சந்தோஷமாக கிச்சனில் வேலை செய்ய நாம் பின்பற்ற வேண்டிய விதிகள்!

Kitchen
Kitchen
Published on

தமிழ்நாடு, இந்தியா என்று இல்லாமல் உலக அளவில் பார்த்தாலும் பெண்கள் தான் சமையலை செய்ய வேண்டியதாக இருக்கிறது. வீட்டினருக்கு என்று மட்டும் இல்லாமல் வெளியில் எங்கு சென்றாலும், நம் வீட்டிற்கு விருந்தினர் வந்தாலும், நாம் மற்றவர்கள் வீட்டிற்கு விருந்தினராகச் சென்றாலும், நமக்கு உடல்நிலை சரியென்று இல்லை என்றாலும், வீட்டினருக்கு சரியில்லை என்றாலும் சமையலை கவனிப்பது என்னவோ மொத்தத்தில் பெண்கள்தான்.

காலம் மாறி விட்டது. பெண்கள் முன்னேறி விட்டார்கள். ஆண்களும் இப்பொழுது கிச்சனில் உதவுகிறார்கள் என்று கூறினாலும் சமையலறை என்பது என்னவோ எழுதப்படாத விதியாக பெண்களின் கையில் தான் இருக்கிறது என்ற உண்மையை யாராலும் மறுக்க முடியாது.

அதை செய்யவில்லை என்றாலும் வேறு எதை செய்வது என்று தோன்றும். அதை தொடர்ந்து செய்யும் பொழுது சில நேரங்களில் சலிப்பு, வெறுப்பு ஏற்படுவது உண்டுதான். எப்பொழுதும் நாமே சமைக்க வேண்டி இருக்கிறதே வேலைக்கு போனாலும் போகாவிட்டாலும் என்று அதிகமாக எண்ணத் தோன்றும். என்றாலும் சமையலறைக்குள் அடுத்த நாள் நுழைவது நாம் தானே. அதற்கு கிச்சனை நமக்கு பிடித்த மாதிரி வைத்துக் கொள்வது அவசியம். தினசரி வேலையை எப்படி தொடங்கினால் விருப்பமுடன், விறுவிறுப்பாக, எல்லோருக்கும் பிடித்த மாதிரி சமையலை செய்யலாம் என்பதற்கான விதிமுறைகளை இதில் காண்போம்.

என்ன சமையல்: காலையில் எழுந்ததும் எல்லோருக்கும் இன்று என்ன சமைப்பது என்பது தான் பெரிய கேள்விக்குறியாக இருக்கும். அதற்கு ஒரு வாரத்திற்கான சமையலை வீட்டினர் அனைவரும் ஒன்றாக சேர்ந்து பேசி எந்தெந்த நாளில் என்னென்ன சமைக்கலாம் என்று பேசி முடிவு செய்து வைத்துக் கொள்ளலாம்.

குழந்தைகளுக்கு பிடித்ததை அவர்கள் கூறுவார்கள் கணவரும் கூறுவார். இதனால் சமையல் எளிதாகும். இன்று வீட்டில் இதுதான் சமையல் என்று குழந்தைகளுக்கும் மைண்ட் செட் வந்து விடும். புரிந்து கொள்வார்கள். இதனால் எனக்கு இது வேண்டும் அது வேண்டும் என்று அடம் பிடிக்க மாட்டார்கள். இதனால் பிரச்சனை வராது.

வீட்டில் கணவர் ஒரு வாரத்திற்கு தேவையான சமையல் பொருட்களை பட்ஜெட் போட்டு வாங்கி வைப்பதற்கு வசதியாக இருக்கும். வீட்டில் உள்ள கணவர் மற்றும் குழந்தைகள் அனைவரும் இன்று இதுதான் சமையல் என்பதில் தீர்மானமாக இருப்பதால் கிச்சனுக்குள் நுழையும்போது பெண்களுக்கு சமைப்பதற்கு சந்தோஷமாக இருக்கும்.

தூக்கம்: முதல் நாள் இரவு ஒன்பது மணிக்குள் வேலைகளை எல்லாம் முடித்துவிட்டு 10 மணிக்குள் தூங்கி விட்டால் அடுத்த நாள் காலையில் எழுவது எளிதாக இருக்கும். எழுந்து காலையில் இயற்கை ரசிப்பதற்கு ஒரு அரிய சந்தர்ப்பமாக அது அமையும். புது நாளோட காற்று சூரிய ஒளியை ரசிப்பதற்கும், படுக்கையில் இல்லாது கவனமாக, ஆர்வமாக வேலை செய்வதற்கும் மகிழ்ச்சி அளிக்கும். அப்படியே எழுந்து என்ன சமையலைதானே பார்க்க போகிறோம்.

நம்மை என்ன பாராட்டவா போகிறார்கள் என்று தானே நினைக்கிறீர்கள். அப்படி பாராட்ட வேண்டும் என்ற அவசியம் இல்லை. அன்று சமையலை சரியாக முடிக்கவில்லை என்றாலும் வீட்டில் உள்ள கணவர் குழந்தைகள் நன்றாக சாப்பிடாமல் பள்ளி, அலுவலகத்திற்கு சென்று விட்டாலும் நம்மால் தானே அவர்கள் சரியாக சாப்பிடாமல் போய்விட்டார்கள் என்ற குற்ற உணர்வு உளவியல் ரீதியாக நம்மை துன்புறுத்தும். அன்று நாள் முழுவதும் வேறு எந்த வேலையிலும் ஈடுபட முடியாமல் தவிப்போம்.

ஆதலால் காலையில் சீக்கிரமாகவே எழுந்து சமையலை முடித்து விட்டால், சமையலை நன்றாக செய்து அவர்களை நல்ல முறையில் வழி அனுப்பி வைத்து விட்டால், மற்ற நமக்கு பிடித்த வேலைகள் செய்வதற்கு நேரம் கிடைக்கும். அதில் நம்மை நாம் புத்துணர்ச்சியுடன் வைத்துக்கொள்ளலாம். நல்ல கான்ஃபிடன்ட், புதுப்புது ஐடியா எல்லாம் இதனால் கிடைக்கப் பெறலாம். ஆதலால் காலையில் சீக்கிரம் எழுவது மிக மிக அவசியம்.

குளியல்: புத்துணர்ச்சியில் 50 சதவீதம் சுத்தத்தை கடைபிடிப்பதில் அடங்கியிருக்கிறது என்று வைத்துக் கொள்ளலாம். காலையில் தூங்கி எழுந்தவுடன் குளித்து விட்டால் உடலில் உள்ள கழிவுகள் எல்லாம் வெளியேறி நமக்கு நல்ல புத்துணர்ச்சி கிடைக்கும் . இரவில் தான் உடலில் உள்ள செல்களில் கழிவுகள் எல்லாம் ரீ ஜெனரேட் ஆகி தேங்கி இருக்கும்.

தேங்கியிருந்த கழிவுகள் எல்லாம் வெளியேறி விட்டால் நம்மை சுறுசுறுப்புடன் இயங்க வைக்கும். பரபரப்பா வேலை செய்யும் பொழுது ஏற்படும் வியர்வை எல்லாம் வெளியேறி விட்டால் பிரஷ்ஷாக இருப்போம். இதனால் சமையலை கவனம் சிதறாமல் செய்ய முடியும். இதற்கு குளியல் மிக மிக அவசியம்.

இதையும் படியுங்கள்:
நாளை கார்த்திகை மாத மூன்றாம் பிறை: மாலை 6 மணிக்கு மேல் கடன் வாங்காதீங்க!
Kitchen

ஆர்கனைஸ்டு: சமைப்பதற்கு ஸ்டவ்வை பற்ற வைப்பதற்கு முன்பாகவே சமைக்க வேண்டிய பொருட்களை எல்லாம் எடுத்து வைத்துக் கொண்டு விட வேண்டும் .அடுப்பை பற்ற வைத்துவிட்டு மற்ற பொருட்களை தேடினால் எதையும் சரிவர செய்ய இயலாது. டென்ஷன் தான் கூடும். சமையல் பொருட்களும் கருகி வீணாகும். ஆதலால் A-z தேவையான பொருட்களை சரியாக எடுத்து வைத்துக் கொண்டு சமையலை தொடங்குவோமானால் பதட்டமில்லாமலும் சமைக்கலாம்.

சமைக்கும் பதார்த்தம் அனைத்தும் நல்ல டேஸ்டாகவும் இருக்கும். ஹோட்டலில் சமைப்பவர்கள்(Mise en place) மீசன்லா என்பவற்றை பின்பற்றுவார்கள். அது பொருட்களை கட்டுக்கோப்பாக வைத்திருப்பதை குறிக்கும். நாமும் அப்படி வைத்துக் கொண்டால் சமைப்பதுஎளிது.

சுத்தம் மிகவும் முக்கியம். சமைத்து முடித்தவுடன் அந்தந்த பொருட்களை எடுத்த இடத்தில் வைத்து விட வேண்டும் .காய்கறி தோல்களை குப்பையில் போட வேண்டிய இடத்தில் போட்டு விட வேண்டும். இதனால் எப்பொழுதும் கிச்சன் பார்ப்பதற்கு சுத்தமாக இருக்கும் .யாராவது வந்தாலும் கஷ்டமாக இருக்காது. நம் மனதும் நன்றாக கிச்சனை வைக்கவில்லையே என்று சங்கடப்படாது. ஆரோக்கியம் மேம்படும் .அடுத்த நாள் சமைப்பதற்கும் இது ஏதுவாக இருக்கும்.

இதையும் படியுங்கள்:
கார்த்திகை மாத உதயோக சஷ்டி விரதம்: வழிபாட்டு முறைகளும் பலன்களும்...
Kitchen

எல்லாவற்றுக்கும் மேலாக மாதத்தில் ஓரிரு நாட்கள் ஹோட்டலுக்கு சென்று சாப்பிடுவதை பழக்கமாக வைத்துக் கொண்டால் அடுத்த நாட்களில் வீட்டில் சமையல் செய்வதை உத்வேகமாக செய்ய முடியும். குழந்தைகளும் நன்றாக என்ஜாய் பண்ணுவார்கள் .வீட்டில் இருக்கும் ஆண்கள் இதைப் புரிந்து கொண்டு அம்மாவையோ மனைவியையோ குடும்பத்துடன் ஒருமுறை வெளியில் சாப்பிட அழைத்துச் சென்றால் உங்களுக்கும் நிம்மதி அவர்களுக்கும் சந்தோஷம் கிடைக்கும்.

அப்படியெல்லாம் செய்ய முடியாது என்று கூறுபவர்கள் மேலே கூறிய கருத்துகளை எல்லாம் நினைவில் வைத்து சமையலை சந்தோஷமாகவும் , எளிமையாகவும் ,விருப்பமுடனும் செய்து முடிக்கலாம். இதனால் வெறுப்பு சலிப்போ வராதவாறு பார்த்துக் கொள்ள முடியும்.

இதையும் படியுங்கள்:
பிஃபா தீம் பாடலை உருவாக்கிய மயிலாடுதுறை இளைஞர்கள்!
Kitchen

குறிப்பாக ஒரு வாரத்திற்கு நீங்கள் சமைப்பது என்னென்ன என்பதை தீர்மானிக்கும் பொழுது அதை வெரைட்டியாகவும், எல்லோருக்கும் பிடித்த விதத்திலும், ஹெல்தியாகவும், டேஸ்ட்டாகவும், கிரியேட்டிவ் ஆகவும் சமைப்பது மிக மிக அவசியம்.

தினசரி இதையெல்லாம் ஒரு ஹாபிட் ஆக கொண்டு வந்தால் சமையல் செய்யும் பொழுது இன்ட்ரஸ்ட் ஆக இருக்கும். கடுப்போ வெறுப்போ வராது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com