
இரண்டாம் உலகப்போரின் நாயகனாக கருதப்படும் வின்ஸ்டன் சர்ச்சிலின் 150ஆவது பிறந்தநாள் பிரிட்டனில் இந்த ஆண்டு முழுவதும் கொண்டாடப்படுகிறது. உலக வரலாற்றில் தனித்துவமிக்க தலைவராக சர்ச்சில் போற்றப்படுகிறார். வின்ஸ்டன் சர்ச்சில் தமது காலத்தில் வெளிப்படுத்திய பேச்சுகள், எழுத்துகளில் சில கூற்றுகள் காலம் கடந்தும் மேற்கோள்களாக நினைவு கூறப்படுகின்றன. அவற்றின் தொகுப்புதான் இந்த பதிவு.
“போரைப் போன்றே அரசியலும் அபாயகரமானது... போரில் கூட நீங்கள் ஒருமுறைதான் கொல்லப்படுவீர்கள். அரசியலிலோ பலமுறை சாக நேரிடும்.”
எதையும் போராடித்தான் வெல்லவேண்டும். பட்டம் காற்று வீசும் திசையில் பறப்பதில்லை. காற்றை எதிர்த்துதான் மேலே எழும்பி பறக்கிறது.
எதிர்மறையான சிந்தனையாளன் ஒவ்வொரு வாய்ப்பிலும சிக்கலைப் காண்கிறான். ஆனால் நேர்மறை சிந்தனையாளன் ஒவ்வொரு சிக்கலிலும் ஒரு வாய்ப்பை காண்கிறான்.
உங்களிடம் ஏற்படும் மனமாற்றம் சிறியதாக இருக்கலாம். ஆனால் அது மிகப்பெரிய வித்தியாசத்தை ஏற்படுத்தும்.
மாற்றங்கள் அனைத்தும் முன்னேற்றத்தைக் குறிக்காது. ஆனால், முன்னேறுவதற்கு நீங்கள் மாறவேண்டியது அவசியம்.
ஒரு தோல்வியில் இருந்து மற்றொரு தோல்விக்கு உற்சாகத்தை இழக்காமல் முன்னேறும் திறன்தான் வெற்றி.
பயம் என்பது எதிர்வினை. வீரம் என்பது தீர்மானத்தின் பிரதிபலன்.
தொடர் முயற்சிகளே முழுதிறனை வெளிக்கொண்டு வரும். வலிமையோ, அறிவோ அல்ல/
சுதந்திரத்திற்காகப் போராடாதவர்களுக்கு வரலாறு கருணை காட்டாது.
"அதிகாரம் அபாயகரமானது. அதை அடைந்தவர்களை அது துஷ்பிரயோகம் செய்ய வைக்கும். அடைய நினைப்பவர்களை தன்னிலை மறந்தவர்களாக மாற்றும்."
உயிருள்ளவரை நம்பிக்கை இருந்துகொண்டே இருக்கும், முடியும் என்று நம்புவோர்க்கே எதுவும் முடியும்.
வெற்றி என்பது இறுதியானதல்ல. தோல்வி என்பது வாழ்வின் முடிவும் அல்ல. தொடர்ந்து போராடும் துணிச்சலே முக்கியமானது.
மனோபாவம் என்பது சின்ன விஷயம்தான். ஆனால் அது மிகப்பெரிய மாற்றங்களை ஏற்படுத்தும்.
உங்களுக்கு எதிரி இருக்கிறாரா? நல்லது. அப்போதுதான் வாழ்வில் ஏதாவது ஒன்றிலாவது நீங்கள் எழுந்து நிற்க முடியும்.
தோல்வியிலிருந்து தோல்விக்கு எந்த விதமான ஆர்வக் குறையும் இல்லாமல் செல்வதே வெற்றி.
முட்டாள்களின் நாட்டில் கயவர்கள்தான் செல்வந்தர்கள்.