நாம் நினைப்பதெல்லாம் நடக்க என்ன செய்ய வேண்டும் தெரியுமா? 

what we need to do to make everything we think happen?
what we need to do to make everything we think happen?
Published on

மனித மனம் ஒரு அற்புதமான கருவி. நம் எண்ணங்களின் மூலம் நாம் பல புதிய படைப்புகளை உருவாக்கலாம், சிக்கல்களைத் தீர்க்கலாம், பல புதிய விஷயங்களைக் கண்டுபிடிக்கலாம். ஆனால், நாம் நினைக்கும் விஷயங்கள் அனைத்துமே நடக்க வாய்ப்புள்ளதா? நாம் நினைப்பதெல்லாம் நடக்க என்ன செய்ய வேண்டும்? என்கிற கேள்வி பலரது மனதில் இருந்து வருகிறது. இந்தப் பதிவில் நாம் நினைப்பதெல்லாம் நடப்பதற்கு என்ன செய்ய வேண்டும்? என்பதைப் பற்றி முழுமையாகப் பார்க்கலாம். 

நேர்மறையான சிந்தனை: நமது எண்ணங்கள் நம் வாழ்க்கையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதில் சந்தேகம் இல்லை. நாம் எப்போதும் எதிர்மறையாக சிந்தித்தால், அது நம் மனநலையை பாதித்து, நம் முயற்சிகளை தோல்விகளை நோக்கியே கொண்டு செல்லும். இதுவே நாம் நேர்மறையாக சிந்தித்தால் அது நமக்கு நம்பிக்கை மற்றும் ஊக்கத்தைக் கொடுத்து வெற்றி பெற உதவும். 

நேர்மறையாக சிந்திக்க பல வழிகள் உள்ளன. நம் வாழ்க்கையில் உள்ள நல்ல விஷயங்களில் கவனம் செலுத்துவது, நன்றி உணர்வுடன் இருப்பது, சவால்களை வாய்ப்புகளாகப் பார்ப்பது போன்றவை நேர்மறையான சிந்தனையை ஊக்குவிக்க உதவும். 

இலக்கு வகுத்தல்: நாம் என்ன சாதிக்க விரும்புகிறோம் என்பதை தெளிவாக அறிந்து அதற்கான இலக்குகளை வகுப்பது மிகவும் முக்கியம். இலக்குகளை வகுக்கும்போது அவை SMART (Specific, Measurable, Achievable, Relevant, And Time-Bound) ஆக இருப்பதை உறுதி செய்ய வேண்டும். இப்படி இலக்குகளை நிர்ணயிப்பது நமக்கு தெளிவான திசையைக் காட்டி, அவற்றை அடைய ஊக்கம் கொடுக்கும். 

செயல்: நம் எண்ணங்களை நிஜமாக்க செயல்படுவது மிகவும் முக்கியம். எதையுமே செய்யாமல் சிந்தித்துக் கொண்டு மட்டுமே இருந்தால், நம் வாழ்க்கையில் எதுவுமே மாறாது. நாம் எவ்வளவுதான் நேர்மறையாக சிந்தித்தாலும், இலக்குகளை சிறப்பாக வகுத்தாலும், செயல்படாவிட்டால் எந்த பயனும் இல்லை. எனவே, நம் இலக்குகளை அடைய தேவையான நடவடிக்கைகளை கட்டாயம் எடுக்க வேண்டும். 

இதையும் படியுங்கள்:
பட்டாம்பூச்சியை வைத்து ஒரு குட்டி வாழ்க்கை தத்துவம் தெரிஞ்சிக்கலாமா?
what we need to do to make everything we think happen?

இவற்றை நீங்கள் கடைப்பிடித்தால், நீங்கள் நினைப்பதெல்லாம் நடக்கும் என்று உறுதியாக சொல்ல முடியாது. ஆனால், நம் எண்ணங்களின் மூலம் நம் வாழ்க்கையில் நிறைய சாதிக்க முடியும். நேர்மறையாக சிந்தித்து, இலக்குகளை வகுத்து, செயல்பட்டால் நம் கனவுகளை நிஜமாக்குவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும். இவற்றைப் புரிந்துகொண்டு உங்களுக்கான இலக்கை நிர்ணயித்து அதில் செயல்பட ஆரம்பிக்கவும். 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com