நம்முடைய வாழ்வில் கெட்ட விஷயங்கள் நிகழப்போவதை சில அறிகுறிகளை வைத்து தெரிந்துக்கொள்ளலாம். அதைப்போலவே வாழ்க்கையில் நல்ல விஷயங்கள் நிகழப்போகிறது என்றாலும் சில அறிகுறிகளின் மூலமாக அதை தெரிந்துக் கொள்ளலாம். அந்த அறிகுறிகள் என்னென்ன என்பதைப் பற்றி இந்தப் பதிவில் காண்போம்.
1. நாம் புதிதாக தொழில் தொடங்கப் போகிறோம் என்றாலோ அல்லது ஒரு புது வேலையில் சேரப்போகிறோம் என்றாலோ அதைப் பற்றி நம் நண்பர்கள், உறவினர்களிடம் சொல்வதற்கு முன்பாகவே அவர்கள் பாசிட்டிவான, நேர்மறையான ஊக்கத்தை நமக்குக் கொடுப்பார்கள்.
2. நம்மைச் சுற்றி ஏதேனும் தவறான விஷயம் நடக்கப்போகிறது என்றால், மனம் இருக்கமாகவும், பதற்றமாகவும் இருக்கும். ஆனால், நம் வாழ்க்கையில் நல்ல விஷயங்கள் நடக்கப்போகிறது என்றால், நம் மனம் லேசாகவும், மகிழ்ச்சியாகவும் மாறிவிடும். அந்த விஷயத்தில் எந்த ஒரு தயக்கமும் இல்லாமல் நிதானமாக மாறிவிடுவீர்கள். நீங்கள் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியையும் வெற்றிகரமாக முடிப்பீர்கள்.
3. கோயிலுக்குச் சென்று இறைவனிடம் நீங்கள் நினைத்த காரியம் நல்லபடியாக முடிய வேண்டும் என்று நினைத்து வேண்டிக்கொள்ளும்பொழுது சாமிக்கு தீபாராதனை காட்டுவார்கள், நீங்கள் கடவுளிடம் வேண்டும் சமயம் கோயில் மணியோசை கேட்கும், சாமி மீது இருக்கும் மலர் கீழே விழும். இதுபோன்ற தருணங்கள் நிகழ்வது நல்ல சகுனமாக சொல்லப்படுகிறது.
4. இறைவனின் தீவிர பக்தர்களான சாதுக்கள், சிவனடியார்கள் போன்றவர்களின் ஆசிர்வாதம், தரிசனம் நமக்குக் கிடைக்கும். அவ்வாறு கிடைத்தால் நம் வாழ்வில் எதிர்பாராத நல்ல விஷயங்கள் நமக்கு நடக்கப்போகிறது என்று அர்த்தம். நம் மனதில் நடக்கவேண்டும் என்று நினைத்துக் கொண்டிருக்கும் நல்ல விஷயங்களும் விரைவில் கைக்கூடும் என்று பொருள்.
5. வீட்டில் அமர்ந்து நல்ல விஷயங்களை பேசும்போதும், நல்ல விஷயங்களை கலந்துரையாடும்போதும் பல்லி ஒரு குறிப்பிட்ட திசையில் இருந்து ஓசை எழுப்புவது நாம் நினைத்த காரியம் விரைவில் நடக்கும் என்பதற்கான நல்ல சகுனமாக சொல்லப்படுகிறது.
6. நாம் செய்யும் காரியங்களில் எந்தவித தடையுமேயில்லாமல் அடுத்த கட்டத்திற்கு நகர்ந்து செல்கிறது என்றால், அது நல்லபடியாக கைக்கூடும் என்று சொல்லப்படும் அறிகுறியாகும். நம் மனம் மகிழ்ச்சியாகவும், டென்ஷன் இல்லாமலும் இருக்கும். நம் மனம் நல்ல சிந்தனைகளை சிந்திக்கும். இதுவே, நம் வாழ்க்கையில் நல்ல விஷயங்கள் நடப்பதற்கு உதவும். இந்த 6 அறிகுறிகளை நீங்களும் உங்கள் வாழ்க்கையில் உணர்ந்திருக்கிறீர்களா? என்று சொல்லுங்கள்.