பிஃபா தீம் பாடலை உருவாக்கிய மயிலாடுதுறை இளைஞர்கள்!

பிஃபா தீம் பாடலை உருவாக்கிய மயிலாடுதுறை இளைஞர்கள்!
ஆர்.ஜெயலட்சுமி

ஆர். ஜெயலட்சுமி திருநெல்வேலி ஊர்.மங்கையர் மலரின் முப்பது வருட வாசகியும் எழுத்தாளரும் நான். எனது அம்மா முதலில் மங்கையர் மலரில் எழுதி வந்தவர் அதை தொடர்ந்து நானும் எழுதுகிறேன்

Updated on: 

கத்தாரில் நடைபெற்ற பிஃபா கால்பந்து போட்டிக்காக தமிழர்கள் உருவாக்கிய தீம் பாடலை அந்நாடு தனது தேசிய தொலைக்காட்சியில் ஒளிபரப்பி கெளரவப் படுத்தியுள்ளது. கத்தாரில் பல்லாயிரக்கணக்கான இந்தியர்கள் குறிப்பாக தமிழர்கள் பணியாற்றி வருகின்றனர். கத்தார் – உலக கால்பந்து போட்டிக்காக ‘கத்தார் தமிழர்கள் கலாசார பேரவை’ குன்ஷாகிரான் எனும் ஆங்கில தீம் பாடலை வெளியிட்டது. கத்தாரில் பணியாற்றம் மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலத்தை சேர்ந்த சாதிக்பாட்ஷா இப்பாடலை இயக்கி உள்ளார். மயிலாடுதுறையைச் சேர்ந்த சாம் ஜோசப்பின் பாடல்வரிகளை எழுத, பாடகர் ஆனந்த் அரவிந்தாக்சன் பாடியுள்ளார்.