பெண்களின் மகிழ்ச்சி இந்த 5 ல் இருக்கிறது!

motivation article
motivation articleImage credit - pixabay
Published on

ண்கள் பெண்கள் இருவரில் யார் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள் என்று ஒரு கேள்வியை முன் வைத்தால் 70% பேர் சொல்லும் பதில் ஆண்கள்தான். ஆனால் பெண்களுக்கு மகிழ்ச்சி வரும் சூழ்நிலைகள் குறைவே அதற்கு மிக முக்கிய காரணம் அவர்களின வாழ்வியல் கட்டமைப்புதான்.

ஒரு ஆண் தன்னை உற்சாகமாக வைத்துக் கொள்ள தவறுவதில்லை. ஆனால் ஒரு பெண் இந்த சமுதாயத்திற்கும் தன்னை சுற்றி இருக்கும் சூழ்நிலைக்கு வளைந்து நெளிந்து கொடுத்து செய்வதால் உற்சாகமாக இருப்பதற்கான சூழ்நிலையை அவள் இழக்கிறாள்.

பெண்களும் சில விஷயங்களை கடைப்பிடித்தால் எப்பொழுதும் மகிழ்ச்சியாக இருக்கலாம் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. கீழே கொடுக்கப்பட்டிருக்கும் 5 குறிப்புகளை படியுங்கள். உங்கள் மனதில் ஒரு தெளிவான முடிவு கிடைக்கும். பிறகு பாருங்கள் பெண்களே உங்கள் மனதிலும் எப்பொழுதும் மகிழ்ச்சியும் உற்சாகமும் குடிகொண்டிருக்கும்.

1- ஒரு வழிகாட்டியைக் கண்டுபிடிக்கவும்:

ஒரே மாதிரியாகச் சிந்திப்பவர்களுக்கு இடையில் ஈர்ப்பு ஏற்படுவது இயல்பு. பெண்கள் தமக்கான வழிகாட்டியைக் கண்டறிவது அவர்களுக்கு மிகப்பெரிய பலம். எல்லாச்சூழலிலும் சிறந்த முடிவுகளை எடுக்க வழிகாட்டிகளே உதவுகின்றனர். இந்த முடிவுகள் மகிழ்ச்சியான வாழ்க்கைச் சூழலை உங்களுக்கு அளிக்கும். உங்களைப் போன்ற வாழ்க்கைப் பின்னணியும், அனுபவமும் உள்ளவர்களிடம் ஆலோசனை கேட்கத் தயங்காதீர்கள். உங்களது பலவீனங்களை அடையாளப்படுத்தி அவர்கள் மனக்கசப்பை ஏற்படுத்தமாட்டார்கள். அதேபோல் உங்களது கருத்துகளை ஏற்றுக்கொள்வதிலும் அவர்கள் வெளிப்படையாக இருப்பார்கள்.

2-பொழுதுபோக்கு அல்லது ஆர்வத்தைப் பெறுங்கள்:

ஆழமான திருப்தியே உங்களுக்கு அதிகளவு மகிழ்ச்சியைக் கொடுக்கும். அப்படி உங்களுக்கே என்று பிடித்தமானவற்றைக் கண்டறிந்து பட்டியலிடுங்கள். விளையாட்டு, கலை, இலக்கியம், சமையல், இசை, கார்டனிங் என்று எதுவாகவும் இருக்கலாம். ஆர்வம் அல்லது பொழுதுபோக்கில் ஈடுபடும்போது மனம் ரிலாக்ஸ் ஆகும். இந்த வேலைகளில் ஈடுபடும்போது உங்களுக்கு நேரம் போவதே தெரியாது.

3 -சுயமரியாதையை வளர்த்துக்கொள்ளுங்கள்:

மூளையின் ஒரு பகுதியாக இருக்கிறது முன்புற சிங்குலேட் கார்டெக்ஸ், பெண்களுக்கு மூளையின் இந்தப் பகுதி, உண்மையில் ஆண்களுக்கு இருப்பதைவிடப் பெரியது. எனவே இது எதிர்மறையான எண்ணங்களைப் பெண்களுக்கு உருவாக்கும். அழகு, திறமை மற்றும் புத்திசாலித்தனம் பற்றிய சந்தேகங்களையும் ஏற்படுத்தும். எனவே உங்கள் சுயமரியாதையைச் சிதைக்கும் அனைத்துச் சந்தேகங்களுக்கும் நாம்பியல் விளக்கம் இருக்கலாம். சுயமரியாதையை வளர்த்துக்கொள்வதில் எப்போதும் கவனமாக இருங்கள்.

4-அன்பான உறவுகளை மறந்துவிடாதீர்கள்:

மகிழ்ச்சியான பெண்கள் எப்போதும் அன்பான உறவுகளுக்குச் சொந்தக்காரர்களாக உள்ளனர். சரியான காலணியை அணிய முடியவில்லை என்று வருத்தப்படுவதை விட, அதைத் தூக்கி எறிந்துவிட்டு பொருத்தமான காலணியை அணிவது நிம்மதி அல்லவா! இதுபோன்ற சின்னச்சின்ன சங்கடங்களைப் பற்றி யோசித்துக் கொண்டிருக்காமல் பெரிய இலக்குகளை உருவாக்கி, அவற்றை அடைய முயற்சி செய்யுங்கள். அன்பான உறவுகள் பெரிய இலக்குகளை அடைய உதவியாக இருப்பார்கள்.

இதையும் படியுங்கள்:
தொடர் முயற்சிகளால் திறக்கப்படும் இறைக் கதவுகள்!
motivation article

5- நன்றியுடன் இருங்கள்:

மகிழ்ச்சியான பெண்கள் எப்போதும் நன்றியுடன் இருப்பார்கள். நன்றிக்கு உரியவர்களின் பெயர்களை நினைவு கூரலாம். வாழ்க்கை ஒரு விலை மதிப்பற்ற பரிசு என்று நினைப்பது முக்கிய விஷயம். உங்களால் முடிந்தவரை இந்த வாழ்க்கையில் இதுவரை உணர்ந்த மகிழ்ச்சியான தருணங்களுக்காக நன்றி சொல்லுங்கள். மகிழ்ச்சி பல மடங்காக அதிகரிக்கும்.

எல்லா உணர்வுகளைப் போலவே மகிழ்ச்சியும் முக்கியம். மகிழ்ச்சியாக இருப்பதற்கான உரிமை ஆணுக்கும் பெண்ணுக்கும் பொதுவானது. சிறு தயக்கமும் இன்றி உங்களது மகிழ்ச்சியைப் புன்னகையால் வெளிப்படுத்துங்கள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com