கவலையும் அச்சமும் நம்மை முன்னேற விடாமல் தடுக்கும்!

Motivation Image
Motivation Imagepixabay.com

ம்மை கோழையாக்குவதும் பயம்தான். நம்மை குற்றச் செயல்களில் இருந்து தற்காப்பதும் பயம்தான்...!

இரண்டு விதத்தில் பயம் ஏற்படுகிறது. ஒன்று ஆழ்மனதில் பதிந்துவிட்ட நிரந்தர பயம். மற்றொன்று, அவ்வப்போது ஏற்படும் ஆனால் மறைந்து விடும் தற்காலிக பயம். எதற்கெடுத்தாலும் பயப்படுபவராக இருப்பவர்கள். அதுவே அவரை மனநலம் குன்றியவராக ஆக்கிவிடும்.

சிறுவயதில், நம்மை அடக்க அல்லது கீழ்ப்படிய வைக்க “பூச்சாண்டி’ காட்டுவது நடைமுறை வழக்கம் என்றாலும், அதுவும் ஒருவகையில் மனதளவில் நம்மை பாதிக்க வைக்கும் செயல்தான்.

பெரியவர்களான பிறகு சிலர் எதற்கெடுத்தாலும் பயப்படுவதற்கும் அச்சப்படுவதற்கும் அடிப்படைக் காரணமே அதுதான். இது வளர வளர பின்னாளில் மனோவியாதியாக மாறுவதற்கும் வாய்ப்புண்டு.

பயம் என்பது 'சுவற்றில் ஒட்டிய சுண்ணாம்பு போல', பலமாக தட்டினால் பட்டென்று விழுந்துவிடும். அது போல துணிச்சலுடன் எதிர்கொண்டால் எந்த விதமான பயத்தையும் வெல்லலாம்.

மனதில் தோன்றும் பயத்தை தடுமாற்றமின்றி, தன்னம்பிக்கையோடு துணை கொண்டு, மன உறுதியுடன் செயல்பட்டால் பயத்தை வெல்வது உறுதி.

இதையும் படியுங்கள்:
நியாசினமைடின் நன்மைகள் பற்றி தெரியுமா?
Motivation Image

பய உணர்வு ஏற்படும் நேரங்களில், பயம் நீங்கி தைரியம் பெறும் வகையில் மனத்தில் ஓடும் எண்ணத்தையும், சுற்றுப் புற சூழ்நிலைகளையும் சமயத்திற்குத் தகுந்தாற்போல் மாற்றிக் கொள்ள வேண்டும். பயத்தை எப்படி வெற்றி கொள்வது என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள். வீணான அச்சத்திற்கு ஒருபோதும் இடம் தராதீர்கள்.

கவலையும், அச்சமும்தான் ஒரு மனிதனை முன்னேற விடாமல் கீழே பிடித்துத் தள்ளுகிறது என்பதை நினைவில் கொள்ளுங்கள் எப்பொழுதும் நினைவில் கொள்ளுங்கள்.

மொத்தத்தில் எப்படியாவது பயம் உங்களைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்கு முன் பயத்தை உங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வாருங்கள். முடிவில் பயம் அர்த்தமற்றது என்பதை நீங்கள் கண்டிப்பாக உணர்வீர்கள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com