நம் துன்பங்களுக்கான மூல காரணங்கள் என்னென்ன தெரியுமா?

 root causes of our suffering
root causes of our suffering
Published on

மனித வாழ்வு என்பது இன்பம் துன்பம் என இரண்டையும் கலந்தது. சில நேரங்களில் மகிழ்ச்சியும் சில நேரங்களில் துன்பமும் நம் வந்து கொண்டே இருக்கும். துன்பங்களுக்கு பல காரணங்கள் இருக்கலாம். சில சமயங்களில் வெளிப்புற சூழ்நிலைகள் நம்மை அதிக துன்பத்தில் ஆழ்த்தும். இன்னும் சில சந்தர்ப்பங்களில் நம்முடைய சொந்த எண்ணங்களே நமது துன்பத்திற்கு காரணமாக இருக்கும். இந்தப் பதிவில் நம் வாழ்வில் ஏற்படும் துன்பங்களுக்கு மூல காரணங்கள் என்னென்ன என்பதைப் பார்க்கலாம்.

துன்பத்திற்கான முக்கிய காரணங்கள்:

நம் ஆசைகள் அளவு கடந்து போகும்போது அவை நமக்கு துன்பத்தை ஏற்படுத்தும். எதையாவது பெற வேண்டும் என்ற ஆசை, வாழ்வில் சில விஷயங்களை இழக்கக்கூடாது என்ற பயம் போன்றவை நம் மனதின் அமைதியைக் கெடுத்து துன்பத்தை ஏற்படுத்தக்கூடும்.

மேலும், சில நபர்கள் பொருட்கள், சாதனங்கள் போன்றவற்றின் மீது அதிகப்படியான பற்று வைக்கும் போது அவை கிடைக்காமல் போனால் அது துன்பத்தை ஏற்படுத்துகிறது. இத்துடன் எதிர்காலம் பற்றிய கவலை, தோல்வி பயம், நோய் பற்றிய பயம் போன்றவை நம் மனதை அமைதியற்றதாக்கி துன்பத்திற்கு காரணமாக அமைகிறது.

பிறர் மீது நாம் கொள்ளும் கோபம், வெறுப்பு போன்ற எதிர்மறை உணர்ச்சிகள் நம் மனதை ஆழமாக பாதித்து துன்பத்தைத் தூண்டுகிறது. மேலும், நம்மைப் பற்றிய தவறான எண்ணங்கள், மற்றவர்களைப் பற்றிய தவறான புரிதல்கள் நம் மனதில் வன்மத்தை விதைத்து துன்பத்திற்கு முக்கிய காரணியாக மாறுகிறது.

இதுதவிர பிறரது நோய், இறப்பு, இயற்கை பேரிடர், வறுமை போன்ற வெளிப்புற சூழ்நிலைகளும் நம்மை அதிக துன்பத்தில் அழ்த்தலாம்.

துன்பத்தை எவ்வாறு கையாள்வது:

முதலில் உங்களது ஆசைகள் அளவு கடந்து போகாமல் பார்த்துக் கொள்ளுங்கள். இத்துடன் எல்லா விஷயங்களுக்கும் பிறரை நம்பி இருப்பதைக் கைவிடுங்கள். எதன் மீதும் அதிகமான பற்று வைக்காமல் இருங்கள்.

இதையும் படியுங்கள்:
கோபம் கொல்லும்! கோபம் கொள்வதைத் தவிர்க்க என்ன செய்யலாம்?
 root causes of our suffering

தியானம், யோகா போன்ற மனநல பயிற்சிகள் மூலமாக வாழ்க்கையின் கவலை மற்றும் பயத்தை குறைக்க முடியும். பிறர் மீது தேவையில்லாமல் ஏற்படும் வெறுப்பு, கோபம் போன்ற எதிர்மறை உணர்ச்சிகளை அடக்கி நேர்மறையான எண்ணங்களை வளர்த்துக் கொள்ளுங்கள். உங்களைப் பற்றி நீங்களே தவறாக நினைக்காதீர்கள். நம் வாழ்வில் வரும் எல்லா சவால்களையும் தைரியமாக எதிர்கொண்டு, நம்மால் சாதிக்க முடியும் என்ற நம்பிக்கையுடன் வாழ்க்கையை நடத்துங்கள்.

துன்பம் என்பது வாழ்க்கையில் ஒரு பகுதிதான். எனவே நம் எண்ணங்கள், செயல்கள் மூலம் துன்பத்தைக் குறைத்து மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழ முடியும். நம் வாழ்க்கையில் நல்ல விஷயங்களை மட்டும் கவனித்து, நன்றியுடன் வாழ்ந்தால் துன்பம் தானாகவே குறைந்துவிடும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com