
சில பேர்கள், பிறக்கும் பொழுதே தங்களை அறியாமலே ஒரு சிலவற்றில் கனவு கண்டுகொண்டு இருப்பார்கள் . மற்ற எதிலும் ஈடுபாடு இருக்காது. அதைப்போல மோட்டார் பைக்கிற்காக பிறந்தவர்தான் ஹோண்டா. இவரது சிறு வயதில் இவர், கண்ணுக்குத் தெரிந்தது எல்லாம் சக்கரம்தான்!
படிப்பில் மிகவும் மந்தமாக இருந்த இவர் மிகவும் நோஞ்சானாக காணப்பட்டதால் தாழ்வு மனப் பான்மையுடன் இருந்தார். எப்பொழுதும் வகுப்பில் கடைசி பெஞ்சில் உட்காருவதுதான் அவரது வழக்கம். அவருடைய எண்ணம் அனைத்தும் என்ஜின்கள் மோட்டார் மற்றும் சைக்கிள்களை சுற்றியே இருந்தது. ஆகவே அவர் ஏதாவது சாதனை செய்யவேண்டும் என்று நினைத்தார்.
முதலில் தன் உடலை தேற்ற உடற்பயிற்சி செய்து கொள்ள முடிவெடுத்து ஒருநாள் அவர் நீச்சல் கற்றுக்கொள்ள விரும்பினார். ஆனால், தன்னால் நீந்த முடியுமா என்று சந்தேகம் வேறு இருந்தது. நீச்சல் தெரிந்த ஒரு சக மாணவனிடம், நீச்சலின் இரகசியத்தைச் சொல்லும்படி கேட்டார். அவன், இவரது நோஞ்சான் உடம்பைப் பார்த்து கேலியாக, "அதற்கென்ன, அது சுலபம்தான். நீ மெடாகா மீனை அப்படியே விழுங்கினால் போதும். அது உன் வயிற்றில் சென்று நீச்சல் அடிக்கும்பொழுது, நீயும் சுலபமாக நீச்சலடிப்பாய் என்றான்.
ஹோண்டாவுக்கு அவனுடைய கிண்டல் புரியவில்லை. அது உண்மை என்று நினைத்து, அந்த மீனை உயிரோடு விழுங்கி நீரில் இறங்கிவிட்டார்! நல்லவேளை. நீரின் ஆழம் அதிகமில்லை. இல்லாவிட்டால் அன்றே மூழ்கி இறந்திருப்பார். தன்னால் நீந்த முடியாததற்கு தன் மெலிந்த உடல்தான் காரணம் என்று நினைத்தார். மீண்டும் அதே பையனிடம் சென்று வெகுளித்தனமாக விளக்கம் கேட்டார். இவர்தான் பிற்பாடு ஒகு மகத்தான சாதனை நாயகனானார்.
அந்தப் பையனும் தன் கிண்டலை விடாமல், நீ கொஞ்சம் பெரிய மீனாகப் பார்த்து விழுங்கு .உன்னால் முடியும்" என்றான் இவரும் அப்படியே செய்ய, அந்த முறையும் தோல்விதான் பிறகு எப்படியோ ஒருவாறாக நீந்தக் சுற்றுக்கொண்டார். "நம்மால் முடியும் என்ற நம்பிக்கை ஒவ்வொருவருக்கும் வேண்டும் அது நமக்கு ஆற்றலையும், சக்தியையும் கொடுக்கும் என நினைத்தார்.
ஆற்றுநீரை பலமுறை குடித்து பலதடவை மூழ்கி நீச்சல் கற்றுக் கொண்டார். நமக்குள்ளே ஒரு மிகப்பெரிய சக்தி இருக்கிறது. அதை நாம் பூரணமாக நம்பவேண்டும் அப்பொழுது நம்மால் எந்த தடையையும் கடக்க முடியும் என்று நினைத்து மிகப்பெரிய சாதனையாளராக மாறினார் சொய்சிரோ ஹோண்டா.