உழைப்பே உயர்வு தரும்!

brooklyn bridge
brooklyn bridge

நாம் உழைக்கும் உழைப்புக்கு ஏற்றவாறு தான் நமக்கு தேவையான பணமும் நிம்மதியான வாழ்க்கையும் கிடைக்கும். சில நொடிகளை கூட வீணாக்காமல் நாம் உழைக்கும் உழைப்பில்தான் நம் குடும்பத்திற்கு தேவையான அனைத்தையும் நிறைவு பெற வைக்க முடியும். 

உழைப்பு  அது நம்மைச் சூழும் கவலைகளிலிருந்து நம்மை அணுகும் அற்ப துன்பங்களிலிருந்தும் நம்மை தாக்கும் தீய எண்ணங்களில் இருந்தும் விடுதலை அளிக்கிறது.

தனக்கு கிடைக்கும் ஊதியத்தின் மதிப்பை விட தன்னுடைய உழைப்பின் மதிப்பை உயர்த்திக் காட்டும். மனிதன் தான் சமூகத்தில் முன்னேற முடியும் உழைப்பின் பயனை விட உழைப்பே இன்பமாக இருக்கிறது. வெற்றியை விட போராட்டமே இன்பமாக இருக்கிறது எந்த உழைப்பின் பயனாக உபயோகமான பொருள் ஏதேனும்  உண்டாக்கப்படுகிறதோ அதுவே உண்மையான உழைப்பு எனப்படும்.

உழைப்பின் மேன்மையை விளக்கும் அற்புதமான இந்த சம்பவம் ஒரு உதாரணமாக சொல்லலாம்  அமெரிக்காவின் புரூக்ளின் பாலம்  ஒரு உலக அதிசயம். இடையில் நிறைய தூண்கள் இல்லாமல் இரும்பு கம்பிகளின் பிணைப்புடன் நிற்கும் வித்தியாசமான பாலம் அது. ஜான் ரோப்லிங் என்ஜினியர் அதற்கான வடிவமைப்பை உருவாக்கி கட்ட ஆரம்பித்தபோது இது சாத்தியமே இல்லை இப்படியெல்லாம் பாலம் கட்ட முடியாது என நிபுணர்கள் பலரும் தடுத்தனர். ஆனால் ரோப்லிங்கும் அவரது மகன் வாஷிங்டனும் உறுதியாக இருந்து வேலையை ஆரம்பித்தனர். பாலம் கட்டும் பணி பரபரப்பாக ஆரம்பமானது ஆனால் ஒரு மோசமான விபத்து நிகழ்ந்து ரோப்லிங் இறந்துவிட்டார்.

மகன் வாஷிங்டன் படுகாயங்களுடன் பிழைத்தார் ஆனால் அவரால் படுத்த இடத்திலிருந்து அசையக் கூட முடியவில்லை. பேசவும் இயலவில்லை. அவரால் ஒற்றை விரலை மட்டுமே அசைக்க முடிந்தது.

இதையும் படியுங்கள்:
நயாகரா நீர்வீழ்ச்சியை வற்ற வைத்ததன் காரணம் தெரியுமா?
brooklyn bridge

வாஷிங்டன் அந்த ஒற்றை விரல் மூலம் தன் மனைவியுடன் தகவல்களை பரிமாறிக் கொள்ள வழி கண்டுபிடித்தார். விரலால் அவர் காட்டிய செய்கைகள் மனைவிக்கு புரிந்தன. மனைவி மூலம் தகவல் அனுப்பி  இன்ஜினியர் களை வரச்சொன்னார் வாஷிங்டன் விரலால் தகவல் சொல்ல வேலைகள் மீண்டும் நடந்தன 13 ஆண்டுகள் தன் விரல் மூலமே அவர் வழிகாட்டுதல்களை சொல்ல பாலம் முழுமை பெற்றது.

140 ஆண்டுகள் கடந்தும் கம்பீரமாக நிற்கிறது அந்த பாலம். மோசமான தருணங்களிலும் முயற்சியைக் கைவிடக்கூடாது தொடர்ந்து உழைத்தால் எதுவும் சாத்தியம் என்பதே புரூக்ளின் பாலம் சொல்லும் பாடம். உழைப்பின் மேன்மையை பார்த்தீர்களா உழைப்பே என்றும் உயர்வு தரும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com