
இடம் பொருள் அறிந்து பேசவேண்டும்
எந்த இடத்தில் எதைப் பற்றி எப்படி பேசவேண்டும்? என இடம், பொருள் அறிந்து பேசவேண்டும். ஒருவரை உயர்த்தி பேசவேண்டி இருக்கலாம். அதற்காக அவருடன் ஒப்பிட்டு வேறொருவரை தாழ்த்தி விடக்கூடாது.
பேசாமல் இருப்பது நல்லது
கோபத்திலோ நிதானம் இழந்திருக்கும் சமயங்களில் பேசாமல் இருப்பது உத்தமம். 'பேசிவிட்ட வார்த்தை நமக்கு எஜமானன். 'பேசாத வார்த்தைகளுக்கு நாம் எஜமானன்' என்பார்கள். ஆத்திரத்தில் உதிர்க்கும் வார்த்தைகள் அடுத்தவர்களை காயப்படுத்தி விடக்கூடாது.
பேச்சில் கவனம் இருக்கவேண்டும்
பேச்சில் கார்வமும் கடுமையும் இருக்கக் கூடாது. குறிப்பாக நீங்கள் தலைமை பொறுப்புகளில் இருந்தால் பேச்சில் இனிமையும் கனிவும் அவசியம் பயன்படுத்த வேண்டும். மிக மோசமான எதிரியை கூட நாகரிகம் பெற்ற வார்த்தைகளால் விமர்சிக்காதவர்கள்தான் சிறந்த பேச்சாளர். நகைச்சுவை உணர்வுடன் பேசலாம் தப்பில்லை. ஆனால் பேச்சில் கேலி இருக்க கூடாது.
பேச்சு எப்படி இருக்க வேண்டும்?
பேசித் தீர்க்க முடியாத விஷயம் என எதுவுமே இல்லை. என்பார்கள். அதனால்தான் போரிட்டுக்கொண்டிருக்கும் நாடுகளைக் கூட பேச்சுவார்த்தைக்கு அழைக்கிறார்கள். போரில் பலசாலிதான் வெல்ல முடியும் பேச்சு வார்த்தையில் பேசத்தெரிந்த சாமர்த்தியசாலி ஜெயிக்கலாம்.
பேச்சு எப்படி இருக்க வேண்டும்? என நம் நீதி நூல்கள் வரையறை செய்திருக்கின்றன. பொய் சொல்லக்கூடாது, யாரைப் பற்றியும் அவதூறாக எதையும் சொல்லக்கூடாது. கடுமையான சொற்களைப் பயன்படுத்தக்கூடாது. பயனில்லாத விஷயத்தைப் பற்றி பேசக்கூடாது. நீங்கள் சொல்ல வருகிற விஷயத்தை எல்லோருக்கும் எளிதில் புரிவது போல சொல்லவேண்டும். இந்த வார்த்தைகளில் இதை சொன்னால் எளிதில் புரியும் என்பதை உணர்ந்து வார்த்தைகளை பயன்படுத்த வேண்டும். எதையும் திரும்பத் திரும்ப பேசக்கூடாது, என்பதே நம் நீதி நூல்கள் சொல்லும் இலக்கணங்கள்.
அடுத்தவர்களை காயப்படுத்தக் கூடாது
பேச்சில் நமது புத்திசாலித்தனத்தை வெளிப்படுத்துவதில் தவறில்லை. ஆனால் அந்தப் பேச்சு அடுத்தவர்களை காயப்படுத்துவதாக இருக்கக்கூடாது. பேச்சு என்பது ஒரு கலை. இசை நடனம் போன்றவற்றை கற்றுக்கொள்வது போல்தான் பேச்சையும் முறையாக பேசி பழகவேண்டும். அதில் ஆர்வமும் இருக்கவேண்டும். முறையாக பேசத்தெரிந்தால் அதை வைத்து எதையும் சாதிக்கலாம். பேசும் பேச்சாள்தான் ஆக்கவும் ஏற்படும் அழிவும் ஏற்படும். எனவே பேச்சில் பெரும் கவனம் வேண்டும். இதை புரிந்துகொண்டு பேசும் வல்லமை பெற்றவர்கள் எதைச்சொன்னாலும் அதை இந்த உலகம் ஏற்றுக்கொள்ளும்.
ஆதலால் யாரிடமும் எதைப் பற்றியும் பேசும்போது கவனம். பேசத் தெரிந்தால் எதையும் சாதிக்கலாம் என்பதை புரிந்துகொண்டு பேசுங்கள்.