ரொம்ப டல்லா இருக்கீங்களா இதை செய்யுங்க போதும்!

motivation article
motivation articleImage credit - pixabay
Published on

நாம் உற்சாகம் இழந்தால் நமக்கு அனைத்துமே தோல்வியில்தான் முடியும். அதிலும் சிலர் எப்பொழுதுமே டல்லாகவே இருப்பார்கள் இப்படி இருப்பவர்கள் எந்த காரியத்தை எடுத்து செய்தாலும் அந்த காரியம் முழுமை பெறாது என்பது அவர்களுக்கும் தெரியும் ஆனாலும் ஏனோ தெரியவில்லை அந்த சோம்பேறித்தனம் அவர்களை தொற்றிக் கொண்டிருக்கும். 

பணியாற்றும் இடத்திலும் சரி, வீட்டிலும் சரி வெளியிலும் சரி எங்காக இருந்தாலும் நாம் சோர்வாக காணப்பட்டால் அது நமக்கு பின்னடைவுதானே தவிர ஒரு முன்னேற்றமும் கிடையாது.

வலியில்லாமல் எதுவும் கிடையாது. எனவே வருத்தத்தை விடுங்க. தோல்வி இல்லாமல் வெற்றி கிடையாது. எனவே எரிச்சலை விடுங்க. சோர்வு இல்லாமல் மகிழ்ச்சி கிடையாது. எனவே கவலையை விடுங்க. ரொம்ப சிம்பிளான விஷயம்ங்க வாழ்க்கை. எடுத்துக்கிற விதத்தில்தான் அது இருக்கு.

எதுவும் சிரமம் இல்லங்க. நாம நினைச்சா எதையும் ஈஸியா செய்யலாம். முயற்சி இருந்தால் வெற்றி நிச்சயம். தோல்வியைக் கண்டு துவளாமல் தன்னம்பிக்கையோடு உங்கள் முயற்சியைத் தொடருங்கள். விரைவில் வெற்றி உங்கள் வசமாகும். எந்த ஒரு செயலையும் மனப்பூர்வமாக செய்யும்போது அதில் வெற்றி நிச்சயம் அடைவீர்கள்.

நம்மால் வெற்றி அடைய முடியவில்லையே என்று நினைத்து சோர்வு அடையாமல் வெற்றியை எதனால் தவறவிட்டீர்கள் என்ற காரணத்தை ஆராய்ந்து அதை சரி செய்தால் வெற்றி என்றும் உங்கள் வசம்தான். தோல்வி அடைவதில் தவறில்லை ஆனால் தோற்றுக் கொண்டே இருப்பதுதான் தவறு. சிலந்தி தன் வலையைப் பின்னி முடிப்பதற்குள் பல முறை அறுந்தாலும் தன் முயற்சியை விடாது அந்த வலையைப் பின்னி முடிக்கும். அதுபோல நாமும் எந்த ஒரு சூழ்நிலையிலும் நம் தன்னம்பிக்கையை மட்டும் விட கூடாது.

சோர்ந்து போவதால் மனதில் உள்ள கொஞ்ச நம்பிக்கையும் உங்களை விட்டுச் சென்றுவிடும். உங்களால் உங்கள் இலக்கை அடைய முடியும் என்று நம்புங்கள். எத்தனை முறை தோற்றாலும் தோல்வியை எதிர்த்து துணிந்து போராடுங்கள். உன்னால் முடியும் நிச்சயம் வெற்றி வாய்ப்பு உங்களுக்குத்தான். மனசுக்கு பிடிச்ச பாடலைக் கேட்டுட்டு உங்கள் செயலைத் தொடங்குங்கள் வெற்றி உங்களுக்கே.

இதையும் படியுங்கள்:
இப்போது சொல்லுங்கள் உங்களில் யார் வெற்றியாளர்?
motivation article

நம்மால் முடியும் நாம் ஏன் சோர்வாக இருக்க வேண்டும் உற்சாகமாக உழைத்தால் நாம் எல்லாவற்றிலும் வெற்றி பெறலாம் என்ற மனப்பக்குவம் நமக்கு வந்தாலே போதும் நமக்குள் இருக்கும் டல் பறந்து விடும்.

உற்சாகமுடைய மனது சுறுசுறுப்பான உடல் இவை இரண்டும்தான் நமக்கு மூலதனம் இந்த இரண்டையும் வைத்து வாழ்க்கையில் எதை வேண்டுமானாலும் சாதிக்கலாம் நம் பக்கம் கூட வந்து எட்டிப் பார்க்காது தோல்வி.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com