ஏன் யாருமே உங்களை கண்டு கொள்வதில்லை தெரியுமா?

Sad Man
Why Nobody Cares

உலகில் மக்கள் தொகை அதிகரித்துக் கொண்டே செல்கிறது. அதே நேரம் விஞ்ஞான வளர்ச்சியும் டிஜிட்டல் தளத்திற்கு மாறிவிட்டதால், அதிகப்படியான தகவல்கள் நமக்கு எளிதாகக் கிடைக்கின்றன. இதன் காரணமாகவே உங்களது எண்ணங்கள், உணர்வுகள் மற்றும் அனுபவங்களைப் பற்றி யாரும் பெரிதாகக் கண்டுகொள்வதில்லை. ஏனெனில், அவர்களுக்கு தினசரி அதிகப்படியான தகவல்கள் வந்து சேர்வதால், உங்களை சார்ந்த விஷயங்கள் பெரிதாகத் தெரிவதில்லை. 

குறிப்பாக, தொழில்நுட்பம் மற்றும் சமூக ஊடகங்களின் வருகைக்குப் பிறகு, ஒவ்வொரு நாளும் எக்கச்சக்கமான தகவல்கள் நமக்கு வந்து சேர்கிறது. இன்ஸ்டாகிராம் பக்கம் சென்றால் ரீல்ஸ்களை தள்ளிப் பார்ப்பதிலேயே நேரம் போய்விடுகிறது. அதில் தேவையில்லாத பல தகவல்கள் நம் மூளைக்குள் செல்கிறது. இதுபோன்ற தொடர்ச்சியான செய்திகள், புதுப்பிப்புகள் மற்றும் உள்ளடக்கங்கள் ஆகியவை ஒரு தனி நபரின் கவனத்தை முற்றிலுமாக சிதைக்கிறது. இதுவே நம்மை முக்கியமான விஷயங்களின்மீது கவனம் செலுத்த முடியாமல் செய்துவிடுகிறது. 

சமூக வலைதளங்களில் சுய விளம்பரத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பதைப் பார்க்கும் மக்கள், தங்களது சொந்த வாழ்க்கை இலக்குகள் மற்றும் வேலைகளில் அதிக கவனம் செலுத்துகின்றனர். இந்த மனப்பான்மை மற்றவர்கள் மீதான ஆர்வத்தைக் குறைக்கிறது. இதனாலேயே ஒருவர் செய்யும் விஷயங்களை மற்றொருவர் கவனிக்கத் தவறிவிடுகிறார். 

பலருக்கு தங்களது தனிப்பட்ட வாழ்வில் பல பிரச்சினைகள் இருப்பதால், சுற்றி இருக்கும் விஷயங்களை கவனிக்க முடிவதில்லை. எதிர்மறையான செய்திகள், தனிப்பட்ட போராட்டங்கள் மற்றும் அன்றாட வாழ்க்கையின் தேவைகள் போன்றவை பலரை போட்டு அழுத்திக் கொண்டிருக்கின்றன. இதன் விளைவாக அவர்கள் மற்றவர்களின் கவலைகளைப் பற்றி பெரிதாகக் கண்டுகொள்ள மாட்டார்கள். ஏனெனில் அவர்களது வாழ்க்கையே கவலையாக இருக்கிறது. 

டிஜிட்டல் துறையின் எழுச்சி நாம் மற்றவர்களுடன் எவ்வாறு தொடர்பு கொள்கிறோம் என்பதில் பெரும் புரட்சியை ஏற்படுத்தியுள்ளது. அப்போதெல்லாம் ஒருவரை சந்திக்க வேண்டுமென்றால் நேரில் போய் தான் சந்திப்போம். ஆனால் தற்போது ஸ்மார்ட் போனை கையில் எடுத்து வீடியோ கால் செய்து உலகில் எந்த மூலையில் இருக்கும் நபரையும் பார்த்துவிடலாம். இது உறவுகளுக்கு மத்தியில் பிணைப்பை முற்றிலுமாக நீக்கிவிட்டது. ஆன்லைன் மூலம் தொடர்பு கொள்வதில் நேருக்கு நேர் உரையாடும் நெருக்கம் இல்லாததால், மக்கள் உண்மையிலேயே ஒருவர் மீது ஒருவர் அக்கறை இல்லாமல் மாறிவிட்டனர். 

இதையும் படியுங்கள்:
நீங்க ஒரு‌ 5 Seconds மார்ஸ் கிரகத்துல இருந்தா என்ன ஆகும் தெரியுமா? 
Sad Man

மேலும், வெற்றி பெறும் ஒருவரை மட்டுமே மதிக்கும் இந்த சமூகத்தில், எதையும் சாதிக்காமல் இருப்பவர்கள் பலவீனமாகவே உணரப்படுகிறார்கள். வெளியே சென்று பிறர் மீது அக்கறை செலுத்தினால் நாம் வெற்றி பெறவில்லை என்பதற்காக நம்மை உதாசீனப்படுத்தி விடுவார்களோ என்கிற எண்ணம் பலரிடம் உள்ளது. இதன் காரணமாகவே பலர் பிறரை கண்டுகொள்ளாமல் அவர்களது வாழ்க்கை மீது மட்டுமே அக்கறை கொண்டவர்களாக இருக்கின்றனர். 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com