நன்னெறிக் கதைகள் 2: காட்டிக் கொடுத்த நாக்கும் வெற்றியைத் தந்த நம்பிக்கையும்!

Monks, warriors and messengers of death
Monks, warriors and messengers of death
Published on

கதை 1: நாக்கே எதிரி!

Monks and messengers of death
Monks and messengers of death

ஒரு மகானிடம் சீடனாக இருந்த ஒருவன் எப்போதும் ஓயாமல் பேசிக்கொண்டே இருப்பான். மற்றவர்களை ஏசிக் கொண்டே இருப்பான். அவனுக்கு அவன் நாக்கே எதிரி.

ஒரு நாள் அவனது உயிரைப் பறிக்க எம தூதர்கள் வரப் போகிறார்கள் என்பது மகானுக்கு ஞான திருஷ்டியில் தெரிந்தது. அதை அவர் அந்த சீடனிடம் கூறி, அவனை எச்சரிக்கையாக இருக்கும் படி கூறினார். மற்ற சீடர்களுக்கும் அவனை மாதிரியே உடை அணிவித்து அவர்களுடன் அவனைப் படுத்து உறங்கச் செய்தார்.

அன்று இரவு எம தூதர்கள் வந்து, அதில் 'யார் அவன்' என இனம் காணாது தவித்தனர்.

ஒரே ஒரு எமதூதன் தனது புத்திசாலித்தனத்தை பயன்படுத்தி அவனைக் கண்டுபிடிக்க முடிவு செய்து, "வேஷம் எல்லாம் நன்றாகத்தான் இருக்கிறது.. ஆனால் ஒரே ஒரு தவறு செய்து விட்டாயே.." என்று சத்தமாகக் கூறினான்.

பதறி எழுந்த அந்த வாயாடி சீடன், "என்ன அந்தத் தவறு?" என்று கேட்டான்

"இதுதான் அந்தத் தவறு. உன் நாக்கு உன்னை காட்டிக் கொடுத்துவிட்டது." என்று கூறி, பாச கயிறை அவன் மீது வீசினர் எம தூதர்கள்.

அவன் நாக்கே அவனுக்கு எதிரியாகி, காட்டிக் கொடுத்து விட்டது.

இதையும் படியுங்கள்:
சிட்டுக்குருவிகள் உங்கள் வீட்டுக்கு அடிக்கடி வருவது அதிர்ஷ்டமா? ஆபத்தா?
Monks, warriors and messengers of death

கதை 2: நம்பிக்கை வெல்லும்!

king and warriors
king and warriors

ஒரு முறை அரசன் ஒருவர் எதிரிகளை தாக்க ஓர் இராணுவ படை ஒன்றை தயார் செய்து போருக்கு தயாரானார். அவர் 'எப்படியும் இந்த போரில் வெற்றி பெறுவோம்' என்று நம்பிக்கையுடன் இருந்தார். ஆனால் அந்த படையினரோ பெரும் சந்தேகத்துடனேயே இருந்தனர். அனைவரும் சோர்த்து போய் நம்பிக்கையின்றி இருந்தார்கள்.

இதனால் அந்த ராஜா தன் படை வீரர்களுக்கு தைரியத்தை வரவழைக்க என்ன செய்யலாம் என்று ஒரு ஜென் துறவியைப் பார்த்து, கேட்கச் சென்றார்.

அப்போது அந்த துறவி ராஜாவிடம், ஒரு யோசனையை சொன்னார். அதேப்போல் ராஜாவும் செய்து, வெற்றியும் பெற்றார். அது என்னவென்றால்,

இதையும் படியுங்கள்:
சபரிமலை 18 படிகளின் ரகசியம்! ஒவ்வொரு படி ஏறும் போதும் உங்கள் வாழ்வில் என்ன நடக்கிறது தெரியுமா?
Monks, warriors and messengers of death

அந்த ராஜா போர் செல்லும் வழியில், அவர்கள் குல தெய்வ கோவிலில் நிறுத்தி பிரார்த்தனை செய்து விட்டு ஒரு நாணயத்தை எடுத்து வீரர்களின் முன் காண்பித்து "நான் இப்போது இந்த நாணயத்தை சுழற்றி விடுவேன், தலை விழுந்தால் நாம் வெற்றி பெறுவோம் இல்லையேல் போரில் தோற்போம்" என்று துறவி சொன்னதைச் சொன்னார்.

வீரர்களிடம் "நம் தலை விதியை இந்த நாணயம் நிர்ணயிக்கட்டும்" என்று கூறி நாணயத்தை சுழற்றினார். அனைவரும் அதை கூர்ந்து கவனித்தனர்.

அப்போது தலை விழுந்தது. அதனால் அந்த வீரர்கள் நாம் நிச்சயம் வெற்றி பெறுவோம் என்று நம்பிக்கையுடனும் சந்தோசத்துடனும் எதிரிகளை தாக்க தயாரானார்கள்.

இதையும் படியுங்கள்:
உடலில் உள்ள சக்கரங்களை இயக்கும் காயத்ரி மந்திரத்தின் அதிர்வுகள்!
Monks, warriors and messengers of death

யுத்தத்தில் வெற்றியும் பெற்றனர். யுத்தத்திற்கு பின்னர், துணை மந்திரி "விதியை யாராலும் மாற்ற முடியாது." என்று ராஜாவிடம் சொல்ல "ஆம்," என்று ராஜா சொல்லி அந்த நாணயத்தின் இரு பக்கத்திலும் தலை இருப்பதை காண்பித்தார்.

நம்பிக்கையுடன் செயல்பட்டால் எத்தகைய காரியத்தையும் எளிதில் வெல்லலாம்..! விதியையும் மாற்றி அமைக்கலாம்..!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com