We want public interest without selfishness!
Female Buddhist

நம்மிடம் சுயநலம் இல்லாத பொதுநலம் வேண்டும்!

Published on

ம்முடைய வாழ்க்கையில் பெரும்பாலும் எல்லாம் நமக்கு மட்டும்தான் கிடைக்க வேண்டும் என்ற சுயநலத்துடனே வாழ்கிறோம். இந்த குறுகிய மனநிலை மாறி, ‘அனைவருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும்’ என்ற பொதுநலம் எப்போது வருகிறதோ? அப்போதே வாழ்க்கை இனிமையாக இருக்கும். இதைப் புரிந்துக்கொள்ள ஒரு குட்டி கதையைப் பார்ப்போம்.

ஒரு ஊரில் ஒரு பெண் புத்தத்துறவி இருந்தார். அவர் இரும்பால் ஆன புத்தர் சிலை ஒன்றை செய்து அதன் மீது தங்க இழைகளால் மூடி எப்போதுமே தன்னுடனே வைத்துக்கொண்டிருப்பார். அந்த புத்தரை அந்த பெண் துறவி ‘தங்க புத்தர்’ என்று குறிப்பிடுவார்.

ஒருமுறை அந்த ஊரில் உள்ள புத்த மடாலயதத்திற்கு செல்கிறார். அங்கே பல புத்தர் சிலைகள் அடக்கி வைக்கப்பட்டிருக்கும். அந்த பெண் துறவி தங்க புத்தரையும் மத்த புத்தர்களுக்கு நடுவிலே வைத்து வழிபட ஆரம்பித்தார். அப்படி அவர் புத்தரை பிரார்த்தனை செய்யும்போது சாம்பிராணி புகை போடுவதை வழக்கமாக வைத்திருந்தார்.

அந்த சாம்பிராணி புகை தன்னுடைய தங்க புத்தருக்கு மட்டுமே போகாமல் அங்கிருக்கும் மற்ற புத்தர்களுக்கும் செல்வதை நினைத்து வருத்தப்பட்டார். இதனால் ஒரு குழாயை செய்து சாம்பிராணி ஏற்றும் தூபக்காலில் மாட்டினார்கள். அந்த சாம்பிராணி புகை இப்போது அவருடைய புத்தருக்கு மட்டுமே போகக்கூடியதாக இருந்தது அந்த அமைப்பு.

சுயநலமான அந்த பெண் துறவியின் செயலால் சாம்பிராணி புகைப்பட்டு தங்க புத்தரின் முகம் கருத்துப்போனது. அவருக்கு சுயநலமான எண்ணம் இல்லாமல் இருந்திருந்தால், தங்க புத்தர் தங்கமாகவே இருந்திருப்பார்.

இதையும் படியுங்கள்:
எல்லோரிடமும் அன்போடு நடந்துக்கொள்ள வேண்டும் ஏன் தெரியுமா?
We want public interest without selfishness!

இந்தக் கதையில் நடந்ததுபோல, நாம் அனைவருமே தங்க புத்தர்களாக தான் படைக்கப்பட்டிருக்கிறோம். நாம் கருப்பு புத்தராக மாறுகிறோமா? என்பது நம்முடைய எண்ணங்களாலும், செயல்களிலும் தான் உள்ளது. தனக்கு மட்டுமே எல்லாம் கிடைக்க வேண்டும் என்ற சுயநலத்துடன் இருந்தால் கருத்துப்போயும், எல்லோருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும் என்ற பொதுநலத்துடன் இருந்தால் தங்க புத்தராகவும் ஜொலிக்கலாம். இதைப் புரிந்துக்கொண்டால் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். முயற்சித்துப் பாருங்களேன்.

logo
Kalki Online
kalkionline.com