உங்களை எதுவெல்லாம் மகிழ்ச்சியாக வைத்திருக்கும் தெரியுமா? 

You know what makes you happy?
You know what makes you happy?
Published on

மகிழ்ச்சி என்பது மிகவும் சிக்கலான உணர்வு. இதை அடைவதே பலரது இலக்காக உள்ளது. இது வெளிப்புற சூழல்கள் மற்றும் ஒருவரின் மனநலையால் ஏற்படுவதாக பல கோட்பாடுகள் கூறுகின்றன. ஒருவரை மகிழ்ச்சியாக வைத்திருக்க பல காரணிகள் உள்ளன. இந்தப் பதிவில் ஒருவரின் மகிழ்ச்சிக்கு பங்களிக்கும் பல்வேறு விஷயங்கள் என்னென்ன என்பது பற்றி முழுமையாகப் பார்க்கலாம். 

மகிழ்ச்சியின் அடிப்படை காரணிகள்: 

நல்ல நட்பு, குடும்பம், ஆதரவான சூழல் போன்றவை மகிழ்ச்சியின் முக்கிய அடித்தளம். மனிதன் ஒரு சமூக உயிர் என்பதால் மற்றவர்களுடன் இணைந்து வாழும்போது மனதில் நிறைவுடன் இருக்கிறான். 

புதிய விஷயங்களை கற்றுக் கொள்வது, திறமைகளை வளர்ப்பது, இலக்குகளை நோக்கி செயல்படுவது போன்றவை தனிமனிதனுக்கு மகிழ்ச்சியைத் தருகின்றன. 

ஆரோக்கியமான உடல், மனதிற்கும் ஆரோக்கியத்தை அளிக்கும். உடற்பயிற்சி, சரியான உணவு, போதுமான தூக்கம் போன்றவை மகிழ்ச்சியின் முக்கிய அம்சங்கள். 

மனிதன் தன்னுடைய அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்யும்போது எந்த அழுத்தமும் இல்லாமல் மகிழ்ச்சியாக இருக்க முடியும். இருப்பினும், அதிகப்படியான பொருள்வளம் மகிழ்ச்சியை உறுதி செய்யாது என்பதை நாம் தெரிந்து கொள்ள வேண்டும். 

எல்லா சூழ்நிலைகளிலும் நேர்மறையாக சிந்தித்து செயல்படுவது மன அழுத்தத்தை குறைத்து மகிழ்ச்சியாக இருக்க உதவும். இத்துடன் ஆன்மீக நம்பிக்கைகள் வாழ்க்கைக்கு ஒரு அர்த்தத்தை அளித்து மனதிற்கு அமைதியான உணர்வைத் தருகின்றன. 

மகிழ்ச்சியை அதிகரிக்கும் வழிகள்: 

நீங்கள் உங்களது மகிழ்ச்சியை அதிகரிக்க முதலில் உங்கள் வாழ்வில் உள்ள நல்ல விஷயங்களுக்கு நன்றி கூறி மனதை நிறைவாக வைத்திருங்கள். வாழ்க்கையில் தெளிவான இலக்குகளை நிர்ணயித்து அவற்றை நோக்கி செயல்படுவது மனதிற்கு ஒரு உற்சாகத்தை அளிக்கிறது. 

குடும்பம், நண்பர்கள், சமூகம் போன்றவர்களுடன் நல்ல உறவை ஏற்படுத்திக் கொண்டு, மகிழ்ச்சியாக இருங்கள். அதேபோல, ஒரே விஷயத்தில் காலத்தை ஓட்டிவிடலாம் என நினைக்காமல், புதிய திறமைகளை கற்றுக்கொள்வது, புதிய இடங்களுக்கு பயணம் செய்வது போன்றவை உங்கள் வாழ்க்கையை சுவாரசியமாக்கி மகிழ்ச்சியைத் தருகின்றன. 

உங்களது உடலுக்கு முக்கியத்துவம் கொடுத்து உடற்பயிற்சி, நல்ல உணவுகளை உண்பது போன்றவை மன அழுத்தத்தை குறைத்து நீங்கள் மகிழ்ச்சியாக இருக்க உதவும். இத்துடன், தியானம், யோகா போன்றவை மனதை அமைதிப்படுத்தி மகிழ்ச்சியாக மாற்றுகின்றன. 

இதையும் படியுங்கள்:
மகிழ்ச்சி என்பது பலூன் அல்ல... அது மூச்சுக்காற்று! சுவாசிக்கத் கற்றுக் கொண்டால் மகிழ்ச்சிதான்!
You know what makes you happy?

பொய்யான மகிழ்ச்சியின் காரணிகள்: 

அதிகப்படியான பொருள்வளம் உண்மையான மகிழ்ச்சியை உறுதி செய்யாது. உங்களுக்கான அடிப்படைத் தேவைகள் பூர்த்தி செய்யப்பட்ட பிறகு பொருள்வளம் என்பது உங்கள் மகிழ்ச்சியில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தாது.

மற்றவர்களின் பாராட்டு, அங்கீகாரம் போன்றவை உங்களுக்கு தற்காலிக மகிழ்ச்சியைத் தந்தாலும் நீண்ட கால மகிழ்ச்சிக்கு அவை அடிப்படையாக இருக்காது. 

மது, புகை போன்ற போதை சார்ந்த விஷயங்கள் உங்களுக்கு தற்காலிக மகிழ்ச்சியையே தரும். இவை நீண்ட காலத்திற்கு உங்களது உடல் மற்றும் மன ஆரோக்கியத்தை பாதிக்கக்கூடும் என்பதை புரிந்து கொள்ளுங்கள். 

மேற்கூறிய விஷயங்களை சரியாகப் புரிந்துகொண்டு, எதுவெல்லாம் உங்களுக்கு உண்மையான மகிழ்ச்சி தரும் என்பதில் அதிக கவனம் செலுத்தி, வாழ்க்கையை மகிழ்ச்சியாக வாழுங்கள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com