நம்முடைய திறமையை முழுமையாக நம்ப வேண்டும். ஏன் தெரியுமா?

Have full faith in talent
faith in talent
Published on

ம்மிடம் இருந்து பிறர் காசு, பணம், புகழ் ஆகிய எதை வேண்டுமானாலும் திருடி விடலாம். ஆனால், நம்மிடம் இருக்கும் அறிவு, திறமை ஆகியவற்றை யாராலும் ஒருபோதும் எடுத்துக்கொள்ள முடியாது. இதை தெளிவாக புரிந்துக்கொள்ள ஒரு குட்டி கதையைப் பார்ப்போம்.

ஒரு நாள் இரண்டு நண்பர்கள் காட்டு வழியாக நடந்து சென்று கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியில் இருந்த ஒரு மரத்தில் பெரிய தேன்கூடு இருப்பதை பார்த்தனர். அச்சமயம் அங்கே வந்த இரண்டு நபர்கள் தேன்கூட்டில் இருக்கும் தேனீக்களை விரட்டிவிட்டு, அந்த தேன் கூட்டிலிருந்து தேனை எடுக்க ஆரம்பித்தனர்.

இதைப்பார்த்த நண்பர்களுள் ஒருவர் சொல்கிறார், ‘சே! அந்த தேனீகள் எவ்வளவு கஷ்டப்பட்டு இரவு பகலாக அயராது உழைத்து தேனை சேகரிக்கின்றன. ஆனால், இந்த மனிதர்கள் அதனிடமிருந்து தேனை எவ்வளவு சுலபமாக திருடி விடுகின்றனர். இதை நினைத்து அந்த தேனீக்கள் எவ்வளவு வருத்தப்படும்' என்று கூறுகிறார்.

இதைக்கேட்ட இன்னொரு நண்பர் சிரித்துக்கொண்டே, ‘கண்டிப்பாக அந்த தேனீக்கள் மனிதன் தன் உழைப்பை திருடுவதை நினைத்து வருத்தப்படாது’ என்று சொல்கிறார்.

இதைக் கேட்ட முதலாம் நண்பர், 'எப்படி இவ்வளவு உறுதியாக சொல்கிறாய்?' என்று கேட்கிறார். அதற்கு அந்த நண்பர் சொல்கிறார், ‘மனிதர்களால் தேனீக்களிடமிருந்து தேனை மட்டுமே திருடமுடியும்.

ஆனால், அந்த தேனை உருவாக்கும் கலையை எப்போதும் தேனீயிடமிருந்து திருட முடியாது. அதனால் எவ்வளவு தேனை மனிதர்கள் எடுத்துக்கொண்டாலும், ‘தன்னால் திரும்பவும் தேனை உருவாக்க முடியும் என்ற திறமையும், நம்பிக்கையும் தேனீயிடம் இருக்கும் வரைக்கும் அது என்றைக்குமே வருத்தப்படாது' என்று கூறினார்.

இதையும் படியுங்கள்:
வாய்ப்புகள் வரும்போதே பயன்படுத்திக்கொள்ள வேண்டும்!
Have full faith in talent

இந்தக் கதையில் சொன்னதுப் போலத்தான். இன்றைக்கு உங்களுடைய பணத்தையோ அல்லது உழைப்பையோ யார் வேண்டுமானாலும் திருடலாம். ஆனால், உங்களுடைய திறமையும், சம்பாதிக்கும் திறனும் உங்களிடம் இருக்கும் வரை நீங்கள் எதை வேண்டுமானாலும் சாதிக்க முடியும். அதை உங்களிடமிருந்து யாரும் எடுத்துக் கொள்ள முடியாது. இதைப் புரிந்துக்கொண்டால் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். முயற்சித்துப் பாருங்களேன்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com