தன்னம்பிக்கையை அதிகரிக்கும் வித்தை உங்களிடம்தான் இருக்கிறது..!

Motivation image
Motivation imageImage credit - pixabay.com

ரு மனிதனுக்கு தேவை தன்னம்பிக்கை மட்டும்தான். தன்னம்பிக்கையே அவனை ஒரு வேகத்தில் செயல்பட வைத்து, தடைகளையும் தாண்டி, வலிமையுடன் வெற்றியைச் சந்திக்க வைக்கிறது. எல்லா கவலைகளையும் மறக்கவும், கவலையே இல்லாமல் வாழவும் தன்னம்பிக்கையுடன் சிந்தியுங்கள் வழி பிறக்கும்.

ஒவ்வொரு மனிதருடைய வாழ்விலும் தன்னம்பிக்கை என்பது ஒரு மிகப்பெரிய இடத்தைப் பிடித்துள்ளது. ஏனென்றால் ஒரு சிறிய விஷயத்தை எடுத்தாலும் கூட தன்னம்பிக்கை என்ற ஒன்று இல்லை என்றால், அவர்களால் அந்த விஷயத்தை சரிவர செய்ய இயலாது.

"முதலில் நீங்கள் உங்களை நம்ப வேண்டும். ஒரு சிலருக்கு தன்னம்பிக்கை என்பது தானாகவே வளரும். அதற்கு அவர்கள் வளரும் வாழ்வியல் சூழல்களும், அவர்களை சுற்றியிருக்கும் மனிதர்களும் காரணமாக இருக்கலாம். ஆனால், ஒரு சிலருக்கு அப்படிப்பட்ட பாசிட்டிவான சூழல் அமையாது. இதனால் அவர்களுக்குள் தன்னம்பிக்கையும் வளராமல் இருக்கலாம்.

அப்படி, தனக்கு தன்னம்பிக்கையை வளர்த்துக்கொள்ள வேண்டும் என நினைப்பவர்கள் கண்டிப்பாக  சில விசயங்களை பின்பற்ற வேண்டும் . தன்னம்பிக்கை பெற ஒரு எளிய வழி உண்டு. தினமும் ஐந்து நிமிடங்கள் தனிமையான இடத்தில் அமர்ந்து சத்தமாக "என்னால் செய்து முடிக்க முடியும்" என்று வேகமாக சொல்லி வாருங்கள். அடுத்த  ஐந்து நிமிடங்கள் வேகமாக நடந்து செல்லுங்கள். இந்த பத்து நிமிடங்கள் ஒவ்வொரு நாளும் உங்கள் வாழ்க்கையயே மாற்றி உற்சாகம், முன்னேற்றம், வெற்றி என்று அழைத்துச் செல்கிறதா? இல்லையா? என்று பாருங்கள்.

ஒவ்வொரு நாளும் நான் தன்னம்பிக்கையுடன் இருக்கிறேன், தன்னம்பிக்கையுடன் செயல்படுவேன் என்று சொல்லுங்கள். அதற்கு ஏற்ப ஒவ்வொரு நாளும் தன்னம்பிக்கையை வளர்த்து கொள்ள முதல் வரிசை இருக்கையிலேயே அமருங்கள். எல்லோரிடமும் அவர்கள் கண்களைப் பார்த்தே பேசுங்கள். எப்போதையும்விட 25 சதவீதம் வேகவேகமாக நடந்து செல்லுங்கள். முணுமுணுக்காமல் கம்பீரமாக பேசுங்கள். ஒவ்வொரு நாளும் இந்தப்பயிற்சி உங்களைத் தன்னம்பிக்கை  உள்ள மனிதராக மாற்றுகிறது? இல்லையா? என பாருங்கள்.

"சிறப்பாக வாழ்வேன்' என்று தொடர்ந்து நினைத்து கொண்டே இருப்பது மட்டுமல்ல, சிறப்பாக வாழ்ந்து காட்ட செயலில் ஈடுபட்டு கொண்டே இருப்பது தான் தன்னம்பிக்கை உங்கள் சக்தி முழுவதையும் தொடர்ந்து செயலில் காட்டினால் அது தான் உண்மையான தன்னம்பிக்கை.

தன்னம்பிக்கை  என்பது தேர்ந்தெடுக்கப்பட்ட சிலருக்கு வழங்கப்படும் பரிசு அல்ல. இது நாம் அனைவருக்குள்ளும் வளர்க்கக்கூடிய திறமையாகும். நம்மில் சிலர் தன்னம்பிக்கையின்மை மற்றும் குறைந்த சுயமரியாதை உணர்வுடன் வளர்ந்திருப்போம். இது, பெரும்பாலான சமயங்களில் நமது குழந்தைப்பருவத்துடன் தொடர்புடையதாக இருக்கும்.

தன்னம்பிக்கையோடு உணர்வதற்கு நீங்கள், உங்களது வார்த்தைகளை நம்பிக்கையோடு உபயோகிக்க வேண்டும். ‘எனக்கு தெரியவில்லை, என்னால் முடியாது..’ போன்ற வார்த்தைகளை உபயோகப்படுத்துவதை நிறுத்திவிடுங்கள்.

மாறாக, ‘எனக்கு தெரியும், என்னால் முடியும்’ போன்ற வார்த்தைகளை உபயோகியுங்கள். நீங்கள் உங்களுடன் பேசிக்கொள்ளும் போதும் சரி, வெளியில் பிறரிடம் பேசும் போதும் சரி நம்பிக்கையோடு பேசுவதை நீங்கள் கடைப்பிடித்தால் தன்னம்பிக்கை தாமாகவே அதிகரிக்க ஆரம்பிக்கும்.

இதையும் படியுங்கள்:
அழிவை நோக்கி நகரும் நூறாண்டுகள் பழைமையான மண்பாண்ட நகரம்!
Motivation image

"தன்னம்பிக்கை கொண்ட மனிதர்களிடம் நான்கு பண்புகள் எப்போதும் இருக்கும் முதல் பண்பு வெற்றியைப் பற்றிய கற்பனை. இரண்டாவது- தகுதியை பெற்றுள்ளது, மூன்றாவது -எதை அடைய என்ற உறுதியான தீர்மானத்தை  எழுத்து வடிவில் எழுதி வைத்திருப்பார்கள். நான்காவது-கண்டிப்பாக வெற்றி பெறும் வரை விடாப்பிடியாக முயற்சி செய்யும் குணம். இந்த நான்கு முதல்தரத் தகுதியையும் எவரிடமும் விலைக்கு வாங்க முடியாது. அவரவர் சொந்தமாக வளர்த்துக் கொள்ள வேண்டும்" என்கிறார் டாக்டர் ராபர்ட் அந்தோணி.

தன்னம்பிக்கை, துணிவு, பயம் இந்த மூன்றில் முதல் இரண்டும் அழகான உயர்வான வாழ்க்கையை அமைத்துத் தருகின்றன. தன்னம்பிக்கை இருந்தால் துணிந்து காரியத்தில் இறங்கி செயல் பட முடியும். தன்னம்பிக்கை இல்லை என்றால் அது பயத்தைத்தான் பரிசாக தருகிறது, பயந்தார்கள் எதிலும் ஈடுபட மாட்டார்கள். துணிச்சலுடன் காரியத்தில் ஈடுபட்டிருப்பவர்களில் நீங்களும் ஒருவராக இருக்க வேண்டும் .

ஆர்வத்துடன் உங்கள் கடமைகளில் மூழ்கியிருக்கும் போது "வெற்றியைப் பிடித்து விடலாம்" என்ற தன்னம்பிக்கை பெருக்கெடுக்கிறது.அதே நேரத்தில் வேண்டா வெறுப்புடன் கடமையை செய்யும் போது தோல்வி மனப்பான்மை வந்து விடுகிறது

ஆரோக்கியமுள்ளவனுக்கு நம்பிக்கை இருக்கும். நம்பிக்கை உள்ளவனுக்கு எல்லாம் இருக்கும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com