"வெற்றியின் முதல் ரகசியம்" என்ன? எளிமையாக கூறுகிறார் சிந்தனையாளர் எமர்சன்!

ரால்ப் வால்டோ எமர்சன்...
ரால்ப் வால்டோ எமர்சன்...
Published on

ரால்ப் வால்டோ எமர்சன் அமெரிக்காவைச் சேர்ந்த கட்டுரையாளர், கவிஞர், சொற்பொழிவாளர் மற்றும் எழுத்தாளர். தனது சிந்தனைகளை கட்டுரைகள் மற்றும் சொற்பொழிவுகள் வாயிலாக வெளிக்கொணர்ந்தவர். அவர் ஆற்றிய சொற்பொழிவுகள் மற்றும் கட்டுரைகளில் பகிர்ந்த பொன் மொழிகளில் சில தொகுப்பாக இங்கே...

வெற்றியின் முதல் ரகசியம் என்ன?

தன்னம்பிக்கை

மனிதன் முதலில் தன்னைத்தானே நம்ப வேண்டும். ஆளுமையின் சாரம், சுய நம்பிக்கையில் இருக்கிறது. நம்பிக்கை இல்லாத வாழ்க்கை நரகம்.

ஒவ்வொரு நாளும் ஆண்டில் மிகச்சிறந்த நாள் என்று உள்ளத்தில் எழுதிக்கொள். எப்போதும் மனம் மிகவும் தூய்மையாக இருக்கவேண்டும். அப்போதுதான் முகம் புத்துணர்ச்சியுடன் இருக்கும். அறிவுள்ளவனுக்கு வாழ்க்கை ஒரு திருவிழா.

சுறுசுறுப்பாக இருப்பவனுக்கு வாரத்தில் இன்றே ஏழு நாட்கள். சோம்பேறிக்கு ஏழு நாளும் நாளையே. வரப்போகும் பிரச்னைகளை வலியச் சென்று சந்தித்து வெற்றி பெற முயலாதவன் வாழ்க்கையென்னும் கல்வியில் முதல் வகுப்பை தாண்டாதவன்.

நல்ல செயல் எப்போதும் உலகில் தனக்கென ஓர் இடத்தை உண்டாக்கிக் கொள்ளும்.

ஒருவன் தான் மேற்கொண்ட பணியில் முழு மனதையும் செலுத்தி ஊக்கத்துடன் அதைச் செய்தால்தான். அவனுக்கு அந்தப் பணியில் அமைதியும், உற்சாகமும் ஏற்படும். அரை மனதுடன் செயலில் இறங்கும் போது அவனிடம் அறிவுத்திறன் இராது, அவனது கற்பனை வளமும், நம்பிக்கையும் தேயும்.

ஒருவன் எந்த இழிவான தொழிலை செய்தாலும் பரவாயில்லை. அதை உண்மையுடனும், சிரத்தையுடனும் செய்தாலே போதும். அதுவே சிறந்தது. அத்தகையவனே கலைஞன், அறிவுடையோன்.

பொறாமை மடமையாகும், போலித்தனம் தற்கொலையாகும். கஷ்டங்கள் வரும் முன், மனதை திடப்படுத்திக் கொள்பவன் அறிவுள்ளவன்.

சந்தர்ப்பம் தனக்கு நேரவில்லையென எந்த மாபெரும் மனிதனும் குறை சொல்லிக் கொண்டு இருக்க மாட்டான்.

உண்மையைத்தேடி அடைவதில் மட்டும் விடாப்பிடியாக இரு. உனக்குத் தெரியாததைத் தெரியாது என்று சொல்வதிலும், பொருட்படுத்தாதைப் பொருட்படுத்தவில்லை என்று சொல்வதிலும் விடாப்பிடியாக இரு.

மூன்று விதிகளை படிக்க விரும்புகின்றவர்களுக்கு நான் சொல்ல விரும்புகிறேன். ஒரு புத்தகம் வெளிவந்த இரண்டு மூன்று ஆண்டுகளுக்குள் படித்து விடுங்கள். மிகச்சிறந்த புத்தகங்களை மட்டும் தேடிப்பிடித்தாவது படியுங்கள். எப்போதும் படிக்க விரும்புகின்ற புத்தகங்களை மட்டும் படியுங்கள்.

ஒருவருக்கு அன்பளிப்பு வழங்க வேண்டும். அது என்னவாக இருக்க வேண்டும்? யோசித்து யோசித்து முடிவு காண்பதற்குள். அன்பளிப்பு வழங்க வேண்டிய நாள் கூட சென்று விடுகிறது.

யோசனையை நிறுத்து. மலர்களும், கனிகளும் அன்பளிப்பிற்கு எப்போதும் உகந்தவை. அதை நினைவில் கொள். பரிசு பெறும் சமயத்தில் மகிழ்ச்சி அடைகிறோம். அல்லது வருத்தம் அடைகிறோம்.

இதையும் படியுங்கள்:
உங்கள் குழந்தைக்கு பல் சொத்தை பிரச்சினையா? தவிர்க்க சுலபமான 10 வழிகள் இதோ...
ரால்ப் வால்டோ எமர்சன்...

நன்றி அறிவிப்பை எதிர்பார்ப்பது எப்போதும் இழி செயல். பெளத்தர்கள் ஒரு பொழுதும் நன்றி செலுத்துவதில்லை. உங்களுக்கு உதவி செய்தவர்களை முகஸ்துதி செய்யாதீர்கள். என்றே அவர்கள் அறிவுரைக்கிறார்கள்

ஒருபோதும் தோல்வியடையாமல் இருப்பதில் நமக்குப் பெருமை இல்லை; அது ஒவ்வொரு தோல்வியிலிருந்தும் எழுவதிலேயே இருக்கின்றது. ஆயிரம் நண்பர்கள் இருப்பதில் பெருமை இல்லை, எதிரிகள் இல்லாமல் இருப்பதே பெருமை.

மனிதர்கள் அவரவர் தாயினால் உருவாக்கப்படுகின்றனர். தாய் எவ்வளவு உற்சாகமாக அறிவு புகட்ட விரும்புகிறாளோ அவ்வளவு உற்சாகமாக குழந்தையும் அதை கற்க இயலும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com