நம்மில் பலர் உழைக்காமல் உயரவேண்டும் என்று நினைப்பவர்கள் ஏராளமானோர் இருக்கிறார்கள். ஆனால் கடைசியில் இவர்கள் எதையுமே சாதிக்க முடியாது என்பது அவர்களுக்கு தெரியும். உழைக்க வேண்டும் என்ற மனம் நமக்கு எப்பொழுது வருகிறதோ அப்பொழுதே நாம் வெற்றியின் வாசலுக்கு வந்து விட்டோம் என்று நான் அர்த்தம்.
உழைக்காமல் உயரவேண்டும் என்று நினைப்பவர்கள் வேண்டுமானால் தற்காலிக உயரத்திற்கு ஏறலாம். ஆனால் அவர்களால் நிரந்தரமான உயரத்துக்கு ஏறமுடியாது.
வியட்நாமில் வாழ்ந்த கேப்டன் மாக்ஸ் க்ரீலெண்டின் என்பவரது வாழ்க்கைதான் நமக்கு ஒரு முன்னுதாரணமாக இருக்கவேண்டும். உழைப்பின் மகத்துவத்தை இப்பதில் ஒரு சின்ன எடுத்துக்காட்டோடு பார்ப்போம்.
1968 ஆம் ஆண்டில் வியட்நாமில் வாழ்ந்த கேப்டன் மாக்ஸ் க்ரீலெண்டின் என்பவரது இரு கால்களும் இடது கையும் ஒரு வெடிகுண்டு வீச்சால் பறிபோயின. மிகவும் மனம் நொந்து காணப்பட்ட அவர் பின்பு தன்னைத்தானே ஆறுதல் படுத்திக்கொண்டு தனது சொந்த ஊரான ஜார்ஜியா சென்றார். அங்கு அரசியலில் ஈடுபட்டு இரண்டு முறை சட்டமன்ற உறுப்பினராகப் பணிசெய்தார்.
ஜனாதிபதி கார்டர் இவரது திறமையைப் பார்த்து மிகப்பெரிய ஓர் அரசு நிறுவனத்தின் நிர்வாகியாக்கினார். பிறகு ஜார்ஜியா மாநிலத்தின் செயலராக அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றவராகத் தேர்வு செய்யப்பட்டார். சக்கர நாற்காலியில் அமர்ந்து இவர் அருமையாகப் பேசுவதைக் கவனிக்க மக்கள் கூட்டம் அலைமோதியதாம். மூன்று கொள்கைகளை இவர் வாழ்வில் கொண்டிருந்தாராம்.
ஒன்று, எதையும் ஏற்றுக்கொள்ளும் பக்குவம்.
இரண்டு, சக்கர நாற்காலியை உருட்ட வேறு ஒரு கை உள்ளது. எனவே, ஒரு கதவு மூடினால் அடுத்த கதவு திறக்கும் என்று நம்பியது.
மூன்றாவது, இறைவன் எப்போதும் நம்மைக் காப்பார் என்று நம்புவது.
எங்கு, எந்த நிலையில், எப்படி இருக்கிறோம்? என்பதைவிட எங்கிருந்தாலும், எந்த நிலையில் இருந்தாலும், எப்படி இருந்தாலும் உழைக்கும் மனம் பெற்றிருந்தால் உயரலாம் என்பதற்கு கேப்டன் ஒரு சிறந்த எடுத்துக்காட்டு.
நாம் இனியாவது உழைப்பின் அருமை பெருமைகளை அறிந்து, நம் வாழ்க்கையில் உழைப்பை உயிர் மூச்சாய்க் கொண்டு உயர்ந்திட முயன்றிடுவோம்.