தன்னம்பிக்கை வளர நாம் செய்ய வேண்டியது என்ன தெரியுமா?

Self-confidence
Self-confidence

சிலர் எப்போது எதை பேசினாலும் ஆமா என்னாலையா இதெல்லாம் செய்ய முடியப்போகுது. நான் இந்த பூமியில பிறந்ததே வேஸ்ட் என்று புலம்புவார்கள். ஒன்றும் இல்லாததற்கெல்லாம் தன்னையே குறை படுத்திக் கொண்டு பேசுவார்கள். இதை மாற்றும் வழி என்ன என்பதை இப்பதிவில் காண்போம்.

தன்னம்பிக்கை குறைவாக இருப்பவர்கள்தான் இதுபோன்ற பேச்சுகளை பேச ஆரம்பிக்கிறார்கள். ஏதாவது ஒரு செயலை செய்தால் அதனால் ஏதாவது குறை ஏற்பட்டுவிடுமோ? நம்மால் செய்ய இயலுமோ? இயலாதோ? என்றெல்லாம் நினைக்கும் பொழுதுதான் இதுபோன்ற பேச்சுக்கள் வருகிறது. அதை விடுத்து எதை செய்தாலும் நம்மால் முடியும் என்று ஆணித்தரமான நம்பிக்கையுடன் செய்ய முயன்றால் அதில் ஒரு நன்நம்பிக்கை பிறக்கும்.

எது நடந்தாலும் நடந்து முடிந்ததையே யோசித்துக் கொண்டிருக்காமல் அடுத்து என்ன என்று நம்மையே நாம் கேட்டுக்கொள்ள வேண்டும். அதற்கு மாற்று வழியை கண்டுபிடித்து, உள்நுழைந்து செயலாற்ற வேண்டும். அப்படி செய்யும் பொழுது எந்த ரிசல்ட் வந்தாலும் மேற்கொண்டு நடவடிக்கைகள் எடுப்பதற்கு நல்ல தெளிவு பிறக்கும். இந்த தெளிவு தன்னம்பிக்கை வளர வழி வகுக்கும்.

பிறகு தன்னம்பிக்கையை விடாமல் இருப்பதற்கு யாரிடம் எதைப் பேசினாலும் பாசிட்டிவான விஷயங்களைப் பேச வேண்டும். எந்த சூழலிலும் என்னென்ன சாத்தியக்கூறுகள் இருக்கும் என்பதை புரிந்துகொண்டு, அதில் தனி கவனம் செலுத்தி முன்னேற வேண்டும்.

யாராவது நெகட்டிவ் ஆக பேசினால் அல்லது நடந்து முடிந்த விஷயங்களையே திரும்பத் திரும்ப பேசினால் அதையெல்லாம் மூட்டைக் கட்டி வைத்து விட வேண்டும். அதைக் காது கொடுத்து கேட்காமல் கவனத்தை திசை திருப்ப வேண்டும். அது மாதிரி செய்தால் பேச வருபவர்கள் நெகட்டிவான விஷயங்களை பேச வருவதை தவிர்ப்பார்கள். இவனிடம் எதை பேசினாலும் செல்லுபடி ஆகாது என்பதால் திரும்பிப் போய் விடுவார்கள்.

எப்போதும் உற்சாக மனநிலையை தக்க வைத்துக்கொள்ள வேண்டும். எந்த சூழலில் இருந்தாலும் உடல் நலம், மன நலம் இரண்டும் பாதிக்கப்படாத அளவுக்கு நம்முடைய வாழ்க்கை முறையை மாற்றிக்கொள்வது ரிலாக்ஸ் ஆக உணரச் செய்யும். இந்த உணர்வே மிகுந்த தன்னம்பிக்கையை அளிக்கும்.

எல்லாவற்றுக்கும் மேலாக இடத்திற்கு தகுந்தார் போல் நடை, உடை, பாவனைகளை மாற்றுவது, புதுமையான விஷயங்களை கற்றுக் கொள்வது, நகைச்சுவையாக பேசுவது எல்லோரிடமும் இணக்கமாக இருப்பது போன்ற செயல்களாலும் தன்னம்பிக்கை உயர்வடையும்.

இதையும் படியுங்கள்:
4 Types of Introverts: நீங்கள் இதில் எந்த வகை!
Self-confidence

தன்னம்பிக்கை உள்ள ஒரு நபரை எவ்வளவு நெகட்டிவான சிந்தனை உள்ள எந்த ஒரு நபராலும் வெற்றிகொள்ள முடியாது. ஆதலால் நல்ல மாற்றம் வரும் என்று நம்பலாம். சில நாட்களில் அல்லது மாதங்களில் நெருக்கடிகள் மாறிவிடும் என்று நம்புவதும் தனது திறமைக்கு ஏற்ற வேறு வேலை வாய்ப்புகளை உருவாக்கிக் கொள்ளலாம் என்ற உறுதியுடன் செயல்படுவதும் தன்னம்பிக்கை வளர்ந்ததின் சாட்சியங்களே.

ஆதலால் வீடு கட்டி பணச்சுமையில் இருக்கிறீர்களா? வேலை நெருக்கடியில் இருக்கிறீர்களா? எதில் சோர்வுற்று தன்னம்பிக்கை குறைந்து இருந்தாலும், வாழ்க்கையில் நடந்த நல்ல பாசிட்டிவான விஷயங்களை திரும்பத் திரும்ப மனதிற்கு கொண்டு வந்தால், அது ஒரு உற்சாக ஊற்றை ஏற்படுத்தும். அதன் பிறகு நம் சிந்தனையில் நல்ல மாற்றம் வரும். அந்த மாற்றம் உயர்ந்த தன்னம்பிக்கையை கொடுக்கும். பிறகு எதிலும் துணிந்து செயல்படலாம். இதனால் எதனையும் வெல்லலாம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com