
நம் வீட்டில் அதிர்ஷ்டம் தரக்கூடிய மிகவும் சக்தி வாய்ந்த இடங்கள் இருக்கிறது. இந்த இடங்களில் சென்று நாம் செய்யும் சில விஷயங்கள் மூலமாக செல்வம் சேர்க்கலாம், கல்வியில் ஞானம் கிடைக்கும். இதைப்பற்றி விரிவாக இந்தப் பதிவில் காண்போம்.
வாஸ்து சாஸ்திரத்தின் படி, ஒரு வீட்டில் உள்ள ஒவ்வொரு திசைகளிலும் ஒவ்வொரு கிரகங்கள் ஆட்சி செய்வதாக சொல்லப்படுகிறது.
1. கிழக்கு திசை என்பது சுக்கிர பகவானுக்கு உரிய திசையாகும். செல்வம் சம்மந்தமான, வருமானம் சம்மந்தமான பேச்சுக்கள், சிந்தனைகளை கிழக்கு திசையில் அமர்ந்து யோசித்தால், செல்வம் பெருகும் என்று சொல்லப்படுகிறது.
2. மேற்கு திசை என்பது சனீஸ்வர பகவானின் ஆதிக்கம் பெற்ற இடமாகும். சனீஸ்வர பகவான் கர்மப்பலனுக்கான கடவுள் என்று சொல்லப்படுகிறது. நம்முடைய ஆரோக்கியம், வேலை, கர்மப்பலன் இவை அனைத்தையும் சரி செய்யவும், மேலும் எந்த தவறும் செய்யாமல் இருக்க அந்த இடத்தில் அமர்ந்து திட்டமிடுதல் அவசியம் என்று சொல்லப்படுகிறது.
3. வடக்கு திசை என்பது குரு பகவான், குபேர பகவானுக்கு உரிய திசையாக சொல்லப்படுகிறது. பணம் அதிகமாக சம்பாதிக்கக் கூடிய வழிகளை உருவாக்கக்கூடிய திசை. வடக்கு திசையில் அமர்ந்து யோசிக்கும் போது பணம் அதிகமாக வரக்கூடிய புதிய யோசனைகள் கிடைக்கும் என்று சொல்லப்படுகிறது.
4. தெற்கு திசை என்பது செவ்வாய் கிரகம் ஆதிக்கம் பெற்ற திசையாகும். இவரை நிலக்காரகன் என்றும் சொல்லுவார்கள். நில சம்மந்தமான பிரச்னை இருந்தால் இந்த திசையில் அமர்ந்து யோசிக்கும் போது அதற்கான நல்ல தீர்வுக் கிடைக்கும். நிலம் வாங்க வேண்டும் என்று நினைப்பவர்கள், ரியல் எஸ்டேட் தொழில் செய்பவர்கள் இந்த இடத்தில்அமர்ந்து சிந்திக்கும் போது நல்ல யோசனைகளும் பிறக்கும். பொதுவாக தெற்கு திசையில் அமர்ந்து வடக்கு திசையை பார்த்த மாதிரியான ஆபிஸ், வியாபாரம் செய்யக்கூடிய இடம் எதுவாக இருந்தாலும் நல்ல முன்னேற்றமும், வியாபாரமும் நடக்கும் என்று சொல்லப்படுகிறது.
5. தென்கிழக்கு திசை சந்திர பகவானைக் குறிக்கிறது. திருமணம் நடக்க, கணவன் மனைவிக்குள் ஒற்றுமை, மகிழ்ச்சி ஏற்பட தென்கிழக்கு திசையே சரியான இடம் என்று சொல்லப்படுகிறது. கணவன் மனைவிக்குள் பிரச்னை ஏற்பட்டால், இந்த திசையில் அமர்ந்து பேசினால் அது சரியாகக்கூடிய வாய்ப்புகள் அதிகம். கணவன் மனைவி இந்த திசையில் இருப்பதின் மூலமாக அவர்களின் உறவு மென்மேலும் வளரும் என்று சொல்லப்படுகிறது.
6. வடகிழக்கு திசை புதன் பகவானுக்கு உரியது. இங்கே படிக்கும் குழந்தைகளுக்கு, ஆராய்ச்சி செய்பவர்களுக்கு போன்றவர்கள் இருக்கும் போது தங்கள் வேலையில் நன்றாக கவனம் செலுத்த முடியும். வடகிழக்கு திசையில் அதிகமாக பாரம் வைக்கக்கூடாது.
7. தென்மேற்கு திசை ராகுவுக்கு உரிய திசையாக சொல்லப்படுகிறது. இந்த திசையில் அதிக கனமான பொருட்களை வைக்கலாம்.
8. வடமேற்கு திசை கேதுக்கு உரிய திசையாகும். பிரச்னைகளில் இருந்து வெளிவர இந்த திசையில் இருந்து யோசித்தால் நல்ல தீர்வுக் கிடைக்கும்.