உங்களுடைய முதுமைக் காலம் எப்படி இருக்கும்? இந்தக் கட்டுரை உங்களுக்கு ஒரு எச்சரிக்கை!

Lifestyle articles
Aging in human life
Published on

னித வாழ்வில் வயோதிகம் ஒரு சவாலான பாகமே. ஒரு சிலருக்கு அது வரமாகிறது. சிலருக்கு விலைமதிப்பில்லா வைரமாகிறது. சிலருக்கோ சிரமமாகிறது. ஆக பயனும், பயனில்லாததும், நிரந்தரமானதல்ல. வாழ்க்கை எப்படியோ அதேபோல ஏற்ற இறக்கம், தலைமுறை இடைவெளி, பற்றுதல் பாசம் இருக்கு, ஆனால் இல்லை என்பதுபோல மாயக்கண்ணாடியாய் உள்ளது.

அதிலும் தற்போதைய தலைமுறை உறவுகளில் அவசர கதியான, எடுத்தேன் கவிழ்த்தேன் என்ற நிலைபாடுகள் அமையப்பெற்ற இளைய தலைமுறைகளிடம் சில பெற்றோா்கள் சிக்கி சின்னாபின்னமாகி விடுகிறாா்கள். அதற்கு மூலகாரணம் சுயநலமே!

கணவன் மனைவி இருவரும் பொருள் ஈட்டுவது, சொல்லப்போனால் மனஅழுத்தம், சகிப்புத்தன்மை இல்லாத நிலை, அனைத்தையும் விட பற்றுதல் பாசம் இல்லாததோடு மனைவி பேச்சைக்கேட்டு விபரீத முடிவெடுக்கும் முதுகெலும்பில்லா கணவன்மாா்கள். அதற்காக அத்தனைபேரையும் குறைசொல்ல முடியாது. சில குடும்பங்களில் வயதான பெற்றோா்கள் பாரமாகித்தான் போகிறாா்கள்.

நான்கு பிள்ளைகளை பெற்ற வயதான முதியோா்களை யாா் காலம் பூராவும் பாா்த்து பராமரிப்பது என்ற குதர்க்கமான எண்ணம் வருவது தவறான ஒன்று. அரசு பணியில் ஒய்வு பெற்ற பின்னர் வரக்கூடிய ஓய்வூதியம், கணவன் இறந்த பிறகு மனைவிக்கு, குடும்ப ஓய்வூதியமாக வழங்கபடுகிறது. அதன் முலம் தொகை வருவதால் சில முதியவர்களுக்கு கொஞ்சம் நிம்மதி.

சாி அரசு வேலையில் இல்லாத பெற்றோா்கள், அவர்கள் கதி வக்ர கதிதானா? அதேபோல அவர்களது வயோதிகத்திற்கு நிம்மதி கிடையாதா. ஏன் இந்த பாகுபாடு. இரண்டு பிள்ளைகள் இருந்தால் இங்கு அங்குமாய் பதினைந்து நாள் வாழ்க்கையா வாழச்செய்வது?

மனிதன் குணங்களை மறந்துவிடுங்கள், மனிதனை மறந்து விடாதீா்கள். அதிலும் பெற்றோா்கள் பிள்ளைகளுக்கு முகவரி தந்தவர்கள், அதை மறந்து விடவேண்டாம். முப்பது ஆண்டுகாலம் உங்களுக்காக உழைத்தவர்கள் அவர்கள் இல்லையேல் நீங்கள் இல்லை. தொட்டதற்கெல்லாம் குறை கண்டுபிடிக்கிறாா், எந்த சாப்பாடு செய்தாலும் அதற்கு ஒரு வியாக்கியானம், தொணதொணப்பு அதிகமாகிவிட்டது, வயசான இதுகளை வைத்துக்கொண்டு நிம்மதியாக ஒரு இடம் போக முடியவில்லை.

இதையும் படியுங்கள்:
உங்கள் வாழ்க்கையை மாற்றப்போகும் 6 ரகசியங்கள்: இதை அவமானமாக நினைக்காதீர்கள்!
Lifestyle articles

இதுபோல நிறைய குற்றச்சாட்டுகள். இப்படி பேச்சுக்களைக் கேட்டுக்கொண்டு மனதில் நிம்மதி இல்லாத வாழ்க்கை வயோதிக வாழ்க்கை ஒரு சாகா வரமா? சில இடங்களில் பொியவர்கள் கணக்கு வழக்கில்லாமல் சொத்து சோ்த்து வைத்ததால் அவர்களைக் கவனிக்க தனியாக ஒாிரு பணியாளா்கள் நியமிக்கப்படுவது உண்டு.

அது ஒரு ராஜ வாழ்க்கை அது அனைவருக்குமா கிடைத்துவிடுகிறது. எது எப்படியோ பெற்றோா்களை வயதான காலத்தில் உதாசீனம் செய்யாதீா்கள் அது தவறு.

குழந்தையும் தெய்வமும் ஒன்று என்பதுபோல முதியோா்களும் குழந்தைகள் மாதிாிதான்.

வீட்டில் ஒரு பொியவர் இருந்தால் அதன் மதிப்பே தனிதான் என்பதை உணர்வதோடு அவர்களின் கடைசி கால உணர்வுகளுக்கு மதிப்பளியுங்கள். காலம் போகப்போக நாட்காட்டியில் தேதியை அநாயசமாய் கிழிக்கக் கிழிக்க நீங்களும் உங்கள் மனைவியும் முதுமைப் பாதையில் பயணம் செய்கிறீா்கள் என்பதை மறவாதீா்கள். தரம் நிரந்தரம் தான், ஆனால் உலகில் எதுவும் நிரந்தரம் இல்லையே"!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com