தஞ்சை பெருவுடையார் கோயிலின் 10 ஆச்சரியத் தகவல்கள்!

10 surprising facts about the in Thanjavur Peruvudaiyar Temple!
10 surprising facts about the in Thanjavur Peruvudaiyar Temple!
Published on

ஞ்சை பெருவுடையார் கோயில் தமிழுக்கும் தமிழ் மண்ணுக்கும் பெருமை சேர்க்கும் ஒரு ஆலயம். இந்த ஆலயத்தில் ஏராளமான அதிசயங்களும் ரகசியங்களும் புதைந்து கிடக்கின்றன. அதோடு, பல ஆச்சரியங்களும் இக்கோயிலில் அடங்கிக் கிடக்கின்றன. அதில் முக்கியமான 10 விஷயங்களை இந்தப் பதிவில் பார்ப்போம்.

1. 1997ம் ஆண்டிற்குப் பிறகு, அதாவது 23 ஆண்டுகளுக்குப் பிறகு தஞ்சை பெரிய கோயிலுக்கு திருக்குடமுழுக்கு 2020 பிப்ரவரியில் நடைபெற்றது. 1997க்கு முன்பாக, 1980ல் குடமுழுக்கு நடைபெற்றது.

2. தஞ்சாவூர் காவிரி தென்கரையில் அமைந்திருக்கும் இந்தக் கோயில், ராஜராஜேச்சரம், பெருவுடையார் கோயில், பிரஹதீஸ்வரர் ஆலயம் என பல பெயர்களில் குறிப்பிடப்படுகிறது.

3. 1003க்கும் 1010ம் ஆண்டிற்கும் இடையில் சோழ மன்னனான ராஜராஜ சோழனால் கட்டப்பட்ட இந்தக் கோயில், திராவிடக் கட்டடக் கலையின் உன்னதமான சான்றாகக் கருதப்படுகிறது.

4. கோயிலின் சில பகுதிகள் பிற்காலப் பாண்டியர்கள், விஜயநகர மன்னர்களால் கட்டப்பட்டன. முன்தாழ்வாரம், நந்தி மண்டபம், அம்மன் சன்னிதி, சுப்ரமணியர் சன்னிதி போன்ற இந்தப் பகுதிகளைத் தவிர கோயிலின் மற்ற பகுதிகள் ராஜராஜ சோழன் காலத்திலேயே கட்டப்பட்டவை.

5. யுனெஸ்கோ உலகப் பாரம்பரிய சின்னம் என்ற அந்தஸ்தை பெற்ற இந்தக் கோயில், இந்தியத் தொல்லியல் துறையால் பராமரிக்கப்படுகிறது. இந்தக் கோயிலின் ஆயிரமாவது ஆண்டு விழா கடந்த 2010ம் ஆண்டில் நடைபெற்றது.

6. இக்கோயிலின் தலைமைச் சிற்பியாக குஞ்சரமல்லன் ராஜராஜ பெருந்தச்சன் என்ற பெயர் கோயிலின் கல்வெட்டுகளில் குறிப்பிடப்படுகிறது.

7. பிற்காலக் கோயில்களில் கோபுரங்கள் உயரமாக அமைந்திருக்கும் நிலையில், இந்தக் கோயிலின் விமானம் மிக உயரமாக அமைக்கப்பட்டுள்ளது.

இதையும் படியுங்கள்:
மறந்துபோன இந்த கீரைகளின் மகத்துவம் தெரியுமா?
10 surprising facts about the in Thanjavur Peruvudaiyar Temple!

8. கோபுரத்தின் உச்சியில் கலசத்திற்கு கீழே உள்ள பகுதி ஒரே கல்லால் ஆனது. விமானத்தின் நிழல் தரையில் விழாது என்றெல்லாம் கூறப்பட்டாலும் அது உண்மையல்ல.

9. பெருவுடையார் கோயிலின் குடமுழுக்கை தமிழில் நடத்த வேண்டுமென பலர் வழக்குத் தொடர்ந்ததால், தமிழ் - சமஸ்கிருதம் ஆகிய இரு மொழிகளுக்கும் சமமான முக்கியத்துவம் கொடுத்து குடமுழுக்கு நடத்தப்படுமென இந்து சமய அறநிலையத் துறை தெரிவித்துள்ளது.

10. மாமன்னன் ராஜராஜ சோழன் பிறந்த ஐப்பசி சதய நட்சத்திரத்தில் ஆண்டுதோறும் தஞ்சாவூர் பெரிய கோயிலில் சதய நட்சத்திர விழா வெகு சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com