இளமை என்பது அற்புத வாய்ப்பு!


Youth is a wonderful opportunity!
Lifestyle storyImage credit - pixabay
Published on

ளமை என்பது இயற்கை கொடுத்த அற்புத வாய்ப்பு.‌ சிலர் அதைப் பயன்படுத்தி சிறந்த மனிதர்களாகிறார்கள். சிலர் குழம்பி உபயோகமற்றதாக ஆகிறார்கள். சிலர் மாற முடியாத அளவுக்குக் கடினமாக உறைந்து விட்டார்கள். இளைஞர்கள்   வரமாகவோ சாபமாகவோ மாறுவது அவர்கள் கையில்தான் உள்ளது. நாம் அனைவரும் ஒரே காற்று சுவாசிக்கிறோம். ஒரே மண்ணைத் தின்கிறோம் ஆனால் எதையெல்லாம்  சேகரித்து நம் உள்ளடக்கத்தை அமைத்துக் கொள்கிறோமோ அதைப் பொறுத்துதான் நம் மதிப்பு வெளிப்படும். 

நகரத்தின் மையத்தில் இருவர் எதிரெதிரே வந்து கொண்டிருந்தனர். ஒருவன் தன் வலது காலை இழுத்து இழுத்து நடந்து வந்தான். எதிரில் வந்தவரும் காலை இழுத்து இழுத்து நடந்து வந்தான் முதலாமவன் தன் வலது காலை பெருமையுடன் தட்டி "இந்திய. ராணுவம்  எல்லைப் போரில் காலில் வெடித்தது கண்ணி வெடி" என்றான்.

எதிரில் வந்தவன் "தெருத் தெருவாய் பிச்சை. காலைத் தட்டி, ஐம்பதடிக்கு முன்னால் காலில் மிதித்தது எருமை சாணம்" என்றான். தொலைவில் இருந்து பார்த்தால் இருவரும் காலை ஊன்ற முடியாமல் வருவது மட்டும்தான் தெரியும். ஆனால் காரணம் அறிந்த பின் இருவர் மீதும் ஒரே மரியாதை வருமா?.

கவனமில்லாமல் சேகரிப்பதால்தான் மனிதன் தனக்குச் சம்பந்தமில்லாத குணங்களை எல்லாம் சொந்தமாக்கிக் கொள்கிறான். பொருத்தமில்லாத பாதையில் பயணிக்கிறான். போர்க்காலத்தில்  பீரங்கிகளை தயாரிப்பவர்கள் பணக்காரர்கள் ஆவார்கள். பஞ்ச காலத்தில் தானியத்தை பதுக்குபவர்கள் செல்வந்தர் ஆவார்கள். 

கம்ப்யூட்டர் யுகத்தில் அறிவு பெற்றவர்கள் நிறைய சம்பாதிப்பார்கள். அலையில் மிதக்கும் பொருட்கள் அலையின் போக்குபடி எழும், வீழும்.

இதையும் படியுங்கள்:
திறமை என்பது வெற்றிக்கான தகுதி!

Youth is a wonderful opportunity!

அதேபோல் சமுதாயத்தில் எந்த அலை வீசுகிறதோ அதற்கான கல்வியை முடித்து தயாராக இருப்பவர்களை மேலே இழுத்துக் கொண்டு போகிறது. ஆனால் அதுவா உண்மையான வெற்றி?. படிப்பு ஏறவில்லயா? வியாபார நுணுக்கம் புரியவில்லையா அதெற்கெல்லாம் கடவுளைக் கூப்பிடாதீர்கள்.

எது வேண்டுமோ முதலில் அதன்மீது ஆசையை வளர்த்துக் கொள்ளுங்கள். ஆசையோடு சாப்பிட்டால்தான் ருசி தெரியும். ஆசை சந்தோஷத்தையும் கொண்டுவந்து தரும். எந்த வேலையையும் ஆசையோடு செய்தால்தான் முழுத்திறமை வெளிப்படும். ஆசை என்பதைக்  கவனத்துடன் பயன்படுத்தக் கற்றுக்கொண்டால் அவை எல்லாம் வெற்றிகரமாக நிறைவேறும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com