
உங்கள் பலவீனத்தைப் பற்றி மற்றவரிடம் பகிர்ந்து கொள்ளாதீர்கள். உங்களுடைய பலகீனங்களை அதிக அளவு தெரிந்து கொள்கிறவர்கள் உங்களுக்கு எதிராக அதை பயன்படுத்துவார்கள்.
உங்கள் இலக்குகளை மற்றவர்களிடம் பகிராமல் இருப்பதே நல்லது உங்களுக்கு உதவாதவர்களிடம் அதைக் கூறுவதால் பயன் ஒன்றும் இல்லை.
உங்கள் வெற்றிகளைப் பற்றி மிகவும் நம்பிக்கையானவர்களிடம் மட்டுமே கூறுங்கள். அனாவசியமாக பெருமையாக அனைவரிடமும் கூறவேண்டாம்.
உறவுகளிடையே பிரச்னைகள் ஏற்படும்போது அதைப்பற்றி மிக விரிவாக அடுத்தவரிடம் கூறவேண்டாம். இது நல்லதல்ல. அதனால் விரிசல் ஏற்படலாம். கூடியவரையில் பிரச்னைகளுக்குத் தீர்வுகாண நீங்களே முயற்சிப்பது நல்லது.
நீங்கள் பல விலை உயர்ந்த பொருட்களை வாங்கியிருந்தால் அதைப் பற்றிப் பெருமையாக மற்றவரிடம் கூற நினைப்பீர்கள். அவர்கள் சந்தோஷம் அடைவதற்கு பதில் பொறாமையே அடையும் அபாயம் உண்டு. உங்கள் பொருட்கள் குறித்து நீங்கள் சந்தோஷம் அடையப் பாருங்கள். அது போதும்.
பெருமைக்காக உங்கள் வருமானம் பற்றிப் பெருமையாக பிறரிடம் கூன் வேண்டாம். இப்படிப்பேசி மற்றவர்களை விட நீங்கள் மேல் என்று காட்டிக் கொள்வதைத் தவிர்க்க வேண்டும்.
உங்கள் குடும்பம் பிரச்னைகள் குறித்து வெளி மனிதர்களிடம் பகிர்ந்து கொள்ளாதீர்கள். உங்கள் குடும்ப உறுப்பினர்கள் மீது அக்கறை கொண்டு நடந்து கொள்ளுங்கள். மற்றவரிடம் அவர்களை விட்டுக் கொடுக்காதீர்கள்.
நீங்கள் உங்கள் வாழ்க்கையில் பல மோசமான சம்பவங்களை சந்தித்திருக்கலாம். அதைப்பற்றி மற்றவரிடம் கூறவேண்டாம். உங்கள் நம்பிக்கைக்குப் பாத்திரமாக இருப்பவர்களிடம் மட்டுமே அவற்றைப் பகிர்ந்து கொள்ளவும் அத்தகைய மனிதர்கள் மட்டுமே உங்களுக்கு ஆறுதல் கூறுவார்கள்.
உங்களுடைய இறை உணர்வுகளைப் பற்றி, அதைப் பற்றி வெளிப்படையாக பேசுபவர்களின் மட்டுமே கூறுங்கள். இறை நம்பிக்கை இல்லாதவர்களிடம் அதைப் பற்றிப் பேசுவதால் மரியாதையும் மதிப்பையும் இழப்பீர்கள்.
உங்களைப் பற்றிய ரகசியங்களை உங்கள் நம்பிக்கைக்குப் பாத்திரமானவர்களிடம் மட்டுமே பகிருங்கள்.
உங்கள் உடல்நிலை கூறித்து மற்றவர்களிடம் பேசுவதால் உங்களுக்கு பல ஆலோசனைகள் தந்து மனஅழுத்ததைத் தருவார்கள். மருத்துவர்களின் ஆலோசனையை அணுகுவதே சிறந்தது.