வாழ்க்கையில் சந்தோஷம் நம்மைத் தேடி வர என்ன செய்ய வேண்டும்?

How to find  happiness in life?
How to find happiness in life?Image Credits: Freepik
Published on

ம்முடைய வாழ்க்கையில் நாம் அனைவரும் சந்தோஷத்தை தேடி அலைகிறோம். ‘நாம் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும்’ என்ற சுயநலத்திற்காக எந்த எல்லைக்கு வேண்டுமானாலும் செல்ல தயாராக இருக்கிறோம். ஆனால் மகிழ்ச்சி என்பது சுயநலமற்றது. நாம் மற்றவர்களுக்கு அதை கொடுக்கும்போது, நமக்கான மகிழ்ச்சி தானாகவே உருவாகிவிடும். அதை விளக்கும் கதையை பற்றித்தான் இந்த பதிவில் காண உள்ளோம்.

ஒரு வகுப்பில் உள்ள ஆசிரியர் அந்த வகுப்பில் உள்ள மாணவர்களிடம் ஆளுக்கு ஒரு பலூனை கையிலே கொடுத்துவிட்டு அதில் அவர்களின் பெயர்களை எழுதச் சொல்கிறார். அந்த குழந்தைகளும் மிகவும் ஆர்வத்தோடு அவரவர் பெயரை பலூனில் எழுதுகிறார்கள். சிறிது நேரம் கழித்து எல்லோரிடமுமிருந்து பலூனை வாங்கிச் சென்று ஒரு பெரிய ஹாலில் மொத்த பலூனையும் போடுகிறார். அந்த குழந்தைகளிடம் ஐந்து நிமிடம் டைம் கொடுத்து விட்டு அவரவர் பெயர் எழுதப்பட்ட பலூனை அந்த நேரம் முடிவதற்குள் தேடி எடுக்கவேண்டும். இதுதான் போட்டி என்று கூறுகிறார்.

நேரமும் ஆரமிக்கிறது, குழந்தைகள் அனைவரும் ஒருவருக்கொருவர் போட்டிப்போட்டு மிகவும் ஆக்ரோஷமாக தங்கள் பலூனை தேடத் தொடங்குகிறார்கள். ஆனால் யாராலும் அவரவர் பெயர் எழுதப்பட்ட பலூனை குறிப்பிட்ட நேரத்திற்குள் கண்டுப்பிடிக்க முடியவில்லை.

ஆசிரியர் எல்லா மாணவர்களையும் பார்த்து, இப்போது, ‘உங்கள் காலடியில் கிடக்கும் பலூனில் யாருடைய பெயர் எழுதியிருக்கிறதோ, அந்த பலூனை அந்த உரிய நபரிடம் ஒப்படையுங்கள்’ என்று சொன்னார். சிறிது நேரத்திலேயே எல்லோருடைய பலூனும் அவரவரிடம் சென்று சேர்ந்துவிட்டது.

இதையும் படியுங்கள்:
கடவுள் நல்வழி காட்டுவார் என்று காத்திருப்பவரா நீங்கள்? இந்த கதை உங்களுக்குத்தான்!
How to find  happiness in life?

இதேபோலத்தான் சந்தோஷமும், நம் வாழ்க்கையில் நம்முடைய சந்தோஷத்திற்கு மட்டும் முக்கியத்துவம் கொடுத்து அதை தேடி அலையும்போது கிடைப்பதில்லை. ஆனால் ஒருத்தவருக்கு ஒருத்தர் உதவியாக இருக்கும் போது அந்த சந்தோஷம் நமக்கு சுலபமாகவே கிடைத்து விடுகிறது என்று சொல்லி முடிக்கிறார். அன்றைக்கு அந்த குழந்தைகள் தன்னுடைய ஆசிரியரிடமிருந்து ஒரு நல்ல வாழ்க்கைப் பாடத்தை கற்றுக் கொள்கிறார்கள்.

சில சமயங்களில் நம்முடைய மகிழ்ச்சிக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுத்து ஓடாமல் நம்மை சுற்றி உள்ளவர்களையும் மகிழ்ச்சியாக வைத்துக் கொண்டாலும்  நமக்கான சந்தோஷமும், மகிழ்ச்சியும் தானாகவே நம் கையில் வந்து சேர்ந்துவிடும். இந்த உண்மையை புரிந்துக் கொண்டால், மகிழ்ச்சி எங்கே இருக்கிறது? என்று தேடி அலைய வேண்டிய அவசியமில்லை. முயற்சித்துப் பாருங்களேன்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com