கடமையே என்று எது செய்தாலும் களைப்புதான் மிச்சமாகும்!

Whatever is done as a duty, only fatigue remains!
motivational articles
Published on

டைமையச் செய்வதாக நினைத்து எதைச் செய்தாலும் உங்களுக்கு களைப்புதான் மிச்சமாகும். ரத்த அழுத்தமும் ஏறும். தன்னுடைய செருப்புத் தொழிற்சாலைக்கு அந்த முதலாளி வந்திருந்தார்.  அங்கு வேலை மும்முரமாக நடந்து கொண்டிருந்தது. "ஐயா, அடுத்தவர் என்ன செய்கிறார் என்று கவலைப்படாமல் இங்கே ஒவ்வொருவரும் தங்கள் கடமையை ஆற்றுகிறார்கள்" என்றார் மேலாளர்.  ஒரு தொழிலாளி அட்டைப் பெட்டி எடுத்து அதன் மீது லேபிள் ஒட்டி அடுத்தவரிடம் தள்ளினார்.  அவர் அதில் ஒற்றைச் செருப்பைப் போட்டார். அடுத்தவர் அந்தப் பெட்டியை மூடி ஒட்டினார்.  அந்தப் பெட்டி விற்பனை  பகுதிக்கு அனுப்பப்பட்டது.

என்ன நடக்கிறது இங்கே. செருப்புகளை ஜோடியாகத்தானே தயாரிக்கிறோம். ஏன் ஒற்றைச் வெறுப்பை பேக் செய்கிறீர்கள் என்று முதலாளி கேட்டார். இடது கால் செருப்பை போடுபவர் இன்றைக்கு லீவு சார்.  ஆனாலும் வந்திருப்பவர்கள் தங்கள் கடமையை ஒழுங்காகச் செய்கிறார்கள் என்றார் வேலையாள். எந்த ஒரு வேலையையும் ரசித்து, அனுபவித்துக் செய்யாமல் கடமைக்காக செயல்பட்டால் இப்படித்தான் ஆகும். விரைவிலேயே சலிப்பும் வெறுப்பும் கொண்ட இயந்திரமாக மாறிப் போவீர்கள்

யார் சொல்லியோ செய்யாமல் அதை நீங்களாக விரும்பி செய்தால் மட்டுமே உயர்வு உங்களைத் தேடிவரும். 

பெரும்பாலானோர் வெற்றி பெறும்போது சாதனையாகவும், தோல்வியுறும்போது  அதை விதியின் விளையாட்டாகவும் கருதுகிறார்கள். வெற்றிக்கு உரிமை கொண்டாடி மகிழும் நம் மனம் தவறு நடந்துவிட்டால் யார் மீது பழி போடலாம் என்று அலைபாய்கிறது.பொதுவாக பொறுப்பை ஏற்பது என்றால் சுமைகளை சுமப்பது என்று அர்த்தப்படுத்திக் கொள்கிறவர்கள்தான் நம்மில் அதிகம்.

இதையும் படியுங்கள்:
தன்னம்பிக்கையோடு தடைகளை தெறிக்கவிடுங்கள்!
Whatever is done as a duty, only fatigue remains!

விளக்கை யார் ஏற்றுவது, தண்ணீர் யார் பிடிப்பது, போன்ற சின்ன சின்ன விஷயங்களில் கூட கணவன் மனைவிக்கு இடையே சர்ச்சை ஏற்படுகிறது. வாசல் கதவை யார் திறப்பது என்பதில் கணவன் மனைவிக்கு சண்டை வந்தது. பிறகு ஒரு ஒப்பந்தம் செய்தனர். யார் வாய் திறந்து முதல் வார்த்தை பேசுகிறோமோ அவர்தான் எழுந்து பூட்ட வேண்டும் என முடிவு செய்தனர். அவ்வளவுதான் இருவருக்குள் பேச்சு வார்த்தை நின்றது. சாப்பாடு போடு என்று கணவனோ, சாப்பிட வரலாம் என்று மனைவியோ வாயைத் திறந்தால் கூட பூட்ட வேண்டிய பொறுப்பு வந்து விடுமே என்று இருவரும் பட்டினி கிடந்தனர். நள்ளிரவில் சில திருடர்கள் நுழைந்தார்கள்.  ஹாலில் உட்கார்ந்திருந்த தம்பதி கூச்சல் போடாமல் மௌனமாக வேடிக்கை பார்ப்பது கண்டு ஆச்சரயமடைந்தனர்.  வீட்டின் எல்லா பொருளையும். சுருட்டினர்  தம்பதியர் பேசாமல் இருக்கவே தைரியமாகி அந்த பெண்மணியின் காதிலிருந்து வைரத் தோட்டை கழற்றினான்.  அவள் குரல் கொடுக்கவில்லை ஆச்சர்யமடைந்த திருடன் கணவனின் முன் கத்தியைக் காட்ட அவர் எழுந்து நானே போய் பூட்டித் தொலைக்கிறேன் என்றார். இதுவா பொறுப்பு?. 

உங்களைச் சுற்றியுள்ள சூழ்நிலை உங்களுக்கு விருப்பமானதாக அமைத்துக் கொள்ளவேண்டும் என்றால் அதற்கான பொறுப்பை ஏற்க நீங்கள் தயாராக இருக்க வேண்டும்  அப்போதுதான் தோல்விகள் ஏற்பட்டாலும் அந்த வேதனை உங்களை பாதிக்காது. அந்தத் தோல்விகளை வெற்றிப் பாடங்களாக மாற்ற நீங்கள் கற்க முடியும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com