
நான் சொல்லப்போகும் கதையை அப்படியே கற்பனை செய்து பாருங்கள். இப்போது நீங்கள் ஒரு அழகான மான் குட்டி. யாருடைய வம்புக்கும் போகாமல் அமைதியாக புல் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறீர்கள். அப்போது திடீரென்று ஒரு சிங்கம் பாய்ந்து வந்து உங்களை கடித்து, கொன்று சாப்பிடுகிறது. இந்த கதையில் யார் வில்லன்?
கண்டிப்பாக அந்த சிங்கம் தான். எந்த வம்புக்கும் போகாத அப்பாவியான மானை கொன்றுவிட்டது. எனவே, அந்த சிங்கம் தான் வில்லன். இப்போது இதே கதையை கொஞ்சம் வேற கண்ணோட்டத்தில் பார்க்கலாம். இப்போது நீங்கள் தான் புல். அமைதியாக உங்கள் வேலையை பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள்.
அப்போது ஒரு மான் வந்து உங்களை கடித்து சாப்பிடுகிறது. அந்த சமயத்தில் தான் சிங்கம் வருகிறது. உங்களை கடித்து சாப்பிட நினைக்கும் அந்த மானை சிங்கம் கடித்து சாப்பிட்டு விடுகிறது. உங்கள் உயிரை சிங்கம் காப்பாற்றுகிறது. இந்த கதையில் யார் வில்லன்?
அமைதியாக வாழ்ந்துக் கொண்டிருந்த புல்லை கடித்து சாப்பிட வந்த அந்த மான் தானே வில்லன். அந்த மானை கொன்று உங்களை காப்பாற்றிய சிங்கம் உங்களுக்கு ஹீரோ. இவ்வளவு தான் வாழ்க்கை.
சிங்கத்திற்கு மான் வேண்டும். மானுக்கு புல் வேண்டும். புல்லுக்கு மண்ணில் இருக்கும் சத்துக்கள் வேண்டும். இந்த சிங்கிலியில் நீங்கள் எங்க இருக்கீங்களோ அதற்கு மேலே இருப்பவன் உங்களுக்கு வில்லன். இந்த உலகத்தில் நல்லவர்கள், கெட்டவர்கள் என்று யாரும் கிடையாது. நம்முடைய Survival தான் முக்கியம். தான் வாழ வேண்டும் என்பதற்காக என்ன வேண்டுமானாலும் செய்யும் கூட்டமே இங்கு அதிகம். அதனால் நாம இங்கே உட்கார்ந்துக் கொண்டு அவன் அப்படி பண்ணிட்டான், இவன் இப்படி பண்ணிட்டான் என்று சொல்லி புலம்புவது வீணாகும்.
இந்த கதை உண்மையாகவே நிகழ்ந்தது. Yellow stone national park என்ற இடத்தில் முதலில் Carnivorous விலங்குகள் இல்லாமல் புற்களை சாப்பிடும் விலங்குகளை மட்டுமே வைத்திருக்கிறார்கள். ஆகையால் அவை சென்று எல்லா புற்களையும் சாப்பிட்டதால், அந்த இடமே வறட்சியாகிவிட்டது. பிறகு அந்த இடத்தில் நரி கொண்டு வந்து விடப்பட்டது. அந்த நரிகள் புற்கள் சாப்பிடும் விலங்குகளை சாப்பிட ஆரம்பித்ததன் பலனாக அந்த இடம் பசுமையாக தொடங்கியிருக்கிறது.
அப்படி பார்த்தால் இந்த புற்களுக்கு ஓநாய்கள் பாதுகாவலன் என்று தானே சொல்ல வேண்டும். இன்னும் சில செடிகள் சிலவகை ரசாயனத்தை வெளியிடுமாம். அதனால் Carnivores விலங்குகள் வந்து அங்கு செடியை சாப்பிட வந்த விலங்கை கடித்து சாப்பிட்டு விடுமாம். எனவே, இனி புலம்புவதை விடுங்க Survive பண்ண கத்துக்கோங்க.