சற்றே முன்னேற முயற்சி செய்யலாமே!

motivation article
motivation articleImage credit - pixabay.com

-ம. வசந்தி

முயற்சி செய்யாமல் வாழ்விலே எதையுமே சாதிக்க முடியாது. முயன்றால் வெற்றி படிக்கட்டை எட்டிப் பிடித்து விடலாம். முயற்சி இல்லையேல் தோல்வி உங்களை தோள்கொண்டு தழுவும். உங்கள் வாழ்வை அது அடிமையாக்கி வாழ்க்கையை அனாதையாக மாற்றிவிடும் என உலகின் தத்துவத்தின் தந்தை அரிஸ்டாட்டில் அழகாக விளக்கமளிக்கிறார். முயற்சி என்பதற்கு இன்று தத்துவங்கள் தாராளமயமானதற்கு அன்றைய அரிஸ்டாட்டில் அற்புத அர்ப்பணிப்பு காரணம்.

அப்படி பெருமைக்குரிய அரிஸ்டாட்டிலை அவருடைய சீடன் ஒருவன், ஐயா! நான் வாழ்க்கையில் முன்னேற வேண்டும். அதற்கு நான் என்ன செய்ய வேண்டும் என்று கேட்டான்.

அரிஸ்டாட்டிலோ முயற்சி செய் என்றார்.

அவனும் முயற்சி என்றால் என்ன? என்றான். அவரோ இப்பொழுது இருட்டாகிவிட்டது நாளை கிணற்றங் கரைக்கு வருமாறு கூறினார்.

அவனும் வந்தான் கிணற்றின் கரையிலே இருவரும் நின்று பேசிக்கொண்டு இருந்தனர். உடனே அரிஸ்டாட்டில் உனக்கு நீச்சல் தெரியுமா? என்றார்.

அவனும் எனக்குத் தெரியாது என்றான்.

உடனே அரிஸ்டாட்டில் அவன் எதிர்பாராத நேரத்தில் அவனை கிணற்றுக்குள் தள்ளிவிட்டார். அவனும் ஐயோ என்னை காப்பாற்றுங்கள்! காப்பாற்றுங்கள்! என்று கூறியபடியே கைகளையும் கால்களையும் உதைக்க ஆரம்பித்தான். உதைக்க உதைக்க உள்ளே சென்றவன் மேலே வர ஆரம்பித்தான். அவர் தன் கையில் உள்ள நீண்ட கயிற்றினை அவனை நோக்கி வீசினார். அவனும் அதை எட்டிப் பிடித்து மேலே ஏறி வந்தான். 

இதையும் படியுங்கள்:
எல்லா பிரச்னைகளையும் தீர்க்கும் வல்லமை நமக்கு உண்டு!
motivation article

சற்று கோபத்துடன் ஐயா! என்னை ஏன் கிணற்றிலே தள்ளி விட்டீர்கள்? என்றான். அவரோ சிரித்த முகத்துடன் நின்றார்.

ஐயா! என்று கத்தினான்.

பொறு மூச்சிரைப்பு நின்றதா? என்றார். பயம் களைந்ததா? என்றார். அமைதியாக நின்றான். உன்னை நான் தள்ளியவுடன் நீரை அடைந்ததும் என்ன செய்தாய்? என்றார். கை கால்களை உதைத்தேன் என்றான். ஏன் என்றார்? உயிர் பிழைக்க என்றான். அப்போ உன் உயிர் மேல் ஆசை அதிகமானதால் உயிர் பிழைக்க நீ செய்த செயல்தான் நீ எடுத்த முயற்சி என்றார்.

முயற்சி என்பது உள்ளத்தில் உருவாகி உடலின் வலிமையை கொண்டு நிகழ்வது. அவனும் ஐயா மிக்க நன்றி என்று புறப்பட்டான். வாழ்விலே உயர கல்வியில் உயர முயற்சி மேற்கொண்டால் எந்த சூழ்நிலையிலும் வெற்றியினை பரிசாக்கலாம். முயற்சி செய்யுங்கள்  முன்னேற வழி காணுங்கள். வெற்றி நடை போட்டு நல்வாழ்வு வாழுங்கள். 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com