகக் கூடும். நம் வாழ்வில் உண்மையான மகிழ்ச்சி கிட்டுவது கடினம் என்றும், அப்படியே அது கிடைத்தாலும் அது குறுகிய காலம் தான் நீடிக்கிறது என்றும் பலர் கூறுகிறார்கள். மக்கள் பொதுவாக இப்படி நம்பி வந்துள்ளதால் அவர்கள் அந்த நம்பிக்கையின் அடிப்படையிலேயே செயல்பட்டு வந்துள்ளனர். அந்த நம்பிக்கையை மெய்யாக்கியுள்ளனர்.

உங்களுக்கு நிகழும் விஷயங்கள் மோசமானது என நம்பினால் மேலும் இனிமையற்ற விஷயங்கள் அதிக அளவு நேரக்கூடிய விதத்தில் நீங்கள் செயல்விடை அளிப்பீர்கள். முதல் நிகழ்வுக்கு நீங்கள் ஆற்றிய எதிர்வினைதான் தொடர்ந்து இனிமையற்ற விஷயங்கள் உங்களுக்கு நிகழ காரணமாக அமைந்தது. ஒரு விஷயம் நிகழும்போது அது மோசமானது  என்பது போலத் தோன்றக்கூடிய சக்தியை நாம்தான் அதற்குக் கொடுக்கிறோம். எடுத்த எடுப்பிலேயே எந்த ஒரு விஷயத்தையும் நல்லது என்றோ கெட்டது என்றோ முத்திரை குத்திவிட முடியாது.

இதையும் படியுங்கள்:
வெற்றியின் வலிமையான சொல் எது தெரியுமா?
We decide our every moment!

அவ்விஷயம் குறித்த உங்கள் எண்ணம்தான் அதை நல்லதாகவோ மோசமானதாகவோ ஆக்குகிறது என்று ஷேக்ஸ்பியர் கூறியுள்ளார்.

உங்கள் வாழ்வின் நிகழ்வுகளுக்கு நீங்கள் செயல்விடை அளிக்கும் விதத்தை உங்கள் தனிப்பட்ட தத்துவம்தான் தீர்மானிக்கிறது. இது நம்புவது கடினம். ஆனால் அதுதான் உண்மை. உங்களுடைய கடந்த காலச் சூழல்கள் அனைத்திற்கும் உங்கள் வாழ்வில் நிகழ்ந்துள்ள பெரும்பாலான நிகழ்வுகளுக்கும் அதுதான் காரணமாக இருந்து வந்துள்ளது. எந்த விஷயங்கள் உங்கள் கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்டவையாக இருந்ததாக நீங்கள் நினைத்தீர்களோ அவ்விஷயங்களை நிகழ்த்தியதும் உங்கள் தனிப்பட்ட தத்துவம்தான். இனியும் அதுதான் உங்கள் வாழ்வின் ஒவ்வொரு நிகழ்வையும், சூழலையும் தீர்மானிக்கும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com